Header Ads



மு.கா. தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்திருந்தால் அது தற்கொலைக்கு ஒப்பானது


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்கூட்டமைப்பை ஆதரித்திருந்தால் அது வரலாற்றுத்தவறாகவும் அதேவேளை தற்கொலைக்கு ஒப்பானதாகவும் அமைந்திருக்கும் இவ்வாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதித்தலைவரும் அம்பாறை மாவட்ட தலைவருமான மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா தெரிவித்தார்.

அண்மைக்காலமாக ஊடகங்களில் மு.கா.வுக்கு எதிரான பிரச்சாரங்கள் பரவலாக முடுக்கிவிடப்பட்டிருப்பதனைக் கண்டித்து அவர் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆட்சியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக மு.கா. திழ்ந்ததில் சகல முஸ்லிம்களுக்கும் பெருமை. ஆதலால் மிகவும் கவனமாக சிந்திக்கவேண்டிய கட்டத்தில் மு.கா வும் தலைமையும் இருந்தது. மு.கா.வுக்கு ஆட்சியமைக்க இரு வழிகள் இருந்தன.

1. அரசாங்கத்துடன சேர்ந்த ஆட்சி அமைப்பது.

2.தமிழக் கூட்டமைப்புடன் சேர்ந்து அமைப்பது.

தமிழர் கூட்டமைப்புடன் ஆட்சிக்கு போனால் முகா.முதலமைச்சர் வந்திருக்கலாம். ஆனால் அதற்கு பின்னர் பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டி வந்திருக்கும். அது மு.கா.வின் முடிவாகவும் இருந்திருக்கும். மு.கா.வை நோக்கி புலிகள் புலிகள் எனக் கூக்குரலிடுவோருக்கு அது சாதகமாக அமைந்திருக்கும். கூடவே முஸ்லிம்களிடமிருந்து மு.கா.வை ஓரம் கட்டவும் முடிந்திருக்கும்.

ஆக ஏழு பேருடன் தமிழர் தரப்புடன் போகின்றபோது அவர்களின் அத்தனை செயற்பாடுகளுக்கும் செவிசாய்க்க வேண்டிய சூழ்நிலை வந்திருக்கும்.

• உதாரணமாக முஸ்லிம் மக்கள் விரும்பாத வட-கிழக்கு இணைப்புக்கு ஆதரவு நல்க வேண்டிவந்திருக்கும்.

• ஜெனீவா சென்று மத்திய அரசுக்கு எதிரா செயற்பட வேண்டிவந்திருக்கும்.

• தமிழ்க்கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தும் முகவராகச் செயற்படவேண்டி வந்திருக்கும்.

இதனை புலிகளின் காயங்களால் ஆறாது இன்னும் நொந்துபோயுள்ள முஸ்லிம் சமுகம் அங்கீகரிக்குமா? புத்தளம் மக்களிடம் செல்ல முடியுமா? எனவே கூட்டமைப்புடன் சேராமல் விட்டது சாணக்கியமான செற்பாடாகும். மத்தியில் ஆட்சியிலுள்ள அரசைப் புறந்தள்ளிட்டு தமிழ்த்தரப்புடன் கூட்டுவைப்பதற்கு இதுவல்ல தருணம். அதற்கு இன்னும் காலம் கனியவில்லை. அவசரப்பட்டு முடிவெடுப்பதால் கட்சிக்கு மாத்திரமல்ல முழு முஸ்லிம் சமுகத்திற்கும் கேடு விளையுமென்பது எனது கருத்தாகும்.

தமிழ் ஊடகங்களும் நிதானமாக இந்த விடயத்தில நடந்துகொள்ள வேண்டும்.தாறுமாறாக மனம்போன போக்கில் எல்லாம் எழுத முற்படக் கூடாது என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.



7 comments:

  1. True.. Vimarsikka mattum therindavarhalukku sindikke eadhu time.

    ReplyDelete
  2. மாஸாஅல்லாஹ் உலமாக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள் இனி முஸ்லிம் சமூகம் நிமிர்ந்து நிற்கும் எந்த மீடியாவும் நமக்கு தேவையில்லை மிம்பர்கள் போதும்

    ReplyDelete
  3. இதே மவ்லவி மஹிந்தவுக்கு ஆதரவளிக்க உங்களுக்கு வெட்கமில்லையா என ஒரு காலத்தில் உலமா கட்சியை பார்த்து கேட்டார். இன்று இவர் அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார்.

    ReplyDelete
  4. அரசாங்கத்தை தேர்தலின் போது பலமாக மூ கா எதிர்த போது இந்த ஞானம் எங்கே போனது. அப்படியானால் கிழக்கு சபையில் அரசாங்கத்தையோ தமிழ் கூட்டமைப்பையோ ஆதரிக்காத நடு நிலையை கையாண்டிருக்கலமே. ஐ தே க இருப்பது போல். அரசாங்கத்துடன் சேர்ந்தது அல்ல பிரச்சினை. பள்ளிகளை உடைக்கும் அரசுக்கு வாக்களிக்க கூடாது என்று மக்களிடம் கூறிவிட்டு இப்போது அதே அரசாங்கத்திடம் நக்கு தின்பது ஏன் என்பதுதான் கேள்வி - முபாறக்

    ReplyDelete
  5. Masha allah...sariyana karuththu.SLMC 7 seat udan TNA itku senru,avarkal solvathetkellam aama podamudiyathu.Iniyawathu tamil uudakankal adakki vasipparkal enru ennukinren.

    ReplyDelete
  6. Kaalam kadantha ghanam Ayya !

    ReplyDelete
  7. அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபையின் பிரதி தலைவரான தாங்கள் விட்டுள்ள அறிக்கை கவலைத் தருகின்றது.ஏனெில் இந்த மு.கா.உட்பட அமைச்சர் றிசாத்,அதாவுல்லா உள்ளிட்டவர்களை ஒன்று சேர்த்து தனித்துவமான முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெறுவதற்கு அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா,எடுத்த முயற்சிகளை துவம்சம் செய்தது இந்த முஸ்லிம் காங்கிரஸ் என்பதை மறைப்பதற்காகவும்,அவர்களின் பதவிகளுக்கு தாங்கள் சோரம் போயுள்ளதையும் அறிய முடிகின்றது.
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தவுக்கு எதிராக செயற்பட வேண்டும் என்பதிலும்,தமிழ் கூட்டுடன் சேர வேண்டும் என்பதாகவும் தேர்தல் காலங்களில் தாங்கள் செய்த பிரசாரங்கள் ஆதாரங்களாக உண்டு,இன்று தகுதியுள்ள கிழக்கை பாதுகாக்கக் கூடிய ஒரு முஸ்லிம் முதலமைச்சரை இழப்பதற்கு காரணமானவர்கள் மு.காவினர்.அதை விட ஒரு உலமா,அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமாவி்ன் பிரதி தலைவர் ஆகிய நீங்கள் மு.கா.வின் செயலை நியாயப்படுத்தவது இந்த முஸ்லிம் சமூகத்துக்கு செய்த பெரும் அநியாயமாகும்.
    இவ்வுலகில் அல்லாஹ்வின் பிடியில் இருந்து தப்பித்தாலும்,மறுமையில் அதனது தண்டனை நிச்சயம் கிடைக்கும்,.இனி மேலும் அல்லாவுக்காக அரசியல் கட்சிக்கு கூஜா துாக்க விரும்பினால்,ஆதம்பாவாக நின்று செயற்படலாம்.
    அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா தலைவர் அவர்களும்,உறுப்பினர்களும் இந்த அதம்பாவா குறித்த தீர்க்கமான மடிவை எடுக்க வேண்டும் உலமாக்கள் சத்தியத்தின் பால் நிற்க வேண்டும்.பிரதி தலைவர் ஆதம்பாவா எந்த வகையிலும் அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமாவுக்கு பொறுத்தமானவர் அல்ல.அடுத்த பதவி தலைமையாகும் அவ்வாறு அதற்கு அவர் நியமிக்கப்பட்டால் முதலில் இந்த அநியாய காரணுக்கு எதிராக வீதியில் இறங்குபவன் நான் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.
    புலிகளின் குரலான தமிழ் கூட்டமைப்பு வளர்வதற்கு இந்த தேர்தல் மூலம் உரமூட்டியவர்கள் மு.கா.வினர்.என்பது வெளிப்படையான உண்மையாகும்.இந்த நிலையில் பிள்ளையும்,கிள்ளவிட்டு தொட்டிலையும் ஆட்டும் அநாகரிகத்தை செய்தவர்களின் பட்டியில் மௌலவி ஆதம்பாவாவும் ஒருவர் என்பதை கவலையுடன் தெரிவிக்க வேண்டியுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.