' பாடசாலை இடை விலகலைத் தவிர்ப்போம்' மாணவர்களின் விழிப்பூட்டல் ஊர்வலம் (படங்கள்)
அனா
பாடசாலை செல்லும் மாணவர்களின் இடை விலகலைத் தவிர்க்கும் நோக்கில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் யுனிசெப் நிறுவனத்தின் அனுசரனையில் பிரதேசம் தோரும் விழிப்பூட்டல் ஊர்வலத்தினை நாடாத்தி வருகின்றது.
அதன் அடிப்படையில் இன்று (24.09.2012) காலை ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலக பிரிவிற்குற்பட்ட வாழைச்சேனை அந்நூர் தேசியபாடசாலை மற்றும் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியால மாணவர்களினால் 'இடை விலகலைத் தவிர்ப்போம்' எனும் தொனிப் பொருளில் விழிப்பூட்டல் ஊர்வலம் இடம் பெற்றது.
ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி எம்.சுபைர் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான், ஆசிரிய ஆலோசகர் எம்.பி.கான், ஆயிஷா மகளிர் மகா வித்தியால அதிபர் எம்.ரீ.எம்.பரீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பமான ஊர்வலம் வாழைச்சேனை ஆலிம் வீதி, பிரதான வீதி, ஜூம்ஆப் பள்ளிவாயல் வீதி வழியாக பாடசாலையை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது பாடசாலை இடை விலகலைத் தவிர்ப்போம் எனும் கருப் பொருளிலான துண்டுப் பிரசுரம் பொது மக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.
Post a Comment