Header Ads



'முஸ்லிம்கள் ஐரோப்பிய கலாசாரத்துடன் லயிக்க வேண்டும்'



TU

ஹாலந்தின் பிரபல வர்த்தக மையங்களில் ஹிஜாப் விற்பனை செய்வது சர்ச்சையை கிளப்பியுள்ளது. முஸ்லிம் பெண்கள் தங்களின் கண்ணியத்தை காப்பாற்ற உடுத்தும் ஆடையை ஐரோப்பாவிற்கு அந்நியமானதாக சிலர் கருதுகின்றனர். ஆனால், இதற்கு எதிரான கருத்தும் உண்டு. பிரபல ஆடை நிறுவனங்கள் ஹிஜாபை விற்பனைச் செய்வதற்கு எதிராக சில வலதுசாரி தீவிரவாத சிந்தனை கொண்ட இளைஞர்கள் இணையதளங்களில் பிரச்சாரத்தை துவக்கியுள்ளனர்.

முஸ்லிம்கள் ஐரோப்பிய கலாச்சாரத்துடன் லயித்து விடவேண்டும் என கூறும் இவர்கள், தீவிரவாதத்தை வளர்க்க வாய்ப்புகளை ஏற்படுத்திவிடக் கூடாது என வாதிக்கின்றனர்.

அதேவேளையில், ஹிஜாபை விற்பனைச் செய்யும் நிறுவனங்களோ, ஹாலந்து நாட்டின் குடிமக்கள் மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொள்வோருக்கு அணிவதற்கான ஆடைகளை தயாரித்து விற்பனைச் செய்வதே தங்களுடைய நோக்கம் என்று  கூறுகின்றன. இந்நிலையில் ஹிஜாப் விற்பனைக் குறித்து எவ்வித சர்ச்சையும் புதிதாக கிளம்பவில்லை என்றும், இது வெறும் ஒரு வியாபார தந்திரம் என்றும் சில முஸ்லிம் தலைவர்கள் கூறுகின்றனர். சர்ச்சையை கிளப்பி வியாபாரத்தை அமோகமாக நடத்துவதே அவர்களுடைய நோக்கம் என்று முஸ்லிம் தலைவர்கள் கூறியுள்ளனர்.

1 comment:

  1. எப்போதும் இஸ்லாத்துக்கு உதவிசெய்வதில் இந்த எதிர்ப்பாளர்கள் தான் எப்போது இவர்கள் எதிர்த்தும்,தூற்றிக்கொண்டும் இருக்கிறார்களோ அப்போதெல்லாம் ஒன்றுக்கும் இல்லாத முஸ்லிம்கள் என்போமே அவர்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவதை பார்க்க முடிகிறது அது மட்டுமல்ல மாற்று மதத்தவர்கள் கொஞ்சம் எட்டிப்பார்க்கவும் செய்கிறார்கள்,இஸ்லாம் என்ன சொல்கிறது,இஸ்லாமியர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்றெல்லாம் யோசிக்க தலைப்படுகிறார்கள்.இப்படி சில பிரச்சினைகள் வரும்போதெல்லாம் முஸ்லிம்களாகிய நாம் கட்டாயம் நமது எதிர்ப்புகளையும்,மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொள்(ல்)வதும் எமக்கு கடமையாகும்.

    ReplyDelete

Powered by Blogger.