ஹரீஸின் பிரதி அமைச்சர் கனவுக்காக ஜமீலின் அமைச்சுப்பதவி அடகு வைக்கப்பட்டதா?
அபு ஷரீன்
கடந்த எட்டாம் திகதி இடம்பெற்ற இடம்பெற்ற மாகாண சபை தேர்தல்களின் போது அதிகம் பேசப்பட்ட மாகாணம் என்றால் கிழக்கு மாகாணம் தான். இந்த மாகாண சபைத்தேர்தலின் ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. இந்த அமர்க்களம் இன்றுவரை நீடித்துச்செல்கின்றது. கிழக்கு தேர்தலில் அதிகம் பேசப்பட்ட ஏன் ஏசப்பட்ட கட்சி என்றால் அது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தான். அரசுடன் இணைந்து கேட்பதா? அல்லது தனித்துக்கேட்பதா? என்ற கேள்வி வந்தபோது ஆரம்பத்தில் அரசுடன் இணைந்து தேர்தலில் குதிப்பதற்கான முஸ்தீபுகளே இடம்பெற்றன. இதற்க்கு பாரளமன்ற உறுப்பினர் ஹரீஸ் அரசாங்கத்துடன் வைத்து இருந்த இரகசிய தொடர்பும் அரசுடன் இணைந்து செல்லா விட்டால் வேறு சில முஸ்லீம் காங்கிரசின் உறுப்பினர்கள் அரசுடன் ஒட்டி விடுவார்கள் என்ற பயமுமே காரணமாக அமைந்தது.
காலப்போக்கில் இயற்கையாகவே அரசாங்கத்தை விரும்பாத ஹக்கீம் பிரதி நிதித்துவம் என்ற மாயையைக்காட்டி கிழக்கு தேர்தலில் தனித்து போட்டியிட கடைசு நேரத்தில் முடிவெடுத்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டனர்.
இந்தத்தேர்தலில் வெற்றியடைவதர்க்காக முஸ்லீம் காங்கிரசுக்கு பள்ளிவாசல்களை உடைக்கின்றார்கள் என்ற கோசம் உறுதுணையாக அமைந்தது இதன்காரணமாக மக்கள் சுமார் 132000 வாக்குகளை கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் காங்கிரசுக்கு வழங்கியதன் ஊடாக அவர்கள் 7 ஆசனங்களைப்பெற்று கிழக்கின் தீர்மானிக்கும் சக்தியாக உருவாகினர்.
தீர்மானிக்கும் என்ற சக்தியை தன்னகத்தே வைத்திருந்த முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் பலசுற்று பேச்சு வார்த்தைகளை நடாத்தியது. இதன்போது பல உறுதிப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இவைகளை அரசு நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முஸ்லீம் காங்கிரசின் கனவுகளின் ஒன்றான முதலமைச்சர் கனவை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறைவேற்ற முன்வந்த போதும் ஏதோ காரனம்களைக்காட்டி கூட்டமைப்புடன் ஆனா இணக்கப்பாட்டை ஏற்படுத்த முஸ்லீம் காங்கிரஸ் முட்படவில்லை. முஸ்லீம் காங்கிரஸ் தமிழ் கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி இருந்தால் சர்வதேசம் சர்வ தேசத்தின் ஆசீர்வாதத்துடன் சமூக ஒற்றுமையை நிலை நாட்டுவதுடன் பாரிய அபிவிருத்திகளையும் செய்திருக்க முடியும். ஏன் முஸ்லீம் காங்கிரசின் கனவான முதலமைச்சர் அந்தஸ்த்தையும் பெற்றிருக்க முடியும். முதலமைச்சர் அந்தஸ்த்து ஹக்கீம் தவிர்ந்த வேறு ஒருவருக்கு வழங்கப்படுமானால் அது எதிர்காலத்தில் தனது தலைமைத்துவத்துக்கு சவாலாய் அமைந்து விடும் என்பதற்காக முதலமைச்சரைபெறுவதில் ஹக்கீம் பெரிதும் அக்கறை காட்ட வில்லை. இதனால் தான் என்ன விலை கொடுத்தாலும் கிழக்கின் ஆட்சியை நிறுவ வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த அரசுக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதில் தடை இருந்திருக்காது. தனது தலைமைத்துவத்துக்கு சவாலாக எந்த நியமனத்தையும் வழங்க ஹக்கீம் அனுமதிக்க மாட்டார் என்பது யாரும் அறிந்த உண்மையாகும்.
இன்று முஸ்லீம் காங்கிரசுக்கு வழங்கப்பட்ட மாகாண அமைச்சுப்பதவிகளை பங்கிடும் பனி முடிவடைந்துள்ளது. இதிலும் தில்லு முல்லுக்கள் இடம்பெற்றுள்ளதாக பேசப்படுகின்றன. முஸ்லீம் காங்கிரசார் தங்களிடம் தீர்மானிக்கும் சக்தி இருக்கின்றது என்று மார்தட்டிய போதும் அதவுல்லாவின் தேவை சத்தமில்லாமல் நிறைவேறியுள்ளது. ரிசத்தின் பிரதியமைச்சர் பதவியும் கிடைக்க உள்ளது. இங்கு முஸ்லீம் காங்கிரசின் தீர்மானிக்கும் சக்தி வலுவிழந்துள்ளது. இவர்களது கோரிக்கைகள் எதிர்காலத்தில் வலுவிளக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
சகோதர ஊடகம் ஒன்றில் தங்களுக்கு அமைச்சுப்பதவிகளை கோர வில்லை என்று ஹக்கீம் கூறியுள்ளபோதும் எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது ஹக்கீமுடைய அமைச்சுப்பதவி மாற்றமடைவதுடன் தவிசாளருக்கு பொறுப்பு வாய்ந்த அமைச்சும் ஏனைய பைசால் காசிம், ஹரீஸ் போன்றோருக்கு பிரதியமைச்சர் பதவிகளும் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் ஆரம்பமாகவே கல்முனையில் உள்ள ஹரீசுக்கு பிரதி அமைச்சர் பதவியை கோருவது என்றால் ஜெமீல் அமைச்சராகக்கூடாது என்ற அடிப்படையில் தான் தடுக்கப்பட்டுள்ளார். இதற்க்கு ஜமீலின் அரசியல் விரோதியான மேயர் சிராசையும் மஜீத் போன்றோரையும் துணைக்கு அழைத்துள்ளார்.
கடந்த பல வருடங்களாக மேயராக பாராளுமன்ற உறுப்பினராக ஹரீஸ் இருக்கின்ற போதும் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய எந்த அபிவிருத்தியையும் செய்ய வில்லை. ஹரீஸின் இன்னொரு அரசியல் எதிரியான ஜாவத்தை தேர்தலில் திட்டமிட்டு தோற்கடித்த ஹரீஸ் மாகாண அமைச்சர் பங்கீட்டின் போது ஜமீலை தடுத்துள்ளார் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
iruwerum uyer pede urupenerkel thane
ReplyDelete