ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி
“சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே” என்ற தொனிப் பொருளை அர்த்தபுஷ்டியாக்குவதற்கு அரசுக்கு பெரும் பணிகளை மேற்கொள்ளக் கிடைத்தமை தொடர்பாக தாம் மகிழ்வு கொள்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு இவ்வருட சர்வதேச சிறுவர் தினத்தில் ஒன்றுபடுமாறு வயது வந்தவர்களைத் தாம் கேட்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எமது நாட்டின் சிறுவர்களை மேம்படுத்த எம்முன் பொறுப்பான பணி உள்ளது.
பயங்கரவாதத்தால் நாடு இருளில் மூழ்கி இருந்தது. அந்த இருண்ட யுகத்தை பூர்த்தி செய்வதற்கு தியாகபூர்வமாகப் பணியாற்றியமை அதற்காக மேற்கொள்ளப்பட்ட பெறுமதியான நடவடிக்கை ஆகும். குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே அபிவிருத்தி வேகமடைந்துள்ளது. புதிய விமான நிலையம், அதிவேக பாதை துறைமுகம் எல்லாம் தீர்மானம் பெறுகின்றன.
குழந்தைகளின் பாதுகாப்புக்கும் புதிய சட்டவாக்கங்களும் நெறிப்படுத்தப்படுகின்றன. சகல பிள்ளைகளின் ஆளுமைகளைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும். வயது வந்தவர்கள் சிறுவர்களின் அபிலாஷைகள், எண்ணக் கருக்கள், விருப்பு பொறுப்புக்கள், தேவைகள் தொடர்பாக தெளிவுடன் பணியாற்ற வேண்டும். சிறுவர் ஆளுமையை உருவாக்க இருக்கும் பெறுமதிமிக்க செல்வம் அன்பாகும்.
அந்த அன்வை குறைவின்றி நாம் பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். சர்வதேச சிறுவர் தினத்தை ஒட்டிய தமது செய்தியில் இவ்வாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.
Post a Comment