தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மு.கா. ஆட்சியமைத்திருந்தால் ஆபத்தில் முடிந்திருக்கும்
TM
'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேரம் பேசும் சக்தியினால்தான் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இல்லையென்றால், கிழக்கில் மீண்டும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டுமென சர்வதேச நாடுகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்தன. அவற்றையெல்லாம் தாண்டியே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை நாம் வென்றெடுத்துள்ளோம்' என்று மு.காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னரான விவகாரங்களைத் தெளிவுபடுத்தும் வகையில் இன்று சனிக்கிழமை காலை கல்முனை பர்ஜீஸ் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே – நாடாளுமன்ற உறுப்பினரர் ஹரீஸ் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
'தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக நியமனம் செய்ய வேண்டுமென சர்வதேச நாடுகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டன. தேர்தல் நிறைவடைந்த பின்னர் அமெரிக்காவின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலாளர் ரொபட் ஓ பிளக் இதற்காகவே இலங்கை வந்திருந்தார். இவைகளுக்கிடையில்தான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேரம் பேசும் சக்தியின் மூலமாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணசபையில் அரசுக்கு ஆதரவு வழங்குவதென மு.கா. எடுத்த முடிவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்விக்குட்படுத்தி வருவது கவலையளிக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலைப் போல், மு.காங்கிரஸ் செய்ய முடியாது.
கிழக்கு மாகாணத்தில் த.தே.கூட்டமைப்புடன் இணைந்து மு.காங்கிரஸ் ஆட்சியமைத்திருந்தால், முஸ்லிம்கள் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டதாக சிங்களப் பேரினவாதிகள் சத்தமிடத் தொடங்குவார்கள். கடைசியில் அது பெரும் ஆபத்தான முடிவினை ஏற்படுத்தும்.
த.தே.கூட்டமைப்பு கிழக்குத் தேர்தலை முன்வைத்தே முஸ்லிம்கள் குறித்துப் பேசியது. ஆனால், முஸ்லிம்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையிலான பேச்சுக்களை த.தே.கூட்டமைப்பு நேர காலத்துடன் ஆரம்பித்திருக்க வேண்டும்.
த.தே.கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் - அரச விரோத அரசியலுக்குப் பக்க பலமாக பல்வேறு தரப்புக்கள் உள்ளன. உலகெங்கும் வாழும் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச நாடுகளென நிறை உதவிகள் உள்ளன.
ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இவ்வாறான பக்க பலங்கள் கிடையாது. எனவே, அரசை ஒட்டு மொத்தமாகப் பகைத்துக் கொண்டு, அரச விரோத அரசியலை மு.காங்கிரசினால் மேற்கொள்ள முடியாது.
தமிழ் இளைஞர்களுடைய தியாகம்தான் இலங்கையில் மாகாணசபை முறைமை ஏற்படுவதற்கு காரணமாகும். தமிழ் மக்களுடைய இந்த தியாகத்தினை நாம் ஒருபோதும் மறக்கவில்லை. சிறுபான்மை சமூகத்துக்கான தீர்வுத் திட்டமொன்றைப் பெறுவதற்காக, தமிழ் சமூகத்துடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உழைக்கும்.
இதேவேளை, மாகாண முறைமையினை பெறுவதற்குக் காரணமாக இருந்த தமிழ் சமூகத்துக்கு கிழக்கு மாகாணசபையில் ஓர் அமைச்சுக் கூட வழங்கப்படவில்லை என்பது கவலையளிக்கும் விடயமாகும்.
அண்மைக் காலமாக ஆஸாத்சாலி என்பவர் மு.காங்கிரஸை மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றார். எங்கள் கட்சியினை விமர்சிப்பதற்கு ஆஸாத்சாலிக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது.
பஸ்ஸுக்கு டிக்கட் எடுக்கப் பணமில்லாமல் வீதியில் அலைந்து திரியும் ஒருவருக்கு மனிதாபிமானத்துடன் பணம் கொடுத்து உதவுவதைப் போலதான், அஸாத்சாலி என்பவருக்கு கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மு.காங்கிரஸ் சந்தர்ப்பம் வழங்கியது. இதை வைத்துக் கொண்டு, கிழக்கு மக்களின் மேய்பராக அஸாத்சாலி தன்னை எண்ணி விடக் கூடாது.
அஸாத்சாலி ஒருபோதும் எந்தவொரு கட்சியிலும் உறுதியாக இருந்ததில்லை. ஐ.தே.கட்சியில் இருந்தார், பிறகு ஐ.ம.சு.முன்னணியோடு ஒட்டிக் கொண்டார். அங்கிருந்து விரட்டப்பட்டதும் மு.காங்கிரசிடம் தஞ்சம் புகுந்தார்.
ஹஜ் விவகாரத்தினை கவனிக்கும் பொறுப்பு ஆஸாத்சாலியிடம் வழங்கப்பட்டபோது, ஹஜ் யாத்திரீகர்களின் 06 கோடிக்கும் அதிகமான பணத்தை அஸாத்சாலி மோசடி செய்தார். இது ஜனாதிபதிக்குத் தெரியவந்தது. அதனால்தான், ஆஸாத்சாலியை ஜனாதிபதி ஓரங்கட்டினார். இப்படியானவர்தான் இப்போது முஸ்லிம் சமூகத்தின் நலன் குறித்துப் பேசுகிறார்.
அபாண்டமான குற்றச்சாட்டு
கிழக்கு மாகாணசபையின் மு.காங்கிரஸ் உறுப்பினர்களில் யார் யாருக்கு அமைச்சுப் பதவிகளைக் கொடுக்கலாம் என்பதை மு.காங்கிரசின் தலைவர்தான் தீர்மானித்தார். அதற்கும் எனக்கும் தொடர்புகள் கிடையாது.
ஆனால், மு.காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினரொருவர் தனக்கு அமைச்சுப் பதவி கிடைக்காமைக்கு - ஹரீஸ் எம்.பி.யும், கல்முனை மாநகரசபை மேயருமே காரணம் என்று கூறித் திரிகின்றார். இது அபாண்டமான குற்றச்சாட்டாகும். இதுகுறித்து நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை' என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், கல்முனை மாநகரசபை மேயர் சிராஸ் மீராசாஹிப், கல்முனை மாநகரசபை மு.கா. உறுப்பினர்களான ஏ.எம். பரகத், எம்.ஐ. பிர்தௌஸ், சட்டத்தரணி ஏ.எம். றகீப் மற்றும் சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Dear Hon. Harees MP, please need your clarification for below questions from Eastern muslims.
ReplyDelete1. SLMC leader Mr. R.Hakeem told in all political meetings during EPC election that SLMC will win the election and get muslim CM from SLMC but not from other party?
2. After all now you are criticizing Aasad Sali, why you and your party SLMC brought him from Colombo if you know all his stupidities and corruptions as you mentioned?
3. If you (SLMC) want Honey moon with Mahinda mama do it but don’t say that you SLMC can’t do politics like TNA. What kind of quality you SLMC have to criticize them.
4. Why you SLMC gave place to Thavam from AKP? to deflate Athaullah? What happened in the game? How you and your leader going to face Pottuvil people????\
Finally do you and your so called high command think that we Eastern muslims are fool and sleeping, wait and see the reactions in coming days.
ALL END UP WITH BABA BLACK SHEEP …………. AND 3 BAGS FULL!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
6 கோடியில் எத்தனை கோடியை வாங்கிக் கொண்டு தேர்தலில் போட்டி இடுவதற்கு இடம் அளித்தீர்கள்..?? அசாத் சாலி அவர்களே, ஹரிஸ் எம் பி இடம் இருந்தும் பல கோடிகள் பெறலாம் என்று நினைக்கிறன். முயற்சித்துப் பாருங்களேன்.
ReplyDeleteதமிழர் ஒருவரை முதலமச்சராக்குமாறு சர்வதேசம் அழுத்தம் கொடுக்கவில்லை மாறாக இலங்கையில் தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்பட்டு, மனித உரிமைகள் மீறப்படுகிறது போன்ற சர்வதேசத்தின் குற்றச்சாட்டை சமாளிப்பதற்காக ராஜபக்சவுக்கு தமிழர் ஒருவரை (பிள்ளையானை) முதலமைசராக்க வேண்டும் என்பதே உண்மை. உங்களை குறைகூறுவதா அல்லது உங்களுக்கு வாக்களித்தவர்களை குறைகூறுவதா என்று உங்களைப்போல் எனக்கும் ஒன்றும் புரியவில்லை சார்....!!!!
பெரிதாக அலட்டிகொள்ளவில்லை என்றால் ஏன் பத்திரிகையாளர்களை கூட்டி கூறுகிறீர்கள்.
Kamran Butt, I'm sure he can't answer for your questions because he don't know what he is talking,, any way thank you for your good questions.
Hi Harees
ReplyDeleteWe always see you as a funny man. You have neither principle nor dignity. You jump from party to party for your benefits and also you do not have the ability to analyse the problems or the context. What you use to do it you wait for some time and see what others in your party say and finally send an article to the media as if it's your own idea. We know you all are bully boys of Rauff. Don't you have the shame to come on the media. You all selling your community for the betterment of your family?? Please do not try to fool us anymore.
-Kalmunayaan-
தம்பி Kamran Butt. எங்கட எம்பிய பாசதெரியாத எம்பி என்று ஊர்ல சொல்லுவாக. இத தமிலில எலுதினா அவருக்கு படிக்க வசதியாக இருக்கும்.
ReplyDeleteதயவு செய்து தமிழ்ழ எலுதுங்க, அப்பதான் அவங்க அலட்டிக் கொல்வாக இல்லாடி வழமை போல் எதயும் அலட்டிக் கொல்ல மாட்டார்கள்.