பொறுமையாக இருங்கள் - அமீர் அலியை எம்.பி. யாக்கி, பிரதியமைச்சு பதவி வழங்குகிறோம் - பஸில் ராஜபக்ஸ உறுதி
கொஞ்ச நாட்களுக்கு பொறுமையாக இருங்கள். அமீர் அலியை நிச்சயம் எம்.பி. ஆக்கி, பிரதியமைச்சுப் பதவியையும் அவருக்கு வழங்குவோமெனன அமைச்சர் பஸில் ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும், அமைச்சர் பஸில் ராஜபக்ஸவுக்குமிடையே நடைபெற்ற 2 மணித்தியால சந்திப்பின் போதே இந்த வாக்குறுதி வழங்கப்பட்டதாகவும் இதையடுத்தே கிழக்கு மாகாண சபை உறுப்பினராக அமீர் அலி ஜனாதிபதி முன் பதவியேற்றுக்கொண்டதாகவும் நம்பகரமான அரசியல் வட்டராங்களிலிருந்து யாழ் முஸ்லிம் இணையத்திற்கு அறிவருகிறது.
பஸில் ராஜபக்ஸவுடனான இச்சந்திப்பில் அமைச்சர் றிசாத்துடன், பிரதிமைச்சர் ஹிஸ்புல்லா மாகாண சபை உறுப்பினர்களான அமீர் அலி மற்றும் சுபைர் ஆகியோருடன் வை.எல்.எஸ் ஹமீத் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதன்முதலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உருவப்படத்தையும், வெற்றிலைச் சின்னத்தையும் அறிமுகப்படுத்திய பெருமை அமீர் அலியையே சாருமென இதன்போது குறிப்பிட்டுள்ள பஸில் ராஜபக்ஸ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்கு வழங்கிய உதவிகளை ஒருபோதும் மறந்துவிடவில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண தேர்தலையடுத்து தோன்றியுள்ள நிலவரம், முஸ்லிம் சமூகத்தின் தற்போதைய நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளதுடன், அமைச்சர் பஸில் ராஜபக்ஸ அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை சமாதானப்படுத்தும் போக்கை கடைபிடித்ததாகவும் மேலும் அறியவருகிறது.
Post a Comment