Header Ads



இறைவன் படைப்பின் அற்புதம்..!



கடலில் 10 லட்சம் புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையை சேர்ந்த இந்த நுண்ணுயிர்கள் இது வரை கண்டறியப்படாதவை. ஆய்வின் போது 150 அடி நீளமுள்ள அரிய உயிரினம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

பிரான்ஸ் நாட்டின் ஆய்வு கப்பல் டரா, உலகம் முழுவதும் கடலில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஆய்வுக்காக அட்லாண்டிக பசிபிக், சதர்ன் மற்றும் வங்காள விரிகுடா கடலில் இதுவரை சுமார் ஒரு லட்சத்து 12,654 கி.மீ. பயணத்தை நிறைவு செய்துள்ளது. ஆய்வுக் குழுவினர் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஆய்வுக் குழுவின் தலைவர் க்ரிஸ் பவுலர் இதுகுறித்து கூறியதாவது,

ஆய்வுத் தொடக்கத்தில் 5 லட்சம் புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்படலாம் என்று கருதப்பட்டது. அதுவே எங்கள் இலக்காகவும் இருந்தது. ஆனால், 3 ஆண்டு ஆய்வில் 10 லட்சம் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் சிபோனோபோர் எனப்படும் வளைந்து நெளிந்த குழாய் போன்ற வடிவத்தில் சுமார் 150 அடி நீளத்தில் அரிய உயிரினம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரினம்தான் உலகிலேயே அதிக நீளம் உள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதர நுண்ணுயிர்களில் பெரும்பாலானவை ப்ளாங்க்டன் எனப்படும் நீரின் மேல் மிதக்கும் வகையை சேர்ந்தவை. புதிய மற்றும் பழைய கடல்வாழ் உயிரினங்களையும் சேர்த்து இந்த கண்டுபிடிப்பு 15 லட்சத்தை தாண்டும். ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரிய உயிரினங்கள் லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு க்ரிஸ் பவுலர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.