கண்டி பதியுதீன் மஃமூத் மகளிர் கல்லூரியில் சர்வதேச மொழி தின விழா (படங்கள் இணைப்பு)
இக்பால் அலி
மொழி என்பது சர்வதேச சமூத்துடன் உறவு கொள்வதற்கும் இனங்களுக்கிடையே பரஸ்பர நல்லெண்ணங்களை வளர்த்துக் கொள்வதற்கு பெரும் பாங்காற்றி வருகிறது. சர்வதேச மொழிகளை நன்கு கற்பதன் மூலம் கல்வித்துறையில் மாத்திரமல்ல ஐக்கிய நாடுகள் சபைகள் போன்ற முக்கிய இடங்களில் பணியாற்ற முடியும் என்று கண்டி இந்திய உதவித் தூதுவராயலத்தின் தூதுவர் ஏ. நடராசா தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் ஆதரவில் பிரிட்டிஸ் கவுன்ஸிலின் ஏற்பாட்டில் பாடசாலை மட்டத்தில் சர்வதேச மொழி தின நிகழ்வு கண்டி பதியுதீன் மஃமூத் கல்லூரி மண்டபத்தில் பாடசாலை அதிபர் ருகையா தலைமையில் புதன் கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கண்டி இந்திய உதவித் தூதுவராயலத்தின் தூதுவர் ஏ. நடராசா அங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
சர்வதேச மொழிகளில் ஆங்கிலம், அரபு. பிரான்ஸ், இந்தி ஆகிய மொழிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இந்த மொழிகளை இங்கு கல்வி பயிலும் மாணவிகள் நன்கு கற்று அம் மொழியினூடாக நடாகம், கவிதை, பாடல் போன்ற கலாசார நிகழ்வுகளை நடத்தக் கூடிய வல்லமையை கண்டு அம்மாணவிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று இம் மொழித்துறைக்கு ஆர்வம் காட்டுபவர்கள் அரிதாகவே காணப்படுகிறார்கள். இது சகல பாடசாலைகளிலும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தூதுவர் ஏ. நடராசன் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் மர்ஜான் மாஸ்டர், மத்திய மாகாண முஸ்லிம் கல்விப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் நசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment