பாகிஸ்தானில் கிறிஸ்த்தவ சிறுமி குர்ஆன் எரித்த சம்பவம் - சந்தேகத்தில் இமாம் கைது (படங்கள்)
bbc
பாகிஸ்தானில் 14 வயது கிறிஸ்தவச் சிறுமி ஒருவர் குர்-ஆனின்
பக்கங்களை எரித்ததன் மூலம் இஸ்லாத்தை இழிவுபடுத்திவிட்டார் என்று
குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்துவரும் நிலையில், அச்சிறுமி மீது குற்றச்சாட்டு
எழக் காரணமாக இருந்த இஸ்லாமிய மதபோதகர் ஒருவர் ஆதாரத்தை ஜோடித்தார் என்ற
குற்றச்சாட்டின் பேரில் தற்போது கைதாகியிருக்கிறார்.
காலித் ஜாதூன் சிஷ்டி என்ற இந்த மதபோதகர், அந்தப் பெண்ணிடம் இருந்து
எடுக்கப்பட்ட ஒரு பையில் எரிந்த சில காகிதங்களுடன் குர்ஆனின் பக்கங்களையும்
வைத்ததாக சாட்சி ஒருவர் நீதிபதியிடம் கூறியதாகத் தெரிகிறது.
தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறுமி கல்வி கற்பதில் சிரமங்கள் உள்ள ஒருவர் என்றும்
கருதப்படுகிறது. இந்த வழக்கு பெரிய அளவில் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருப்பதால் பாகிஸ்தானின்
கடுமையான மதநிந்தனைச் சட்டங்கள் பற்றி ஒரு விவாதமும் மீண்டும் எழுந்துள்ளது.
இந்த விஷயத்தில் குர்-ஆனின் பக்கங்கள் என்ற ஒரு தடயம் வழக்கின் முக்கிய ஆதாரமாக
அமைந்துள்ளது. அப்படியிருக்கையில் உண்மையைக் கண்டறிவதென்பது நீதிபதிகளுக்கு ஒப்பீட்டளவில்
சுலபம்தான்.
ஆனால் ஒரு சாட்சி ஒன்று சொல்வார் இன்னொரு சாட்சி வேறொன்றை சொல்வார், எதை
நம்புவது எதை விடுப்பது என்ற குழப்பம் நீதிமன்றங்களுக்கு பல சந்தர்ப்பங்களில்
ஏற்படுவதுண்டு.
Post a Comment