நோன்பு பிடித்திருந்த ஆசிரியர் உயிருடன் புதைத்துக் கொலை - பிபிலையில் அகோரம்
மொனராகலை மாவட்டம் பிபிலை தொகுதியில் பகினிகஹவேல எனும் 700 குடும்பங்கள் வசிக்கும் அவ்வூரில் நோன்பு இருபத்தி இரண்டாம் நாள்.
அனைவரும் பெருநாள் துணிமணி வாங்கும் குதூகலத்தில் இருந்தனர். குறித்த ஊரைச் சார்ந்த பாரிஸ் ஆசிரியர் (36 வயது ) பக்கத்து ஊரான கணுல்வேல முஸ்லிம் பாடசாலையில் சுமாராக பத்து வருடங்கள் கடமை புரிகின்றார்.
இவர் ஏழ்மையில் காரணமாக பகுதி நேர வியாபாரமாக மாடுகளை கொள்வனவு செய்து வியாபாரம் செய்து வந்தார். இப்படி இருக்கையில் குறித்த ஆசிரயர் சகோதர இனத்தவருக்கு மூன்றரை இலட்சம் ரூபாய் கொடுத்துள்ளார் . அவருமோ மாடுகளை தருவதாக கூறி ஆறு மாதங்கள் ஏமாற்றி விட்டார் .
நோன்பு இருபத்தி இரண்டாம் நாள் குறித்த சிங்கள நபர் மொனராகலையில் உள்ள அவரது வீட்டுக்கு வரும் படியும் பணம் ஆயத்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளார் . பகல் லுகர் தொழுகையை முடித்துக் கொண்டு சக ஆசிரியரின் வீட்டில் நோன்பு திறக்கும் எண்ணத்தோடு அவசரமாக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
மாலை நேரம் ஆகிவிட்டது. மறுநாளும் ஆகிவிட்டது. பாரிஸ் ஆசிரியர் திரும்பி வரவில்லை. ஊரே பதற்றத்துடன் இருக்கும் போது மொனராகல போலீசில் இருந்து ஒரு தகவல் குறித்த ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் மொனராகல கும்புக்கன் பிரதேசத்தில் காணப்படுவதாக அந்ததகவல்.
உடனடியாக ஊர் மக்கள் முன்னூறு பேர் அளவில் அக்கட்டு பிரதேசத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை அனால் பணம் கொடுக்க வேண்டிய சிங்கள நபர் எனக்கு ஒன்றும் தெரியாது இங்கு வரவில்லை என்ற விடயத்தில் உறுதியாகவே உள்ளான்.
இப்படியே சாகர் உணவை சாப்பிடுவதும் முப்பது கி.மீ. தொலைவில் இருக்கும் அப்பிரதேசத்தில் வாலிபர்கள் தேடுவதுமாக இருந்தும் பலன் இல்லை. பொலிசுமோ அவனுக்கே தனது ஆதரவை கொடுத்தது. அது நடக்கும் விடயமே. இப்படியே பெருநாள் தினமும் வண்டு விட்டது . அனால் அப்பிரதேச முஸ்லிம் கிராமங்களோ துக்கத்தில் மூழ்கியது.
கடைசியாக பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு எல்லோரும் கண்ணீர் சிந்தி அல்லாஹ்விடம் துஆ கேட்டுவிட்டு இருபேர் அளவில் மீண்டும் தேடச் சென்றது . போனவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியவனின் நண்பன் ஒருவனின் மேலும் சந்தேகம். அவனது வீட்டை சுற்றி பார்க்கும் போது வீட்டின் பின் புறம் வாழ இலை சருகுகள் காணப்பட்ட இடம் சந்தேகத்தை வரவழைத்தது.
உடனே ஒரு தடியினால் அதனை அகற்ற எத்தனிக்கும் போது அங்கு இருந்த வயோதிப தாயும் தந்தையும் சிங்கள மொழியில் இது பழைய மலசல குழி என கூறியதும் போனவர்கள் அங்கிருந்து நகரும் போது அதில் இருந்த ஒரு வாலிபர் அதன் மேல் நடக்கும் போது கால் சற்று உள்ளே செல்ல சந்தேகம் மீண்டும் வரவே அக்குழியை அகற்றிப் பார்க்க சற்று தோண்டும் போதே பாரிஸ் ஆசிரியரின் பாதணிகள் தென்பட்டுள்ளது .
உடனே ஜனாசா இங்கே தான் என உறுதியானது. போலீசுக்கும் ஊருக்கும் தகவல் கொடுக்க அப்பிரதேச முஸ்லிம் மக்கள் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேரளவில் ஒன்று கூடி நீதவான் முன்னிலையில் இரண்டே அடி ஆழமுள்ள குழியில் இருந்து பாரிஸ் ஆசிரியரின் ஜனாசா தோண்டி எடுக்கப்பட்டது .
ஜனாஸா மொனராகலைக்கு அண்மையில் இருக்கும் அலுப்பொத எனும் முஸ்லிம் ஊரில் கபனிட்டு சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு கிட்டத் தட்ட ஐயாயிரம் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கண்ணீர் சிந்த ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டது .
குறிப்பு : பணம் கொடுக்கவேண்டிய சிங்கள நபரின் நண்பனின் வீட்டில்தான் ஜனாசா கண்டெடுக்கப்பட்டது. அதன் பிறகு கொலை செய்தவன் எப்படி கொலை செய்தான் என்பதனை பொலிசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளான்.
கொலை செய்தவனின் வாக்கு மூலம் : ஆசிரயர் எனது வீட்டுக்கு வந்து பணம் எங்கே என்று கேட்டாரு. நான் சொன்னேன் இன்னொரு இடத்துக்கு சென்று எடுக்க வேண்டும். ஐந்து நிமிடம் வீட்டினுள் உட்கார்ந்திருங்கள். நான் குளித்து விட்டு வருகிறேன் என்று சொன்னவுடன் நான் நோன்பு திறக்க அவசரமாக செல்ல வேண்டும். நீ உடனே வா என்று என்னிடம் சொன்னபிறகு நான் வீட்டின் பின் புற வழியினால் ஒரு தடியுடன் சென்று அவரின் தலையில் அடித்தேன் உடனே கீழே விழுந்த அவரின் தலையில் ஒரு கல்லைக் கொண்டு போட்டும் உயிர் போக வில்லை. அதனால் சிறிய குழி ஒன்றை தோண்டி உயிருடனே புதைத்து விட்டேன்.
இது சம்பந்தமாக கிட்டத்தட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டும் கொலை செய்தவன் இது நான் மட்டுமே சம்பட்டேன் வேறு யாரும் இல்லை என்று கூறுகின்றான் . இது நன்கு திட்டமிட்டே கொலை செய்யப்பட்டுள்ளது.
கேவலம் மூன்றரை இலட்சம் ரூபாவுக்காக ஒரு பிழையின் தந்தையாகிய ஆசிரியரை கொலை செய்யும் அளவுக்கு சகோதர இனத்தவர்களின் கொடூரம் உள்ளது .
யா அல்லாஹ்..! பாரிஸ் ஆசிரியரின் குடும்பத்துக்கு நீயே பொருத்தமான ஆறுதலை வழங்க போதுமானவன்
யா அல்லாஹ் பாரிஸ் ஆசிரியரின் குடும்பத்துக்கு பொருத்தமான ஆறுதலை வழங்குவதோடு சம்பத்தப்பட்டவர்களை இவ்வுலகில் பகிரங்கப்படுத்திடுவாயாக!
ReplyDeleteஒரு தனிமனிதனின் பிழையை சுட்டிக்காட்டி இனவாதத்தை தூண்டுவது பொருத்தமல்ல..
ReplyDeleteஇதை எல்லாம் அரசியலுக்காக சிங்களவர்களை முஸ்லீம்களுடன் மூட்டி விடும் செயல் என அஸ்வர்,அதாவுல்லா,ஹிஸ்புல்லாஹ்,ரிசாத்.பௌசி போன்றோர் கூறுவார்.
ReplyDeleteமுஸ்லீம்களுக்கு எதிரான காட்டு தர்பார் ஆரம்பமாகியுள்ளது. கன்னைத்திண்ட அஸ்வரே...உனது புனைக்கண்ணை திறந்து பார் நீ பள்ளிகள் உடைக்கப்பட்டிருந்தால் பதவி விலகுவேன் என மார்தட்டிநாயே (ன)
நீங்கள் எல்லாம் அல்லாவிடம் பதில் சொல்ல வேண்டும்
What a bad inciden occured, May the Allah Save his Family and let Faaris Sir to the "Suvarkam"
ReplyDelete36-37 வயது மதிக்கத்தக்க இவ்விளம் ஆசிரியரின் சோகக்கதை மொனராகலை மாவட்ட முஸ்லீம்களை பெருநாள் தினத்தில் பெரும் துயரில் ஆழ்தியது,
ReplyDeleteJaffnamuslim என்ற பெயரில் இயங்கினாலும் அனைத்துலக முஸ்லிம்களின் செய்திகளையும் பதிவேற்றும் இத்தளம் மேலும் உயர வளர அல்லாஹ் தஆலாவை பிராத்திக்கின்றேன்
Bro Inas,
ReplyDeleteidhu onrum thani nabarin pilayayai suttikkaattum seyaloo or invaadatthai thoondum seyaloo alla... idhuve, maatramaaga muslim oruvaraal sagoodhara madhattavar oruvar kollappattirundhaal... nam anaivarin nilayume' kavalaikkidamaaga pooyirukkum... Kutravaaligal pirappadhilla... uruvaakkappaduginraargal... ALLAHve ivargalukku poodhumaanavan.
இவ்வாசிரியர் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் 2002ஆம் ஆண்டு எமது Junior Betch ஆக இணைந்து கொண்டவர். பக்னிகஹவெல ஊரிலிருந்து வந்த இனிமையானவர்களில் இவரும் ஒருவர். பணிவும், நல்லொழுக்கமும் கொண்டவர். இவருடைய இவ்வாறான மறைவு வேதனையளிப்பதே. நோன்பாளியாக மரணித்த இந்த ஆசிரிய நண்பருக்கு அல்லாஹ் கபுறுடைய வாழ்க்கையை சுவனப்புஞ்சோலையாக்கி, றய்யான் எனும் சுவனத்தையும் வழங்குவானாக என மனமுருகி வேண்டுகின்றேன்.
ReplyDeleteமற்றும் இங்கு கருத்து கூறவிளைபவர்கள் இவ்வாசிரியருடைய மரணத்தை அரசியலாக்க வேண்டாம். ஏனெனில் இவ்வாறான கொலைகார மனம் கொண்டவர்கள் பௌத்தமதத்திற்கு மாத்திரம் சொந்தக்காரர்கள் அல்ல. எல்லாஇனத்தவர்களிலும் இருக்கின்றார்கள். சம்பவங்களைக்கூட உதாரணமாக எனக்கு கூறமுடியும். ஆதலால் தயவுசெய்து நிதானப் போக்கை கைக்கொள்ளுங்கள். நன்றி
I really appreciate Brother Nazar Ismail's stand.
ReplyDelete