அமைச்சர் றிசாத்திற்கு எதிராக சதி - அமைச்சர் பஸில் ராஜபக்ஸ
அமைச்சர் றிசாத் பதியுதீனை திட்டமிட்ட வகையில் குற்றவாளியாக்கும் சதி முயற்சி குறித்து அமைச்சர் பஸில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் பஷில் ராஜபக்ஸவுக்கும் இடையே நடைபெற்ற இச்சந்திப்பின் போதே இவ்விடயம் பஸில் ராஜபக்ஸவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு முழு அளவில் வாக்குகள் கிடைக்காமல் போனமைக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் முழு அளவிலான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமையும் காரணமென இதன்போது பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சர் றிசாத் நீதிமன்ற வழங்கு விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருந்தமையால் அவரால் தேர்தல் பிரச்சாரங்களில் முழு அளவில் ஈடுபட வாய்ப்பிருக்கவில்லையெனவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அமைச்சர் றிசாத்தை சதிவலையில் சிக்கச்செய்வதன் மூலம் சிலர் நன்மையடையப் பார்ப்பதாக தெரிவித்துள்ள பஸில் ராஜபக்ஸ, இதுபற்றி போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், எனவே அமைச்சர் றிசாத் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
அமைச்சர் பஸிலுக்கும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்குமிடையே நேற்று நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட முக்கிய அரசியல் பிரமுகரே இத்தகவலை யாழ் முஸ்லிம் இணையத்திடம் தொலைபேசி தொலைபேசி மூலமாக உறுதிப்படுத்தினார்.
முஸ்லிம் என்கிற பெயரை இவர்கள் துடைத்தெறிந்து விட்டபிறகும் இன்னும் அதனை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்பது விளங்கவில்லை .பத்திரிகை ஆசிரியர்களும் , வலைத்தள ஆசிரியர்களும் இதை கவனிக்காமல் விடுவது அவர்களின் கவனயீனத்தையே காட்டுகிறது . தயவுசெய்து இனிமேலாவது "முஸ்லிம்" என்பதைவிடவும் சிறந்தது என்று அவர்கள் தெரிவுசெய்துள்ள "மக்கள்" என்கிற சொல்லை பாவிப்பீர்களா ? நன்றி .
ReplyDeleteஎல்லோரும் நல்லவரே,சந்தர்ப்பம் கிடைக்கும் வரை.
ReplyDeleteமுஸ்லிம் என்றே பெயரை திரு. றஊப் ஹகீமே பயமில்லாமல், கூச்சமில்லாமல், அலட்டிக்கொள்ளாமல் பயன்படுத்தும் போது மற்றவர்கள் பயன்படுத்துவது தவறில்லேயே. முனாபிக் தனமுள்ளவன் முஸ்லீமாக இருக்க முடியாது.
ReplyDeleteசோதரர் ஹரீஸ் அவர்களே, வீட்டில் முதலில் உட்சுவர் பூசவேண்டும் பிறகுதான் வெளிச்சுவர்.
-Kilakkan-