Header Ads



தத்தமது சிம் அட்டைகளை பிறிதொரு நபர்க்கு வழங்க வேண்டாம் - பொலிஸார் கோரிக்கை


sfm

கையடக்க தொலைபேசி சிம் அட்டைகளை பயன்படுத்தி இடம்பெறுகின்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை காவற்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் அஜித் ரோஹன வெளியிட்டுள்ளார்.

கையடக்க தொலைபேசிகளை கொண்டு மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் தொடர்பாக ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிறிதொருவரின் சிம் அட்டைகளை பயன்படுத்தி குற்றச் செயல்கள் நடத்தப்படுவதாக தெரிவித்த காவற்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் அஜித் ரோஹன தத்தமது சிம் அட்டைகளை பிறிதொரு நபர்களுக்கு வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

1 comment:

  1. நமது சிம் அட்டைகளை வேறொருவருக்கு வழங்காமல் இருந்தால் மட்டும் போதாது, நமது பெயரில் வேறு யாராவது சிம் அட்டைகளை எடுத்து பாவிக்கின்றார்களா என்பதனை இலங்கையில் உள்ள ஐந்து தொலைத் தொடர்பு சேவை வழங்கல் நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    நாம் பல்வேறு தேவைகளுக்காக நமது தேசிய அடையாள அட்டை, கடவுச் சீட்டு என்பவற்றை புகைப்படப் பிரதி எடுக்கின்றோம், அதே போன்று பல்வேறு உத்தியோக பூர்வ தேவைகளுக்காக அவற்றை பிறருக்கு வழங்குகின்றோம். இவற்றை முறைகேடாகப் பயன்படுத்தி, இணைப்புக்கள் பெறப்படும் நிகழ்வகளும் நடைபெறுகின்றன.

    நமது தேசிய அடையாள அட்டை, கடவுச் சீட்டு என்பவற்றுக்கு, நாம் பாவிக்காத வேறு எந்தவகை மேலதிக இணைப்புகளும் பாவனையில் இல்லை என்பதனை, இலங்கையில் தற்பொழுது உள்ள சேவை வழங்கல் நிறுவனங்கள் ஐந்தையும் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்வதே பாதுகாப்பானது.

    அதே போன்று, வீதியில் கண்டெடுக்கும் சிம் அட்டைகளை நமது கைத்தொலைபேசியில் இடுவதனையோ, அவற்றை பயன்படுத்தி அழைப்புகள் மேற்கொள்வதையோ ஒருபொழுதுமே மேற்கொள்ளக் கூடாது. அவை குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப் பட்ட பின்னர் தெருவில் வீசப் பட்டவையாக இருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.