உத்தம நபியை வார்த்தைகளால் ஊனப்படுத்திவிட முடியாது
ஜெம்ஸித் அஸீஸ்
''துவேஷம் எனும் கார்மேகக் கூட்டத்தை விலக்கிவிட்டு உண்மையெனும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு வரலாற்றாசிரியர்கள், 'முஹம்மத் ஒரு சரித்திர நாயகர்' எனக் கூறுவதோடு மட்டும் நின்றுவிடாது அவருடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னோடுகளில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்''
முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, முழு மனித சமூகத்துக்கும் முன்மாதிரியாக வந்த முஹம்மத் நபியவர்கள் குறித்து இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? அவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை இறைதூதராகப் பின்பற்றும் ஒரு முஸ்லிம் அல்ல. அவர் ஓர் ஐரோப்பியர். கிறிஸ்தவரும் கூட. அவர்தான் 20ஆம் நூற்றாண்டில் Modern Sons of Pharaohs எனும் பிரபலமான நூலை எழுதிய எஸ்.எச். லீடர்.
வரலாற்றில் எஸ்.எச். லீடர் போன்று இஸ்லாத்தை தமது கொள்கையாகப் பின்பற்றாத பலரும் நபியவர்களை ஓர் உத்தமர் என்றே முத்திரை குத்தியிருக்கிறார்கள். ஜவகர்லால் நேரு, வொஷிங்டன் இர்விங், மா மேதை பேர்னாட்ஷா, நெப்போலியன், வில்லியம் மூர், மகாத்மா காந்தி, தோமஸ் கார்லைல், டால்ஸ்டாய், கலைஞர் கருணாநிதி, அ. மார்க்ஸ், மைக்கல் எச்.ஹார்ட்... என நூற்றுக்கணக்கான முஸ்லிமல்லாதவர்களே நபியவர்களின் நன்னடத்தைக்கும் சீரிய தலைமைத்துவத்திற்கும் சான்று பகர்ந்திருக்கிறார்கள். நபியவர்களின் வரலாற்றைப் படித்த மற்றும் பலர் இஸ்லாத்தில் நுழைந்திருக்கிறார்கள்.
முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை இறுதித் தூதராகத் தேர்ந்தெடுத்த இறைவனும் நபியவர்களின் புகழை உலகெங்கும் ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கின்றான்.
முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும் பலர் நபியவர்களைப் புறக்கணித்தனர் கொள்கையை ஏற்க மறுத்தனர். ஆனாலும், அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நல்லவர், வல்லவர் என்பதை ஏற்றுக் கொண்டனர். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைக் கடுமையாக எதிர்த்த அபூ ஜஹ்ல்கூட நபியவர்களைப் பார்த்து, ஷஷநீர் பொய் சொல்கிறீர் என நான் ஒருபோதும் கூற மாட்டேன். ஆனால் உம்மை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது|| என்றே கூறினான். முஹம்மத் நபி அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவரைச் சூழ்ந்திருந்த சமுதாயம் அவரது தனிப்பட்ட, குடும்ப, சமூக, அந்தரங்க வாழ்வில் எவ்விதப் பழிச் சொல்லையும் சொல்லவில்லை. முஹம்மத் ஓர் இரத்த வெறியர் என்றோ பெண்ணாசை பிடித்தவர் என்றோ எந்தச் சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.
நபியவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு சிலர் முஹம்மத் நபி ஒரு பைத்தியக்காரர், மந்திரவாதி, புத்திபேதலித்தவர், சூனியம் செய்பவர் எனக் கூறியபோது இஸ்லாத்தையும் முஹம்மத் நபியவர்களையும் கடுமையாக எதிர்த்த வலீத் பின் முகீரா என்பவர், ஷஷமுஹம்மதிடம் இந்தக் குறை ஏதுமில்லை. இதைச் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். முஹம்மதின் விடயத்தில் வீண்பழி சுமத்தினால் அது பொய்யென்று தெரிந்து விடும்|| எனப் பதிலளித்தபோது நபியவர்களை பொய்யாக விமர்சித்தவர்கள் கடுப்படைந்த நிகழ்வை இஸ்லாமிய வரலாறு பதிந்து வைத்திருக்கிறது. உத்தம நபியை வார்த்தைகளால் ஊனப்படுத்தும் அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது.
இத்தகைய சிறப்புமிக்க முஹம்மத் நபிகளாரையே அமெரிக்காவில் வாழும் ஸியோனிஸ ஏஜன்ட் மட்டரகமாக காட்சிப்படுத்தியிருக்கிறான்.
முஸ்லிமல்லாதவர்களாலேயே சகித்துக் கொள்ள முடியாத இந்த அப்பட்டமான பொய் முஹம்மத் நபியவர்களை தமது உயிரையும் விட நேசிக்கும் முஸ்லிம்களின் உள்ளங்களில் நெருப்பைக் கொட்டியிருக்கிறது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது அன்பு வைப்பது முஸ்லிம்களின் நம்பிக்கையுடன் (ஈமான்) பின்னிப் பிணைந்திருக்கும் அம்சம் என்பதனால் முஸ்லிம்கள் அதற்கெதிராக கொதித்தெழுந்ததில் நியாயமிருக்கிறது. ஆனால், உணர்ச்சிவசப்பட்ட சிலர் வன்முறைகளில் ஈடுபட்டமை இஸ்லாத்துக்குப் புறம்பானது. வன்முறை நன்முறையல்ல என்பதை சொல்லித்தந்த மார்க்கம் இஸ்லாம். முழு மனித வாழ்வுக்கும் வழிகாட்டலைத் தந்துள்ள இஸ்லாம் எதிர்ப்பை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்றும் சொல்லித் தந்திருக்கிறது.
ஒருவர் செய்த குற்றச் செயலுக்காக மற்றnhருவரைத் தண்டிப்பதை, பிறருக்கு இடையூறு விளைவிப்பதை இஸ்லாம் வெறுக்கிறது. அதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. இஸ்லாத்துக்கும் நபியவர்களுக்கும் எதிராக தீயசக்திகள் சூழ்ச்சிசெய்தபோது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதனை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதை இஸ்லாமிய வரலாற்றில் காணலாம்.
நபிகளாரைக் கொச்சைப்படுத்தி கார்டூன் வரைதல், படம் தயாரித்தல் கட்டுரை எழுதுதல்... என்று பல்வேறு வழிமுறையைக் கையாண்டு முஸ்லிம்களின் உணர்வுகளை சீண்டிப் பார்த்து அவர்களை வம்புக்கு இழுத்து கூத்துப் பார்ப்பதே இத்தகைய ஸியோனிஸ ஏஜன்டுகளின் நோக்கம் என்பதே உண்மை. எனவே, அவர்களின் உள்நோக்கத்தைப் புரிந்து அர்களுடன் அறிவியல் ரீதியாக, சிந்தனா ரிதியாக போராடுவதே பொருத்தமானது.
முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றி யார் என்னதான் அபாண்டம் சொன்னாலும் அவரது கண்ணியம் ஒரு துளியளவும் குறைந்துவிடப் போவதில்லை. முஹம்மத் என்றாலே ஷபுகழப்பட்டவர்| என்றுதானே அர்த்தம். அவரது பெயர் கூறப்படும் காலமெல்லாம் அவர் புகழப்பட்டுக் கொண்டே இருப்பார் இவ்வுலகம் அழியும் வரை.
இன்று உலகில் வாழும் 160 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் உள்ளங்களிலும் நபியவர்களின் வாழ்வை முறையாகக் கற்ற நல்ல மக்களின் நெஞ்சங்களிலும் வாழும் முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை, வரலாற்றைத் தேடிக் கற்பதற்கான நல்லதொரு சந்தர்ப்பமாக இதனை எடுத்துக் கொள்வதே நல்லது.
முதலில் முஸ்லிம்கள் நபகளாரின் முழு வாழ்வையும் (ஸீரா) ஆழமாகக் கற்க வேண்டும். அவரை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். அவரது உன்னத பண்பாடுகளை, நல்லொழுக்கங்களை வாழ்வின் அணிகலன்களாகக் கொள்ள வேண்டும். பிறருக்கும் அவரை அறிமுகப்படுத்த வேண்டும். குறிப்பாக, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குடும்ப வாழ்வு, திருமண வாழ்வு, போராட்ட வாழ்வு பற்றி ஆழமாகக் கற்று அவற்றுக்குப் பின்னாலுள்ள யதார்த்தத்தை நபியவர்களின் தாரள மற்றும் தயாளத் தன்மைகளை முஸ்லிமல்லாதவர்களுக்குச் சொல்ல வேண்டும்.
முஸ்லிமல்லாத சகோதரர்களுடன் நபிகளார் மேற்கொண்டிருந்த அற்புதமான உறவை அறியும் எவரும் வியப்பில் ஆழ்ந்து போவர்.
வுhந ர்நசழநள எனும் நூலுக்கு இலக்கியத்திற்கான நோபிள் விருது பெற்ற முஸ்லிமல்லாத எழுத்தாளரும் சிந்தனையாளருமான தோமஸ் கார்லைல் நபியவர்களின் புனிதத் தன்மையை இப்படி நிரூபிக்கிறார்:
ஷஷமுஹம்மத், அவர்மீது அக்கிரமமாகவும் வரம்பு மீறியும் சொல்லப்படுவது போல அவர் சிற்றின்ப ஆசை கொண்டவரல்ல. எளிய உணவு, எளிய உறையுள், எளிய வாழ்க்கை என அனைத்திலும் எளிமையைக் கைக்கொண்டு திருப்தி கொள்ளும் ஒரு துறவியாக வாழ்ந்தார் அவர். பல மாதங்கள் பசியால் வாடியிருக்கிறார்.||
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இரத்த வெறியர் எனச் சொல்லும் அரைவேக்காடுகள், போர்க்களத்தில் அகிம்சையை வலியுறுத்திய முதல் வரலாற்றுத் தலைவர் முஹம்மத் நபியவர்கள் என்பதை மறைத்து விடுகிறார்கள்.
முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் போர் மரபுகளை அறிமுகப்படுத்திய வல்லவர், நல்லவர். போர்க களத்திலும் பெண்கள், சிறுவர், முதியோர், போராட வராது ஆலயங்களிலும் மடங்களிலும் அடைக்கலம் புகுந்திருப்பவர்கள் மற்றும் மதகுருமார்கள் ஆகியோரைக் கொலை செய்யக் கூடாது. யாரிடமும் சண்டையிடுவதற்கு முன்னர் அவர்களிடம் நியாயம் பேச வேண்டும் என்பது மட்டுமல்ல, அநியாயமாக மரங்களை வெட்டக் கூடாது, பயிர்நிலங்களுக்கு தீங்கிழைக்கக் கூடாது என்று நியதி வகுத்து முறையாகப் போராடுமாறு வழிகாட்டியவர் முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.
முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் ஒன்பது யுத்தங்கள் நடைபெற்றன என்பதைச் சொல்லும் வரலாற்றாசிரியர்கள், யுத்தத்தின்போது நபியவர்கள் கடைபிடித்த ஒழுக்க விழுமியங்களை, யுத்த தர்மத்தை திட்டமிட்டு மறைத்து விட்டிருக்கின்றமை வேதனையளிக்கிறது.
முஹம்மத் நபியவர்கள் ஆயுத முனையில் இஸ்லாத்தைப் பரப்பினார் எனக் கூச்சலிடுவோரைப் பார்த்து, முஸ்லிமல்லாத பெரும் எழுத்தாளர் திலாஸி ஒலேரி கூறுவதைக் கவனியுங்கள்.
'ஆயுத பலத்தினால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு முஹம்மத் மக்களை நிர்ப்பந்தித்தார் எனக் கூறுவது சுத்தமான கற்பனையாகும். நகைப்புக்குரியதும் கூட. அது உண்மைக்குப் புறம்பான வாதமாகும்'
முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வரலாற்றை நியாயமாக எடை போடுகின்ற எவரும் அந்த தெளிந்த வரலாற்று நீரோடையில் மூழ்கி முத்தெடுப்பர் என்பதை நேர்மையான வரலாற்றாசிரியர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
இறுதியாக, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கெதிராக மோசமான படம் வெளியிடப்பட்டிருப்பதை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நபியவர்களின் வழிகாட்டலுக்கு முரணாகச் செயற்பட வேண்டாம். அதனை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. அப்படிச் செய்வதனால் நல்லது நடக்கப் போவதில்லை.
முஸ்லிமல்லாத சகோதரர்களே, முழு மனித சமூகத்துக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழும் ஒரு தலைவரின் உண்மையான வரலாற்றைத் தேடிப் படிக்க வேண்டுமென்ற ஆவல் பிறந்திருக்கும் என நம்புகின்றேன்.
Post a Comment