நெஞ்சு பொறுக்குதில்லையே...! (பதில் கட்டுரை)
சுனீஷ் காண்
நெஞ்சு பொறுக்குதில்லையே..! என்று தங்களது இணையத்தில் ஹஸீர் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து வாசகர் என்ற வகையில் எமது கருத்துக்களையும் தங்கள் பிரசுரிப்பது தர்மம் என நினைப்பதுடன்,யாழ் முஸ்லிம் இணைய ஆசிரியர் அவர்கள் காய்தல், உவர்த்தல் இன்றி இந்ந அறிக்கையினையும் பிரசுரிப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
சகோதரர் ஹஸீர் அவர்களின் கேள்விகள் ஏன் இப்படி அநை்துள்ளது என்பது தெரியவில்லை.தனது சகோதரரும்,ஸ்ரீ.ல.மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளை ஆசாத் சாலி அவர்களிடம் கேட்டுள்ளார். பரவாயில்லை.
முதலாவது கேள்வி்
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கமைய முதலாவது கேள்வியே பிழையாகவுள்ளது.ஆசாத் சாலி என்பவர் பல கட்சியில் அங்கத்துவம் பெற்றவர் என்பதை நன்றாக தெரிந்த நிலலயில் தானே தங்களது சகோதரர் ஹக்கீம் அவர்கள் கிழக்கு தேர்தலில் வேட்பாளராக நிறுத்தினார்.அப்போது இல்லாத ஸ்ரீ.ல.மு.காவின் அங்கத்துவம் இப்போது தேவைப்பட்டுள்ளது ஏன்?அங்கத்துவ இலக்கம் பதிவு திகதி என்பன கட்சியில் யாருக்கு இருக்கின்றது.
கட்சியின் கட்டமைப்பு தெரியாதவர்களாக தங்களது தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இருப்பது எனபதை நீங்களே முதல் கேள்வியில் பதிலாகவும் தந்துள்ளீர்கள். இது தான் இன்றைய தாங்கள் நியாயப்படுத்தும ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் திறமையான நிர்வாகமா?
இரண்டாவது கேள்வி
முழங்காலுக்கும் மொட்டடைத்தலைக்கும் முடிச்சுப் போடும் சிறு பி்ள்ளைத் தனமான கேள்வியாகவே இதனை பாரக்க வேண்டியுள்ளது,ஜக்கிய தேசியக்கட்சியில் இணைந்து போட்டியிட்டால் அவர்களை அதனது உறுப்பினராகவா கொள்ள முடியும்,என்று ஹஸீர் சொல்லுகின்றீர்களே,அப்படியெனில் ஏன் ஆசாத் சாலிக்கு முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்துவம், தெரியாத விடயங்களுக்குள் மூக்கை நுழைத்து அவமானப்படும் காரியத்தில் கவிஞர் ஹஸீர் இறங்கியுள்ளீர்களே,
மூன்றாவது கேள்வி
ஆசாத் சாலிக்கு எப்படி டிக்கட் கொடுத்தது,வெளிநாட்டு செல்வாக்கும்,அரசுக்கு எதிராக மஹாராஜா நிறுவனத்தின் கை நனைப்புக்களும் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஆசாத் சாலி வேட்பாளராக நிற்பதற்கு காரணம்,தகுதி தராதரங்கள் பாரக்காதவர்களை உள்வாங்குதில் ஸ்ரீ.ல.மு.கா.குப்பைத் தொட்டில் என்பதை இப்போதாவது புரிந்து கொண்டீர்களே. ரங்கா எப்படி எதிரி,அந்த எதிரி அழைத்துவரும் மனிதர் பற்றி அறியாத தலைமையாகத்தான தங்களது சகோதரரின் கட்சி இருக்கின்றது…பாவம்…
நான்காம் கேள்வி
முஸ்லிம் காங்கிரஸின் குத்து வெட்டுக்களை அறிந்து கொண்ட ஆசாத் சாலி,தான் சுயேட்சையாக கேட்கப் போவதாக கூறியதாக கூறுகின்றீர்கள்.அப்படியெனில் ஆசாத் சாலியினை விட்டிருக்கலாம் தானே,ஏன் வலிந்து வேட்பாளராக மு.காவில் நிறுத்த வேண்டுமம்.எல்லோரையும் விட 10 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெற்றவராக ஆசாத் சாலி இருப்பதில் இருந்து அவரது செல்வாக்கினை புரிந்து கொள்ள முடியாத நிலையில் ஹஸீர் இருக்கின்றீர்களே.தனித்து ஆசாத் சாலி கேட்டிருந்தால்,முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கும் இரு அமைச்சுக்களும் அம்பேஷ் தான்
ஜந்தாம் கேள்வி
நல்ல கதை தான் ஏறாவூரில் ஹபீஸ் நஸிரின் வெற்றியின் பின்னணியில் ஆசாத் சாலியின் வாக்கும் இருக்கின்றது என்பதை புரியாதவராக இருக்கின்றீர்களே. உங்களது அங்கத்துவம் பெற்ற பஷீர் சேகுதாவூத் அவர்கள் அலிசாஹிர் மௌலானாவுக்கு வாக்களிக்க சொன்னாரே,அப்போது எங்கே போச்சு வீர வசனங்கள்,ஏன் கொல்லன் இழைத்த இரும்பை கண்டால் ஓங்கி ஓங்கி அடிப்பார் என்பதை போன்று ஆசாத் சாலி அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக பேசுவதை இப்போது தாங்கிக் கொள்ள முடியாதுள்ளது போலும்,ஏன் தனக்கு ஒரு நியதி,மற்றவருக்கு வேறொரு நியது என்பது தன் கட்சியின் தாரக மந்திரமா?...சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும் என்ற பழமொழியினை புரிந்து கொள்ள ஹஸீர் நானா தவறிவிட்டாரே…
ஆறாம் கேள்வி
முழுப் புசினிக்காயினையும் சோற்றில் புதைத்த கதையாக இருக்கின்றது.இலங்கையில் உள்ள அனைத்து ஊடகங்களும் இந்த செய்தியினை வெளியிட்டிருந்ததே,உங்களது தலைவர் ஹக்கீம் அவர்களையும் அவர்கள் சம்பந்தனுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் காணப்பட்ட உடன்பாடு,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அய்யா அவர்கள் பிபிசீக்கு கூறிய பேட்டியின் ஒலி வடிவம் என்பன உள்ளனவே. இந்த மஹி்ந்த அரசை தொலைத்து புதிய ஆட்சியினை எற்படுத்த மு.காவுக்கு வாக்கு அளியுங்கள் என்று கூறியதை நீங்கள் மறப்பதில் நி்யாயம் இருக்கின்றது.ஏனெனில் மனதில் அவைகள் இருந்தால் எப்படி மஹிந்தவுடன் சேர முடியும்,உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கூட்டம் என்பதை நிரூபித்துவட்டீர்கள் …
ஏழாம் கேள்வி
நீங்கள் ஒரு ஊடகவியலளர் ஊடகங்களுக்கு சவால் விடுவது எந்தளவு நியாயம். தேர்தலில் மு.கா.வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஹக்கீம் நானாவின் பின்னால் அலைந்து திரிந்த கூட்டம் தான் சிரச சக்தி. உண்டவீட்டுக்கு வஞசகம் செய்பவர்கள் நீங்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அன்று வாக்குகளை பெறுவதற்கு நல்லவர்கள் ,ஆனால் இன்று அவர்கள் துரோகிகள்,என்னய்யா கதை விடுகின்றீரகள்,ஜனாதிபதி அவர்கள் சம்பந்தன் அவர்களிடம் சொன்னார்கள்,நாம் கிழக்கில் எதிர்கட்சியாக இருக்கவிரும்பினோம்.ஆனால் ஹக்கீமின் தொந்தரவு தான் அவரை சேர்க்க வேண்டியதாயிற்று,அவர் மீது எமக்கு நம்பிக்கையில்லை.இதனால் அவரது ஏழு உறுப்பினர்களினதும் ஒப்பத்துடன் கடிதங்களை பெற்றுக் கொண்டேன் என்று இதனை விட என்ன சான்று வேண்டும் ஹஸீர் அவர்களே..
எட்டாம் கேள்வி
ஹஸீர் அவர்கள் கிணற்ற தவலையாகவே இருக்கின்றார்.தம்புள்ள பள்ளிவாசல் விவம் தொடர்பில் முதலி்ல் குரல் கொடுத்தவர் மு.கா.தலைவர் என்று கூறியதை ஏற்றுக் கொள்ளமுடியாது.அந்த சம்பவம் இடம் பெற்ற போது ஹக்கீம் அவர்கள் நாட்டிலில்லை.பள்ளி விடயமாக அந்த கனமே சென்று நடவடிக்கையெடுத்தவர் அமைச்சர் றிசாத்,பௌசி,ஹூனைஸ் எம்.பி,முஸ்லிம் மீடியா போரம் என்.எம்.அமீன்,மற்றும் ஊடகவியலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா,குருநாகல் செய்தியாளர் இக்பால் அலி ஆகியோரே என்தற்கான ஆதரங்கள் உண்டு. அது அன்றைய அனைத்து இணைய்ஙகளிலும் பிரசுரமாகியுள்ளது,யாழ் முஸ்லிம் இணையமும் அதனை உறுதிப்படுத்தியிருந்தன.தனக்கு ஒன்று தெரியாது என்றால் அதனை தெரிந்தவர்களுடன் கேட்டுத் தெரிந்து கொள்வது தான் சிறந்த எழத்தாருக்குரிய பன்பாகும்…தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பவர்களுடன் விவாதம் புரியலாமா..?
நீங்கள் சொல்வது சரி,ஒரெயொரு அமைச்சரான ரவூப் ஹக்கீம் மட்டும் தான் தம்புள்ள பள்ளி விடயத்தை தனது கட்சியின் வெற்றிக்காக பயன்படுத்தி உரத்த குரலில் மேடையில் பேசினார்.மஹிந்த அரசு ஆட்சிக்கு வந்தால் பள்ளிவாசல்களில் பாங்கு சொல்ல முடியாது என்று கூறிய ரவூப் ஹக்கீமை சகோதரர் ஹஸீருக்கு தெரியுமா ?
ஒன்பதாவது கேள்வி
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேருவதும்,பிரிவதும் ஸ்ரீ..மு.காவின் தீர்மானம்,அதை ஆசாத் சாலி நியாப்படுத்த விட்டுவிடுவோம். யாழ் முஸ்லிம் இணையம் ஊடக தர்மத்தை கட்டிழுப்பும் அதிக வாசகர்களை கெண்ட தளம்..! எனவே ஆசாத் சாலியுடனும் தொடர்பு கொண்டு அவரது விளக்கத்தையும் வெளியிட வேண்டும் இது எனது அன்பான ஆசை…
பத்தாவது கேள்வி
தனிப்பட்ட விமர்சனங்கள் சமூகத்திற்கு நலவை ஏற்படுத்தாது என்பதாலும்,ஊடகங்களுக்கு கருத்துக்ளை எழுதும் போது கௌரவமான சொற் பிரயோகங்களை பன்படுத்துவது தான் நல்லது,அது இணையத்துக்கும் மறியாதை… ஹஸீரின் கடைசி கேள்வி அகம்பாவத்தை உச்ச கட்டத்தில் எடுத்தரைக்கின்றது. இறால் தன் மண்டைக்குள் நாற்றத்தை வைத்துக்கொண்டு பிறரை நாற்றம் என்று கூறுவது போன்று முழுக்க முழுக்க தனக்குள் எல்லா பிழைகளையும் வைத்துக் கொணடு ,ஏனையவர்களை திட்டி தீர்ப்பதிலிருந்து அந்த கேள்விகள் வெறும் வெற்றுப் பைதான் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது..!
ஒருவன் தன்னை தானே திருத்திக் கொள்ளாத வரை இறைவன் அவர்களை திருத்தமாட்டான்,என்பதற்கமைய ஹஸீர் அவர்கள் எதிர்காலத்தில் தமது அறிக்கைகளை விட வேண்டும் என்பது எமது பணிவான வேண்டுகோளாகும்.
Ippadiyo Eallanum peesi peesi Mandaya Odachittu Oru Arasiyal Annathayaha Muslimkala Nadu Roadukku Kondu Vidunga
ReplyDeleteஆள் மாறி ஆள் நல்லாப் பேசுறேங்க.. அது மட்டும் புரியுது. ஒன்னு மட்டும் சொல்லலாம், மகாராஜா ஊடகம் மீடியா மாபியா ஒன்றைத்தான் நடத்துகிறது. மக்கள் சேவை என்ற பெயரில் தாம் நினைத்ததன் பக்கம் மக்களை அழைத்துச் செல்வதில் கில்லாடிகள். அதனால் தான் அரசியல் வாதிகள் எல்லோரையும் வேண்டுகிறேன்; தயவு செய்து மீடியாக்களில் முகம் காட்ட ஆசைப் படாதீர்கள். இது மக்களுக்கும் நல்லதல்ல, உங்களுக்கும் நல்லதல்ல. ஒரு முறை இந்த மீடியாக்களுக்காய் குடை பிடிப்பதும், பின்னர் திட்டித் தீர்ப்பதும்... தேவை தானா இது. மக்கள் நலனுக்காக மட்டும் மீடியா உதவியை நாடுங்கள். உங்களைப் பிரபல்யப் படுத்த அல்ல.
ReplyDelete