Header Ads



அரசாங்கம் எழுத்துமூலம் உத்தரவாதங்களை வழங்கியுள்ளது - ரவூப் ஹக்கீம் அறிவிப்பு


தேர்தல் முடிந்து பல நாட்களின் பின்னர், முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் கிழக்கு மாகாணசபையில் அரசாங்க கூட்டணி ஆட்சியமைத்துள்ள நிலையில், 'மக்கள் தமக்கு அளித்த அங்கீகாரத்தை அரசாங்கத்தை விட்டுவிலகி எதிரணியோடு சேர்ந்து ஆட்சியமைப்பதற்காக வழங்கிய ஆணையாக கருதக்கூடாது' என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறியுள்ளது.

அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டே தமது மக்களின் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக மக்கள் வழங்கிய ஆணையே அது என்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிபிசி யிடம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைக்கான முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகளில் முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்குவது, மாகாணசபையின் அமைச்சரவையில் இரண்டு அமைச்சுப் பதவிகளை வழங்குவது ஆகிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் எழுத்துமூலம் உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறினார்.

இதுதவிர, கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் நீண்டகாலமாக நிலவும் நிர்வாக ரீதியான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் அரச தரப்புடன் உடன்பாடு காணப்பட்டதாகவும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார். இதேவேளை, மத்திய அரசாங்கத்தில் எந்தப் பதவிகளுக்காகவும் தாங்கள் பேரம்பேசவில்லை என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறினார்.






3 comments:

  1. நீதி அமைச்சரால் அல்லது இந்த முஸ்லிம் அரச ஆதரவு தலைமைகளால் பள்ளி உடைத்த அல்லது தாக்கிய ஒரு குண்டரை தண்டிக்க முடிந்து இருகிறதா ?????
    தேர்தல் பிரசார காலத்தில் அரசில் இருந்து போராட வாக்கு கேட்டதாக சொல்லும் ஹக்கீம் எந்த தேர்தல் மேடையில் அதனை சொன்னார் ?????? அரசுக்கு எதிரான மக்கள் ஆணையை தங்கள் வசதிக்கு ஏற்ற மாதிரி பேசும் போகிரிதனம் இது .....

    ReplyDelete
  2. ஹக்கீம் சார், இத்த வரையில் பேரினவாத ஆட்சியாளர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறிதிகள் எவ்வளவோ நிறைவேற்றப்படாமல் சிறுபான்மை மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பது கடந்தகால வரலாறு, இது சாதாரண மக்களுக்கும் தெரிந்த விடயம்..!!! எனவே நீங்கள் மேலே கூறிய விடயங்கள் நிறைவேற்றப்படுவதட்கான ஒரு கால நேர அட்டவணை உங்களால் கூற முடியுமா ?? அந்த கால நேர அட்டவணைக்குள் மேற்கூறியவை நிறைவேறாவிட்டால் நீங்கள் அரசுக்கு கொடுக்கும் ஆதரவை விளக்கிக் கொண்டு எதிரணியில் உட்காருவோம் என்று உங்களால் கூற முடியுமா???

    மேற்கூறியவை ஒன்றும் நிறைவேறாது இது ஒரு கண்துடைப்பு , பணத்துக்கும் பதவிக்குமே நீங்களும் உங்கள் அடிவருடிகளும் அரசாங்கத்துடன் சேர்ந்துள்ளீர்கள் என்று கூறுபவர்களுக்கான உங்கள் பதில் என்ன???

    ReplyDelete
  3. ஆரோக்கயமான தகவலுக்கு ஜப்னாமுஸ்லிம் தளத்துக்கு நன்றி

    ReplyDelete

Powered by Blogger.