Header Ads



திருகோணமலையில் மீண்டும் சனத்தொகை கணக்கெடுப்பு..?


gtn

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் தொடர்பான கணக்கெடுப்பின் போது திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளை மீளாய்வு செய்ய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மக்களின் தொகையானது 29 வீதத்தில் இருந்து 33 வீதமாக வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இது குறித்து மீளாய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அதிகாரிகள் அந்த மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் மக்கள் தொகை தொடர்பான சரியான புள்ளிவிபரங்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், 2011 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை தொடர்பான முழுமையான விபரம் வெளியிடப்படும் என திணைக்களம் கூறியுள்ளது. 

1 comment:

  1. திருகோணமலை மாவட்டத்தின் 2007 ம் ஆண்டு கணக்கெடுப்பின் உத்தியோகபூர்வ வெளியீட்டு அறிக்கையின் படி முஸ்லிங்கள் 45 .4 % காணப்படுகிறார்கள். இப்போ அது பிழை. குறைவு ஏற்பட்டுள்ளது என்று சொல்லப் போகிறார்களோ? 1871 ல் எழுத்துக்கணக்கு கூட்டியாவது உரிய காலத்தில் சனத்தொகை விகிதாசார அளவு வெளியிடப்பட்டது. இவ்வளவு இலத்திரனியல் தொழில்நுட்பம் இருந்தும் இன்னும் இன விகிதாசார அளவு வெளியிடப்படவில்லை. என்ன மர்மம் உள்ளதோ? இதைப்பற்றி எவரும் கேட்பது கூட இல்லை போலும்.
    இந்த link cliclk பண்ணி 2007 உத்தியோகபூர்வ அறிக்கையை பார்க்கவும்.
    www.statistics.gov.lk/PopHouSat/Preliminary Reports Special Enumeration 2007/Basic Population Information on Trincomalee District 2007.pdf

    ReplyDelete

Powered by Blogger.