முஸ்லிம்களின் இருப்பை பாதுகாக்க ஒன்றுபடுங்கள் - இஸ்லாமிய மாநாட்டில் தீர்மானம்
இக்பால் அலி
ஜமாஅத் அன்சாரில் சுன்னதில் முஹம்மதிய்யா அமைப்பினர் குருநாகல் மாவட்டத்திலுள்ள பறஹகதெனியவில் ஏற்பாடு செய்திருந்த இருநாள் வதிவிட இஸ்லாமிய தேசிய மாநாட்டில் 9 தீர்மானங்கள் தக்பீர் முழங்க நிறைவேற்றப்பட்டன. இதனை முஹம்மதிய்யாவின் உண்மை உதய சஞ்சிகை ஆசிரியர் அஷஷய்க் எஸ். எச் இஸ்மாயீல் வாசிக்க பல்லாயிரக் கணக்கான மக்கள் தக்பீர் முழங்க தீர்மானங்கள் நிறைவேறின.
முஸ்லிம்கள் தம் உயிரிலும் மேலாக மதிக்கும் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட 'இனசன் ஒவ் முஸ்லிம்' என்ற குறுந்திரைப் படத்தயாரிப்பாளர்களையும், அதற்கெதிராகவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் அமெரிக்காவையும் அதன் வெளியிட்ட யூடிப் இணைய வலய நிருவாகிகளை இம்மாநாடு மிக வன்மையாகக் கண்டிருக்கிறது.
மேற்படி திரைப்படத்தை இலங்கை சனநாயக சோஸலிசக் குடியரசின் புத்தசாசன அமைச்சு இலங்கையில் தடை செய்தமைக்காக இம்மாநாடு புத்தசாசன அமைச்சுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த நாட்டில் வாழும் மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி வணக்கஸ்தலங்களின் உடைத்தல் அல்லது அவற்றுக்கு எதிராகச் செயற்பட்டு ஒற்றுமையைக் குலைக்க முயற்சி செய்யும் அனைத்து தீய சக்திக்கும் எதிராக அரசு உரிய நடவடிக்கை எடுக்கமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் அவர்களது இருப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
அநீதிகளிலெல்லாம் மிகப்பெரிய அநீதியான ஷிர்க்கை ஒழித்து தவ்ஹீதை நிலைநாட்ட அனைவரும் பாடுபட வேண்டுமென உங்களை அனைவரையும் இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட அனைத்து பித்அத்துக்களையும் மூட நம்பிக்கைகளையும் ஆனாச்சாரங்களையும் ஒழித்து தூய இஸ்லாத்தை நிலைநாட்ட நாம் அனைவரும் பாடுபட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
இஸ்லாத்தின் பெயரால் பிரிந்து கிடக்கின்ற இச் சமுதாயம் அல்குர்ஆன் சுன்னாவின் பெயரில் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
வட்டி, வரதடசனை, மது, சூது, கொலை. கொள்ளை, ஆபாசம், விபச்சாரம், சிறுவர் துஷ;பிரயோகம் போதைப் பொருட்கள் பாவனை போன்ற பெரும்பாவங்களிலிருந்து விலகிவாழ வேண்டும் என அனைவரையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
பல்லின சமுதாயம் வாழும் இந்நாட்டில் வாழக் கூடிய முஸ்லிம்கள் மாற்றுமத மக்களோடு நீதமாகவும் முன்மாதரியாகவும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
கொள்கைச் சகோதரர்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும், புரிந்துணர்வுடனும் செயற்பட வேண்டும் எனவும் ஏனையோருக்கு முன் மாதரியாகத் திகழ வேண்டும் என இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது
இம் மாநாட்டில் நாட்டின் பல பாகங்களிலிருந்து சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
முஹம்மதிய்யா அமைப்பின் பொதுத் தலைவர் அஷஷய்க் என்.பி.எம்.அபூபக்கர் சித்தீக்(மதனி) தலைமையில் நடைபெற்ற இந்த இருநாள் மாநாட்டில் கைத்தொழில் அபிவிருத்தி, வாணிப அமைச்சர் றிசாட் பதியுதீன், வன்னி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாறுக், அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் பொதுத் தலைவர் அஷஷய்க் ரிஷவி முபத்தி, பொதுச் செயலாளர் அஷஷய்க் எம்.எம்.ஏ.முபாரக் (மதனி) ஜாமிஆ நளீமிய்யா கலாபீட பிரதிப் பணிப்பாளர் அஷஷயக் அகார் முஹம்மத், ஜம்இய்யதுல் ஷபாப் அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம்.றஷPத், பிரதிப் பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம்.தாஸீம், அமைப்பின் இணைப்புப் பணிப்பாளர் சபர் சாலி, புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரி அதிபர் மௌலவி அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், முஹம்மதிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் ஏ.எல்.கலீலுர்ரஹ்மான், நிதாஉல் ஹைர் அமைப்பின் தலைவர் அஷ;;nஷஷய்க் எஸ்.எல்.நௌபர், சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைப் பிரதிநிதி மௌலவி இம்றான், இலங்கை ஹிக்மா மன்றத்தின் தலைவர் அஷ;nஷய்க் எம்.சேகுதீன் உட்பட குவைத், சவூதி அரேபியா, இந்தியா நாடுகளின் முஸ்லிம் அறிஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment