நெஞ்சு பொறுக்குதில்லையே...! (என் பக்க நியாயங்கள் )
ஹஸீர்
" முற்போக்கு
முகமூடி போட்டுக்கொள்லாமல்,
இதோ
நிர்வாணமாகவே நிற்கிறது
என் முகம் !
என் -
அகம் கலிமா ,
முகம் கவிதை ......... "
என்றுதான் எப்போதுமே என் கவியரங்கக் கவிதைகளை தொடங்குவேன்...
இன்று அதே வரிகளுடந்தான் இதனை எழுத " பிஸ்மில் " சொல்கிறேன் .
www.jaffnamuslim.com இணையத்தை சொந்த விவாதத்திற்கு பயன்படுத்துகிறேன் என்று தவறாக நினையாதீர்கள். சகோதரர் அஸாத் சாலி அவர்களிடம் நான் நேர்மையாக கேட்ட கேள்விகளுக்கு ஒரு முகமூடி மனிதன் இடையில் புகுந்து கொண்டு முட்டாள் தனமாக மேலோட்டமான பதில்களை அளித்துள்ளார் . முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் சகோதரர் என்று என்னை இழுத்து அவர் தாக்குதல் நடத்தி இருக்காவிட்டால் நான் இதனை மேலும் தோண்டுவதை தவிர்த்திருப்பேன் .
இதனை ஒரு விவாதமாக தொடர்ந்து , அதனால் Jaffna Muslim இணையத்தை கஷ்டத்தில் இழுத்துவிட நான் விரும்பவில்லை . நான் என் சொந்தப் பெயரில் தான் எழுதினேன் . ஆனால் சுனீஷ் காண் ( "கான்" என்பதை " காண் " என பிழையாக இவர் எழுதியிருப்பதிலேயே இது முகமல்ல முகமூடி என்பது தெரிகிறது ) என்கிற புனைப் பெயரில் அல்லாது அவர் சொந்தப் பெயரில் எழுதியிருந்தால் இவ்வாறு Jaffna Muslim இணையத்தை அணுகாமல் நான் நேரடியாக அவருடன் தொலை பேசியில் பேசி என் விளக்கத்தை கொடுத்திருப்பேன் . தயவுசெய்து அவரை என்னுடன் தொலை பேசியில் தொடர்புகொள்ளுமாறு வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய பெயருக்கு அவர் களங்கம் ஏற்படுத்தி இருப்பதால் சுனீஷ் காண் உடைய உளறல்களுக்கு நீண்டதாக அல்லாமல் மிகவும் சுருக்கமாக என் விளக்கத்தை நான் கொடுத்தேயாக வேண்டிய கட்டாயம் உள்ளது . அதற்கு Jaffna Muslim வாய்ப்புத்தரும் என்று நம்புகிறேன். நன்றி.
தேர்தல் என்று வரும் பொது ஒரு பிரதான கட்சியில் மற்றவர்கள் இணைந்து போட்டியிடுவது வழமை . ஆனால் அதனால் அவர்கள் அந்த கட்சிக்காரர் ஆகிவிடமுடியாது கேள்வி 1 , 2 , 3 என்பனவற்றில் சொல்லியிருந்தேன் .
முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து கேட்கிறபோது ( மக்கள் ஆதரவு அந்த முடிவுக்கு சாதகமானது அல்ல என்பதால் ) இலகுவாக வாக்குகளை பெற்று விடலாம் என்கிற நோக்கத்தில் தான் அவர் சுயேட்சையாக குதிக்க ஆயத்தமானார் . ஆனால் ஒன்றிரண்டு மணித்தியாலங்களுக்ககுள்ளாகவே அந்த ஆசையில் மண் விழுந்ததனால் அவர் மு.கா வில் வந்து ஒட்டிக்கொண்டார் என்பதைத்தான் கேள்வி 4 லில் சொல்லியிருந்தேன், அதற்கு உடந்தையாக இருந்ததனால் தான் கேள்வி 10 இல் ரன்காவை கொஞ்சம் சீண்டினேன் .
பீ பீ சிக்கு சம்பந்தன் சொன்னது இங்கு தேவை அற்றது , ஹகீம் அப்படி தமிழர் கூட்டணியுடன் சேர்வதாக எங்காவது சொன்னாரா என்பதே என் கேள்வி . " காண் " ( ? ) வீணாக தேவையில்லாமல் .......முழங்காலுக்கு முடிச்சு போடுகிறார் .
தம்புள்ளை விசயத்தில் ஹகீம் மட்டுந்தான் கதைத்தார் என்று நான் சொல்லவில்லையே . பௌஸி , ரிஷாத் அங்கு போனார்கள்தான் ஆனால் அந்த நிகழ்வை காட்டமாக விமர்சித்தவரும் அரசின் மீது தைரியமாக விரல் நீட்டியவரும் ஹகீம் மட்டுமே என்பதைத்தான் நான் சொன்னேன்.
அஸாத் சாலி அவர்களுக்கு Jaffna Muslim இதற்கு பதில் அளிக்க வாய்ப்பளிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார் . ஐயா " காண் " அவர்களே ! நான் என் கேள்விகளை அஸாத் சாலி அவர்களிடந்தானே கேட்டிருந்தேன் , நீங்கள் எதற்காக இடையில் பாய்ந்தீர்கள் ?
ஊடக தர்மம் , எழுத்து நாகரீகம் பற்றியெல்லாம் " காண் " எனக்கு வகுப்பு நடத்தியிருக்கிறார் . அரிவரி கூட படித்திராதவர் போல எழுதியுள்ள அவரிடம் நான் ஊடக தர்மம் படித்தால் என் நிலை அம்போ தான்.
கடைசியாக ஒரு உண்மையை சொல்லியாகவேண்டும் . நான் தானாக அந்த கட்டுரையை எழுதவில்லை. கட்சியின் போராளிகள் " அஸாத் சாலி " க்கு பதில் சொல்வதே இல்லையா? என்று நேரிலும் தொலை பேசியிலும் துளைத்துத் துளைத்து எடுத்ததனால், அது மட்டுமல்லாமல் என் ரத்தமும் கொதித்ததனால் வேறு வழியே இல்லாமல்தான் அன்று நடு இரவில் அதனை எழுதினேன்.
இன்று நடு இரவிலும் அதே காரணங்களுக்காகத்தான் இதனையும் எழுதுகிறேன்.
" காண் " என்கிற நின்ஜா மனிதன் 072 8580503 என்கிற என் அலை பேசிக்கு அழைப்பெடுப்பார் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் . ( என் பெயர் ஹஸீர் என்பதைப் போலவே இந்த அலை பேசி இலக்கமும் உண்மையானதுதான் . நாங்கள் முகமூடி அணிவதில்லை ....... )
ஆசாத் சாலி மு காவில் சேர்ந்து விட்டார் என்றே செய்தி வழங்கப்பட்டது ஏன் ? தேர்தல் காலத்தில் அவர் மு காவை சேர்ந்தவர் அல்ல என ஏன் ஹகீம் சொல்லவில்லை. பேரம் பேசுவோம் என்றால் தமிழ் கூட்டமைப்புடனும் பேசி சேருவோம் என்பதுதான் அர்த்தம். இல்லாவிட்டால் அரசுடந்தான் சேர்வோம் என மு கா அறிவித்திருக்க வேண்டும். அப்படி செய்யாதது ஏமாற்று வேலை. தம்புள்ள சம்பவத்தை பற்றி காத்தான்குடியில் கடுமையாக பேசிய ஹகீம் கொழும்பு வந்ததும் எமது பேச்சை பெரிதாக எடுக்க வேண்டாம் என ஜனாதிபதி முன்பு பேசினார். இது ஒரு பச்சையான ஏமாற்று வேலை அல்லவா ?- முபாறக்
ReplyDeleteDear Bro Haseer
ReplyDeletePlease be cool. The way you write seems you have blood pressure problem or depression etc.
I read your article as well as Hanees'. Why you are so emotional in your replies and articles. You have said that in Hanees khan the "khan" is written wrong. Is it a matter? . It may be a typing mistake. Are you a perfectionist? Even I found the "lakara" "zhakara" problem in your writings but took it as a typing mistake. Don't be so emotional you will become a heart patient (or already a heart patient) very swiftly.
Write the subjects definitely we do not want your emotions. By the way I never knew you are a brother of Rauff Hakeem but you have confirmed it and also the new info I got is that you are the media secretary to SLMC. whether we like or not SLMC represents the Sri Lankan Muslims nationally and internationally your part being a media personality is very unique and to be highly professional. You are definitely lacking professionalism in your writing. I am sure your brother Rauff will agree with me. A professional training has become a must for you to avoid further damage to your bor's party.
Let people say or write anything about us, if we need to reply them in a decent manner we do it or it will be better to shut up than fighting on the road. Other communities will see as barbarians. Your writing shows you have a tendency to find wrong in others and publicizing it to cover your fault. This is a physiological problem people normally have when they have emotional disturbances.
Just imagine if you have this much of emotional disturbances, how much we (the Eastern Muslim) should have. Because the blood-shed, sweat-shed and enormous life-shed grown tree (the SLMC) is with your family and enjoying the harvests while the farmers (We) have been watching it out of the parapet wall.
Last but not least, be islamic (I.e. professional) in your writing.
-Abuaymen-
Dear Bro. Abuaymen ,
ReplyDeleteThanks for your advice, but for your information " I am not the media Secretary " of my brother Hakeem .
Rgds.
Hazeer
முஸ்லிம் காங்கிரசுடைய அரசியல் வரலாற்றில் நிறைய பேருக்கு (அரசியல் அநாதைகளுக்கு) SLMC இடம் வழங்கி இருக்கின்றது. இது போன்றுதான் அசாத் சாலிக்கு இடம் வழங்கப்பட்டது. ஆனால் இவ்வாறான பச்சோந்திகள் மரம் விட்டு மரம் தாவுவார்கள் என்பது நாம் அறிந்த விடயமே.. இவ்வாறானவர்களை நம்பி வாக்களித்தால் மறுகணமே சலுகைகளுக்காக மற்றவர்களோடு ஒட்டிவிடுவார்கள். தற்போது கூட அரசனும் இல்ல புருசனும் இல்ல என்கிற நிலைமைக்கு வந்துவிட்டோமே என்கிற கோபத்தில்தான் பேசுகின்றார்..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDear brother Abuayman
ReplyDeleteWhat a miracle in medicine. You have found a new way to diagnose blood pressure, depression, emotional problems and other psychiatric problems with someones writings. Great, I just advice you to consult a psychiatrist before the conditions get worst. He will look after the rest.
Hi jhon smith
ReplyDeleteIt looks you are Christian, or Mr Harees in christian name. It completely shows your cowardice. If you are not Haris then must be a non muslim so do not call me brother. We can be friends a nonmuslim don't deserve to be called as brother.
If you work for Rauff Hakeem or his brother, Harees you have really done your part well. By the way your writing shows your ignorance. I think you case is as you mentioned that you sickness have got the worst and beyond curable. According to psychology; people who suffer from psychosis talk about psychiatrist as they very often see them.
Take care of your sickness. If your not Harees. You must be suffering from psychosis.