Header Ads



வடிகான் நிர்மாணம் (படங்கள் இணைப்பு)


சௌஜீர் ஏ முகைடீன்

மணற்சேனை சவக்காலை வீதியின் வடிகான் ஏழு இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டது. நேற்று மாலை இடம்பெற்ற இதன் அங்குரார்பன வைபவத்தில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், அதிதியாக மாநகர சபை உறுப்பினர் ஏ. அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். கடந்தகாலங்களில் வடிகான் இன்மையினால் இவ்வீதி  பருவகால மழையின்போது நீரில் மூழ்கி காணப்படுவது வழக்கமாக இருந்தது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். முதல்வர் பதவி ஏற்ற சில மாதங்களின் பின் தமிழ் பிரதேசங்களுக்கான தனது முதல் விஜயத்தின்போது இவ்வீதி நீரில் மூழ்கியதனை நேரில் சென்று பார்வையிட்டு இதற்கான வடிகானை அமைத்துத் தருவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.





No comments

Powered by Blogger.