Header Ads



'யார் இந்த முஹம்மத் (ஸல்)?' சிறப்பிதழ் வெளியீட்டிற்கு உதவுமாறு கோரிக்கை


அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்!

இக்கடிதம் உங்களை பூரண உடல் நலத்துடனும் தூய இஸ்லாமிய சிந்தனையுடனும் சந்திக்கட்டுமாக!

திருக்குர்ஆனையும் நபிவழியை மட்டும் பின்பற்றும் அமைப்பாகவும், அழைப்புப்பணியை குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் எந்த விட்டுக்கொடுப்புமின்றி செயல்படுகின்ற அமைப்பாகவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) இயங்கிவருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
எமது உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒழுக்க வாழ்விற்கு களங்கம் கற்பிக்கும் முகமாய் இஸ்லாத்தின் எதிரிகள் அவதூறு திரைப்படங்கள் வெளியிடுவதன் மூலமும், கேளிச் சித்திரங்கள் பிரசுரிப்பதன் வாயிலாகவும் உலக மக்களிடம் நபிகளார் குறித்த தவறான கண்ணோட்டத்தினை விதைப்பதற்கு பகீரதப் பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இஸ்லாத்திற்கு எதிராய் தொடுக்கப்படும் நவீன இலத்திரணியல் போராட்டத்தினை முறியடிப்பதனை இலக்காக வைத்தும் தவறாக சித்தரிக்கப்படும் இஸ்லாத்தின் இனிய செய்திகளை தெளிவாக மக்களுக்கு எடுத்துரைப்பதன் மூலமும் இலங்கையில் மாற்றுமத அன்பர்களுக்கு மத்தியில் இஸ்லாமிய அழைப்புப் பணியினை விரிவு படுத்தல் வேண்டும் என்பதனையும் கருத்திற் கொண்டு தலைமையகம் பல ஆக்க பூர்வமான செயற்திட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ளது.
இதில் முதல் முன்னெடுப்பாக நபிகளாரின் வாழ்க்கை சரிதத்தினை பல் பரிமாணங்களில் விளங்கப் படுத்தும் விதமாகவும், நபிகளாருக்கெதிராக விரல் நீட்டப்படும் அவதூறுகளுக்கு அறிவார்ந்த ரீதியில் மறுப்புரைக்கும் வன்னமும் “யார் இந்த முஹம்மத் (ஸல்) ?” எனும் தலைப்பில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் 25 000 பிரதிகள் கொண்ட சிறப்பிதழ் ஒன்றினை கிட்டிய இரு வார காலத்துக்குள் நாடளாவிய ரீதியில் மாற்றுமத அன்பர்கள் மத்தியில் இலவசமாய் விநியோகிப்பதற்கு ஜமாஅத் முடிவெடுத்துள்ளது, இன்ஷா அல்லாஹ்.
இப்புத்தக வெளியீட்டுக்கு சுமார் 5 இலட்சம் ரூபாய்கள் அவசியப்படும் என மட்டிடப்பட்டுள்ளது. காலத்தின் கட்டாயத் தேவையான இந்நற்பணிக்கு உங்களால் இயன்ற அளவு நிதி உதவி செய்யுமாறு வினயமாய் வேண்டிக் கொள்கின்றோம்.
எனவே உங்கள்  நன் கொடைகள், தான தர்மங்களை வாரி வழங்கி எங்களுக்கு உதவ விரும்பும் சகோதரர்கள் கீழ் காணும் வங்கி கணக்கில் உங்கள் நிதி உதவிகளை பதிவு செய்து கொள்ளவும்.
Sri Lanka Thowheed Jama’ath
 Hatton National Bank – Maradana Branch
A/C No: 108010104971
மேலதிக விபரங்களுக்கு கீழ் காணும் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.
R.M. ரியால் (தேசிய தலைவர்) – 0094774-781471,0094777-255467
 அப்துர் ராஸிக் (பொதுச் செயலாளர்) – 0094774-781473ஃ0094771-524524
M.J.M. ரிலா (தேசிய பொருளாலர்) – 0094774-781475ஃ0094772-61497

 தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியவருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காக கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்;; அறிந்நதவன்.                                                                            அல் குர்ஆன் 2:261
அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும் தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காவும் தமது செல்வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரனம் உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெரு மழை விழுந்ததும் அத் தோட்டம் இரு மங்காக தன் உணவு பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழா விட்டாலும் தூரல் (போதும்) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.                           அல் குர்ஆன் 2:265
இப்படிக்கு,

 ………………………                                                          ……….……………………….
தேசிய தலைவர்                                                      பொதுச் செயலாளர்
 R.M. ரியால்                                                               அப்துர் ராஸிக் ரபீக்தீன்




1 comment:

  1. ஜமாஅத் வேறுபாடுகள் இன்றி எல்லோரும் கொடுத்து உதவுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.