அல்குர்ஆனை எரித்த சிறுமியை விடுதலை செய்க - பாகிஸ்தானிடம் அமெரிக்கா கோரிக்கை
புனித குரானின் பக்கங்களை எரித்த குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மனநிலை பாதிக்கப்பட்ட கிறிஸ்துவ சிறுமியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை, அமெரிக்க எம்.பி.க்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வசிக்கும் ரிம்ஷா மசி (11) என்ற சிறுமி, முஸ்லிம்களின் புனித குரானின் பக்கங்களை எரித்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டாள். இதனால் மேலும் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சத்தில் கிறிஸ்துவர்கள் பலர் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
இதற்கிடையில், சிறுமி மனநிலை பாதிக்கப்பட்டவள் என்பதும் அதற்கான ஆதாரங்களும் அளிக்கப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்க எம்.பி.க்கள் ராபர்ட் மெனன்டஸ், ராய் பிளன்ட், பென் கார்டின், மார்க் கிர்க், பாப் கசே, மைக் ஜோஹன்ஸ் ஆகியோர், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், பாகிஸ்தான் மக்களுக்கு வழங்கப்படும் சட்ட பாதுகாப்பு மற்ற சிறுபான்மை மதத்தவருக்கும் வழங்கப்பட வேண்டும். மத சகிப்புத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். சிறையில் வாடும் மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை விடுவிக்க, அதிபர் சர்தாரி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
நான் இது வரை கேள்விப்படவில்லை பைபிலை மனநிலை பாதிப்படைந்தவர்கள் எரித்து விட்டார் என்று ஆனால் இஸ்லாத்துக்கும் இஸ்லாமியர்களுக்கும் தீங்கிழைப்பவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகி விடுகிறார்கள். அத்துடன் முஸ்லிம்கள் அடுத்த மதத்துக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தில் உள்ளது,அதன் அடிப்படையில் யாரும் எத்தீங்கும் மற்றைய மத ஸ்தாபனங்களுக்கோ,மதபோதகர்களுக்கோ,மதப்புத்தகங்களுக்கோ செய்வதில்லை.
ReplyDeleteirunthalum enathu karuthu enne ventral 11 vayathu sirumi enpathaal quran anin tharpariyam theriyatha vayathu enpathalum antha sirimikku mannippu kodukkalam, entru naan ninaikiiren
ReplyDeleteநிச்சயமாக மன்னிக்கனும் என்பதில் தான் நானும் இருக்கிறேன்.
ReplyDeleteAmericavil mana nilai paathikkappaddavarkal neraiya per endru sollalam, ean entral ovvoru sampavam nadantha pirahu ithai than solluvarkal,,,,moththaththil OBama kooda....avaruthan.......
ReplyDeleteMarappom Mannippom.....Allah Akbar....