யாழ்ப்பாணத்தில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு வர்த்தக சந்தை
MSJ
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஊக்குவிக்கும் முகமாக வருகிற ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு வர்த்தக சந்தை ஒன்றை நடத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வியாபாரத்துக்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் மீளக்குடியேற்றத்தை ஊக்குவிக்க முடியும் என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இவ்வாறானதொரு திட்டத்துக்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சந்தை சோனகதெருவின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக நடத்தப்படுவதுடன் 15 தொடக்கம் முப்பது நாட்களுக்கு இந்த வர்த்தக சந்தையை தொடர்ந்து நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. நடைபாதையோர வியாபாரத்தை ஒத்ததாக இந்தச் சந்தை அமையும். இதில் உடுபுடவைகள், தைத்த ஆடைகள், சிறுவர் பெரியவர்களுக்கான ஆடைகள், பெண்களுக்கான சல்வார்கள் சாரிகள், ஆண், பெண், சிறுவர்களுக்கான செருப்புகள் மற்றும் காலணிகள், சோப்பு, சீப்பு, கண்ணாடிகள், சிறுவர் விளையாட்டுப் பொருட்கள், அன்பளிப்பு பொருட்கள், சிற்றூண்டிச் சாலைகள், சாப்பாட்டுக் கடைகள், குளிர்பானக் கடைகள், பிளாஸ்ரிக் பொருட்கள், மற்பாண்டங்கள் உள்ளடங்களாக ஏராளமான பொருட்களை விற்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த சந்தையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வியாபாரிகளுடன் வெளியூர் முஸ்லிம்களும் கலந்து கொள்வார்கள். எனவே மேற்படி வர்த்தக சந்தையில் கடைகளை பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் கீழே தரப்படும் கைத்தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். யாழ்ப்பாண முஸ்லிம்கள் எல்லோரும் இந்த வர்த்தக சந்தைக்கான ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த வர்த்தக சந்தையை எவ்வாறு நடத்தலாம் என்ற நல்ல ஆலோசனைகளை கூற விரும்புபவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு தங்கள் விபரங்களை தெரிவிக்கவும். வெகுவிரைவில் இது சம்பந்தமான கூட்டமொன்று இடம்பெறும். அக்கூட்டத்தில் தாங்களும் கலந்து தமது ஆலோசனைகளை கூற முடியும்.
ஏற்பாட்டுக்குழு
தொலைபேசி: 0774457416
Good idea allah will help you, this want to call osmaniya village,
ReplyDelete