ஹக்கீம் லண்டன் பயணம் - அமெரிக்காவும் செல்வார்
நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை (25) காலை பயணமானார்.
உலக முஸ்லிம் தலைமைத்துவப் பேரவை, லண்டன் மேபெயார், டார்மூத் ஹவுஸில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் 'சிறுபான்மை சமூகமொன்றை வழிநடாத்துதல் - ஓர் இலங்கை அனுபவம்' என்ற தொனிப்பொருளில் புதன்கிழமை (26) தலைமைத்துவம் பற்றிய சிறப்புரையை ஆற்றுவார்.
உலக முஸ்லிம் தலைமைத்துவ பேரவை இஸ்லாமிய உலகில் தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் பற்றி அண்மைக்காலமாக கூடுதல் கவனம் செலுத்தி வருவதோடு, முஸ்லிம் உலகிற்கும் மேற்கத்திய நாடுகளுக்குமிடையில் தொடர்பாடலை பொறுத்தவரை ஓர் இணைப்புப் பாலமாகவும் உள்ளது. அதன் ஐரோப்பிய செயலகம் லண்டன் நகரிலும், ஆசியச் செயலகம் மலேஷியாவில் கோலாலம்பூர் நகரிலும் அமைந்துள்ளன.
நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சட்ட ஆலோசனை குழுவின் ஆறாவது அமர்விலும் இலங்கையின் சார்பில் அமைச்சர் ஹக்கீம் கலந்துகொள்ளவுள்ளார். அடுத்த மாதம் ஆறாம் (06) திகதி அவர் நாடு திரும்புவார்.
kilakku pakkam in vara maattare
ReplyDeleteகௌரவ அமைச்சர் ஹகீம் அவர்களே! அமெரிக்க ஏஜண்டுகள் நம்ம நாட்டுல போடுற கூத்துக்களையும் அதனால் இலங்கை எதிர் கொள்ளும் பிரச்சினைகளையும் குறிப்பாக சிறுபாண்மை மக்களான முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் உங்கள் உரையில் சேர்த்துக் கொள்ளலாமே.
ReplyDeleteகுறைந்தபட்சம் யூத நிறுவனங்கள் எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்து இப்போதைய அதிபர் ஒபாமாவை திரிசங்குநிலைக்குத்தள்ள வகுத்திருக்கும் சதித்திட்டத்திற்கு ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களின் கோபத்தையும் ஆத்திரத்தையும் தூண்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் இஸ்லாத்தையும் அவமதித்து வெளியிட்ட அப்பாவிமுஸ்லிம்கள் திரைப்பட்ம ஏற்படுத்திய தாக்கத்தையும் சொல்லுங்கள். அப்போது குறைந்தபட்சம் யூ டியூப்பில் இருந்து அதை நீக்குவதற்கு இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான ஓர் அழுத்தமான கோரிக்கையாக அதை முன்வையுங்கள்.
இங்குள்ள அமெரிக் ஏஜன்டுகளையாவது இனங்கான அது உதவக் கூடும்
அன்புடன்
முஸ்டீன்
லண்டனுக்கும், அமெர்க்காவுக்கும்
ReplyDeleteபறக்குற அண்ணர், யாழ்ப்பாணப் பக்கம் திரும்பிப் பாக்க மாட்டாரே?
He could make better speeches on "How to get ministerial posts?" and "How to keep them?".
ReplyDelete