காதல் புரளி மூலம் பாகிஸ்தானை பலவீனப்படுத்த சதியாம்
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோ (24). இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக உள்ளார். இவரும் பாகிஸ்தான் வெளியுறவு பெண் மந்திரி ஹினா ரப்பானிகர் (34) என்பவரும் காதலிப்பதாக வங்காள தேசத்தில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதனால், பாகிஸ்தான், முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இவர்கள் காதலிப்பதாக பாகிஸ்தானின் உளவுத்துறையான ‘ஐ.எஸ்.ஐ.’ வங்காள தேச பத்திரிகையின் மூலம் செய்தி வெளியிட்டு வதந்தி பரப்பியதாக இங்கிலாந்து பத்திரிகையான ‘தி டெலிகிராப்’ செய்தி பிரசுரித்தது. இதை பாகிஸ்தான் ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
உளவுத்துறை மீதான இந்த குற்றச்சாட்டு முட்டாள்தனமான நகைப்புக்குரியது. மேலும் அடிப்படை ஆதாரமற்றது. இதுபோன்ற வதந்தியை பரப்புவது உளவுத்துறையின் வேலை அல்ல. இதனால் வெளியுறவு மந்திரிக்கும், உளவுத்துறைக்கும் பிரச்சினை ஏற்படும் என்பது எங்களுக்கு தெரியும்.
இந்த வதந்தி மூலம் பல துறை அதிகாரிகளுக்கு இடையே தவறான எண்ணத்தை உருவாக்கி நாட்டை பலவீனபடுத்த சதி வேலைகள் நடைபெற்றுள்ளன. இதுபோன்று நடப்பது புதிதல்ல என்று ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அறிக்கையை தி டெலிகிராப் பத்திரிகையும் மறுத்துள்ளது. இதுபோன்ற செய்தி வெளியிடுவதற்கு முன்பு நம்பதகுந்த வட்டாரத்தில் உறுதி செய்த பிறகே பிரசுரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
Post a Comment