முஹம்மது நபி அவமதிப்பு திரைப்படம் - யாழ்ப்பாண மாநகர சபையில் கண்டனம்
இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவில் தயாரித்து வெளியிடப்பட்ட திரைப்படத்தை கண்டித்து யாழ். மாநகர சபையில் கண்டன பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் வியாழக்கிழமை யாழ். மாநகர முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் மாநகர சபை உறுப்பினரான எம்.எம். முஸ்தபா இந்த கண்ட பிரேரணையை சபையில் முன்வைத்தார். இந்த பிரரேணை யாழ். மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த கண்டன பிரேரணையின் பிரதி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளது.
Well done boys
ReplyDeleteதீர்மானம் நிறைவேற்ற்ய யாழில் இருந்து வெளிவரும் மாற்று இணையம் ஒன்று தனது 26 திகதி வெளி இட்ட செய்தியில் "
ReplyDelete"ஹெலிஹ்கப்டரில் வந்து இறங்கிய இஸ்லாமிய இறைதூதர்""என்ற தலையங்கத்தில் ஒரு செய்தியேய்வெளிட்டுள்ளது. யாழ் போறா சமூகத்தின் பெரியாரின்
வருகையெய், இறைதூதர் என்ற வார்த்தையை பயன்படுத்தி கொச்சை படுத்தி உள்ளது.மேலும் யாழ் முஸ்லிம்களுக்கும் போறா சமூகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை பாரிய செலவுடன் வந்தவர்கள் யாழ் முஸ்லிம்களை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளது ஒற்றுமையாக உள்ள இரு சமூகத்தினதும் உறவை விளங்காமல் இட்ட இந்த செய்தி யை ஒன்று திருத்தம் செய்ய வேண்டும் அல்லது வாபஸ் பெறவேண்டும்..