நெதர்லாந்து இலங்கை தூதரகத்தில் இஸ்லாமிய பிரச்சாரம் (படங்கள்)
தகவல் M H M றியாஸ் LEIDEN HOLLAND
இலங்கையில் இருந்து வருகை ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தந்துள்ள மௌலவி அப்துல் ஹமீட் ஷரஈ பிரான்சிலும் ஜேர்மனியிலும் தனது பிரச்சாரப்பணியை முடித்து விட்டு நேற்று 29 09 2012 சனி நெதர்லாந்தின் இலங்கை தூதுவர் Mr Buddhi Athauda (Democratic Socialist Republic Of sri Lanka) அழைப்பை ஏற்று அவரது தூதரகத்திற்கு சென்றிருந்தார்.
தூதரக ஊளியர்கள் உட்பட அங்கு வாழும் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் இதன்போது சமூகமளித்தனர். மௌலவி அப்துல் ஹமீட் ஷரஈ, இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகத்துடன் தற்காலத்தில் மியன்மாரிலும் இலங்கையிலும் இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பௌத்த மதம் உட்பட எந்த மதமும் அனுமதிக்காத விடயம் எனவும் உண்மையான ஒரு பௌத்தன் உடனடியாக இவ்வாரான நடவடிக்கைகளை நிறுத்வேண்டும் எனவும் குறிப்பிட்டு உரை நிகழ்த்தினார். மேற்படி உரைகள் யாவும் அவ்வப்போது சிங்கள மெழியில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டது நிகழ்ச்சி முடிவில் இஸ்லிமிய முறைப்படி சமைக்கப்பட்ட இராப்போசனத்துடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
தற்கால சூழ்நிலையில் மாற்று மதத்தவர்களுக்கான தஹ்வா பணி மிக முக்கியம்.இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அல்லாஹ் இம்மையிலும்,மறுமையிலும் நன்மைகளை வழங்குவானாக!
ReplyDelete