சீனாவின் திருட்டுக்கு உதவிய இலங்கை - ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்
திருட்டுத்தனமாக மிதிவண்டிகளை அனுப்புவதற்கு சீனாவுக்கு உதவியதற்கு ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சீனத் தயாரிப்பு மிதிவண்டிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 48.5 வீத தீர்வை மற்றும் வரிகளை விதித்து வருகிறது.
இந்த வரிகளில் இருந்து தப்பிக் கொள்வதற்காக சீனா, சிறிலங்காவைப் பயன்படுத்தி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் இருந்து மிதிவண்டிகளை ஏற்றுமதி செய்வது போன்று காட்டி சீனா திருட்டுத்தனமாக தமது மிதிவண்டிகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அனுப்பி வந்தது. சிறிலங்காவின் துணையுடன் இடம்பெற்றுள்ள இந்த மோசடியை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்துள்ளதை அடுத்தே, சிறிலங்கா அரசுக்கு முறைப்படி கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசெல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறிலங்காவின் தூதுவரிடம், ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக பணிப்பாளர் இந்தக் கண்டனத்தை கையளித்துள்ளார். எனினும் இதற்கு சிறிலங்கா அரசிடம் இருந்து இன்னமும் எந்தப் பதிலும் வரவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான பிரதிநிதி பேனாட் சவேஜ் தெரிவித்துள்ளார்.
Post a Comment