அப்பிள் - சம்சுங் மீண்டும் லடாய்...!
காப்புரிமை வழக்கில் மறு விசாரணை கோரி சாம்சங் நிறுவனமும், கூடுதல் இழப்பீடு கோரி ஆப்பிள் நிறுவனமும் மீண்டும் வழக்குத் தொடர்ந்துள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐ பாட் ஆகியவற்றின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களைப் பிரதி செய்து சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஸ்மார்ட் போன் தயாரிப்புகளில் பயன்படுத்தியதாக, ஆப்பிள் நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இரு நிறுவனங்களும் காப்புரிமை தொடர்பாக பரஸ்பரம் குற்றம்சாட்டி, 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் வழக்குத் தொடர்ந்துள்ளன.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 100 கோடியே 5 லட்சம் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.5,503 கோடி) ஆப்பிள் நிறுவனத்துக்கு சாம்சங் நிறுவனம் இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி தீர்ப்பு வெளியானது. இது, ஆப்பிள் நிறுவனத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்பட்டாலும், கூடுதலாக 70.7 கோடி அமெரிக்க டாலர் ( சுமார் ரூ.3,890 கோடி) இழப்பீடு கோரி ஆப்பிள் நிறுவனம் மீண்டும் வழக்குத் தொடர்ந்துள்ளது.
அதேசமயம், வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் எனக் கோரி சாம்சங் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. முன்னதாக, ஜப்பான் நீதிமன்றம் சாம்சங் நிறுவனம் மீது ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment