பேஸ்புக்கில் உங்களைப் பற்றி உளவுபார்க்கும் தொழில் நிறுவனங்கள்
உலகில் பெரும்பாலான நிறுவனங்கள், வேலை வாய்ப்பு அளிக்கும் அமைப்புகள் தற்போது வேலைக்குச் சேரும் பணியாளர்களைப் பற்றி அறிந்துகொள்ள சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர், லிங்க்ட்இன் முதலிய தளங்களைப் பார்வையிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
காரணம், பெரும்பாலான பணியாளர்களும், வேலை தேடுவோரும் ஏதாவது ஒரு சமூக வலைத்தளத்தில் தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்து விடுகின்றனர். அவற்றின் பின்னணி பற்றி அவர்கள் அவ்வளவாகக் கவலை கொள்வதில்லை. தங்கள் எண்ணங்களை எவ்வித கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக வெளிப்படுத்தும் இடமாக ஃபேஸ்புக், டிவிட்டரைக் கருதுகின்றனர். ஆனால், இவற்றில் பதியப்படும் கருத்துகள், பல்வேறு தேடல் இயந்திரங்களில் பதியப்பட்டு, ஏதாவது சில சர்வர்களில் தேக்கப்படுகின்றன அல்லது மீட்டெடுப்பு செய்யப்படுகின்றன.
எனவே பலரும் ஏதாவது தகவல்களைப் பதிவு செய்துவிட்டு, பின்னாளில் அவற்றை சமூக வலைத்தளங்களின் பக்கங்களில் இருந்து நீக்கி விட்டாலும், நீக்கப்பட்ட தகவல்கள் ஏற்கெனவே வேறு தளங்களில் அமர்ந்து கொண்டிருப்பதை அறியாமல் உள்ளார்கள். இவ்வாறு கூறுகிறார் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த நவுஜ் மென்பொருள் நிறுவனத்தின் டேவிட் வில்சன்.
இந்த நிறுவனம் அண்மையில் ஒரு சர்வே நடத்தியது. அதில், கூகுள் தேடல் மூலம் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் தகவல்களைத் தேடியதில், 74 சதவீதம் லிங்க்ட்இன், 23 சதம் ஃபேஸ்புக், 3 சதம் டிவிட்டர் ஆகியவற்றில் கணக்குகளை வைத்துக் கொண்டு தகவல்களை வெளியிட்டு வருவது தெரியவந்தது. இவற்றின் மூலம், வேலை தேடுவோரின் ரகசியங்கள், பின்னணி, கிரிமினல் செயல்கள், குற்ற விவரங்கள், மனநிலை ஆகியவற்றை வேலை தருவோர் தெரிந்து கொள்கின்றனர். இவை பல நேரங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் கைகொடுக்கிறது என்கிறார் டேவிட்.
Post a Comment