'தேசிய அபிவிருத்திக்காக பிராந்திய ஊடகவியலாளர்களை வலுவூட்டல்' கருத்தரங்கு (படங்கள்)
ஏ.எஸ்.எம்.இர்ஷாத்
தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பின் கொழும்பு கிளை ஏற்பாடு செய்திருந்த 'தேசிய அபிவிருத்திக்காக பிராந்திய ஊடகவியலாளர்களை வலுவூட்டல்' எனும் தலைப்பிலான ஒருநாள் கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை பொரல்லை கரிதாஸ் செடக் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் தேசிய அபிவிருத்தியும் பிரதேச ஊடகமும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் உரைநிகழ்த்துவதையும் சப்மா இலங்கை கிளையின் தலைவர் லக்ஷ்மன் குணசேகர, தேசிய அமைப்பாளர் என்.எம்;.அமீன், சப்மாவின் செயலாளர் அனோமா ராஜகருணா மற்றும் சப்மா-மகளிர் பிரிவின் தலைவி ஷாமிலி பொயிலி ஆகியோர் அருகில் அமர்ந்திருப்பதையும் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களையும் காணலாம்.
Post a Comment