சம்மாந்துறை அல் இஹ்லாஸ் இஸ்லாமிய கலாபீட புதிய மாணவர்கள் அனுமதி
சம்மாந்துறை தைக்காப் பள்ளிவாசல் மேல்மாடியில் இயங்கி வருகின்ற அல் இஹ்லாஸ் இஸ்லாமிய கலாபீடத்தில் புதிய மாணவர்கள் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன விண்ணப்ப முடிவுதிகதி 2012 செப்டம்பர் 30ம் திகதி என பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
அனுமதிக்கான நிபந்தனைகள்.
* 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீடசைக்கு தேற்றியவராய் இருத்தல்.
* ஆல்குர்ஆனை பார்த்து ஓதக் கூடியவராய் இருத்தல்.
* மாணவர்களின் சீருடை வெள்ளை நிரமாக அமைவதுடன் இஸ்லாமிய 'ஷரீஅத்'; முறைப்படி அமைதல்.
* சுத்தமும், குறித்த நேரத்துக்கு சமுகம் கொடுத்தல் அத்துடன் கலாபீடத்துக்கு சமூகமளிக்காமை தொடர்பாக முன்கூட்டி அறிவித்தல்.
அல்குர்ஆன் மனனம் (ஹிப்ளு) அறபு, தீனிய்யா, தஜ்வீத் போன்ற ஆத்மீகக் கல்வியுடன் தமிழ், வரலாறு, விஞ்ஞானம், கணிதம், கணினி போன்ற கல்வியை பாடசாலையின் புதிய கல்வித்திட்டத்துக்கு அமைவாக பயிற்றுவிப்பதுடன் அல்ஆலிம், அஹதிய்யா பாடசாலை பரீட்சைக்கு தயார் படுத்தக் கூடிய சிறந்த தகுதிவாய்ந்த ஆசிரியர்களை கொண்டு இயங்கும் அல் இஹ்லாஸ் இஸ்லாமிய கலாபீடம் ஆண்டு 06 தொடக்கம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரைக்கும் 06 ஆண்டு கற்கை நெறியினை கொண்டதெனவும் அதிபர் தெரிவித்தள்ளார்.
Post a Comment