Header Ads



கட்டார் நிறுவனங்கள் மீது வைரஸ் தாக்குதல்

கட்டார் நாட்டு எரிவாயு நிறுவனமான 'ரஸ் கேஸ்' இன் இணைய வலையமைப்பினை மர்ம வைரஸ் ஒன்று தாக்கியுள்ளது. ரஸ்கேஸ் நிறுவனமானது இத்தாக்குதல் காரணமாக அதன் காரியாலய கணனிகளை இயக்குவதிலும் சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலகின் மிகப்பெரிய மசகெண்ணெய் நிறுவனமான 'அரம்கோ' வைரஸினால் பாதிக்கப்பட்டு இதேபோன்றதொரு பிரச்சினைக்கு முகங்கொடுத்தது. 'ஷமூன்' என்று இனங்காணப்பட்ட வைரஸே அரம்கோவின் வலையமைப்பினைஜ்; தாக்கியுள்ளதாக கணனி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அத் தாக்குதலுக்கு 'Cutting Sword of Justice ' என்ற ஹெக்கர்களின் குழு உரிமை கோரியிருந்தது. இத்தாக்குதலின் பின்னர் தனது வலையமைப்பினை சரிசெய்துள்ளதாக அரம்கோ தெரிவித்துள்ளது. இந்நிலையிலேயே 'ரஸ் கேஸ்'  நிறுவனத்தின் வலையமைப்பும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனமாக  'ரஸ் கேஸ்'  திகழ்கின்றது. அரம்கோ நிறுவனத்தைத் தாக்கிய 'ஷமூன்' வைரஸே இத்தாக்குதலுக்கும் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
 
சவூதி நாட்டு நிறுவனமான 'அரம்கோ' வின் சுமார் 30,000 கணனிகள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வைரஸினால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இவ்வைரஸ் தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் அல்லது இஸ்ரவேல் இருக்க வாய்ப்புள்ளது, அல்லாஹ்வே அறிந்தவன்.

    ReplyDelete
  2. Proudly Iran vallavanukku vallavanukku vallavan vayyakaththil undu

    ReplyDelete

Powered by Blogger.