கஷ்டப்பட்டு படித்த மாணவி தேசிய மட்டத்தில் சாதனை படைத்தார் (படங்கள் இணைப்பு)
கண்டியிலிருந்து ஜே.எம்.ஹபீஸ்
அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவி ஐந்து மைல் தூரம் பாடசாலைக்கு நடந்து வந்தே கல்வி கற்றுள்ளார். இவருக்கு மத்திய மாகாண ஆளுனர் காரியாலயத்தில் இன்று (26.9.2012) வரவேற்பளிக்கப்பட்டது.
கண்டி மாவட்டத்திலுள்ள தலாத்துஓயா கனிஷ் வித்தியாலயத்தைச் சேர்ந்த மதுசாந்தி லியனகே என்ற மாணவி 196 புள்ளகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். அதேநேரம் மாத்தளை மாவட்டத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா வித்தியாலயத்தைச் சேர்ந்த சந்தருவன் விஜேரத்ன என்ற மாணவன் 194 புள்ளிகளைப் பெற்று மாத்தலை மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டார்.
மத்திய மாகாணத்தில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றமை குறித்த இவர்கள் இருவரும் இன்று மத்தியமாகாண ஆளுணர் காரியாலயத்திற்கு அழைக்கப்பட்டு பரிசு விங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
சம்பத் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி என்பன இவர்களுக்கு புலமைப் பரிசில்களையும் உடன் வழங்கியது.
மத்திய மாகாணக் கல்விப் பணிப்பபாளர் திலக் ஏக்கநாயக்கா, பிரதிப்பிணிப்பாளர் ஜயசேக்கர, உதவிக் கல்விப்பணிப்பாளர் என்.எம்.எம். நஸார் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
PAARAATTHUKKALPALA.
ReplyDeleteகல்விதான் கைக்கொடுக்கும் மருந்து இந்த மாணவி மூலம் இவரின் கிராமதிட்கு விடிவு கிடைக்க வேண்டும் கஷ்ட நிலையிலும் தன் முயட்சியால் நாட்டை திரும்பி பார்க வைத்த சுட்டி பெண்ணுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்
ReplyDelete