Header Ads



உலகின் மிகச் சிறிய கார் - இது மாணவர்களின் சாதனை (படங்கள்)



மிகச் சிறிய 45.2 செ.மீட்டர் உயர கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காரை ஜப்பானில் அசாகுசி என்ற இடத்தில் உள்ள ஒகயாமா சான்யோ உயர் நிலைப் பள்ளியின் ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங் மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

இந்த கார் 6 பேட்டரிகளால் ஓடக் கூடியது. இதன் அமைப்பு, ஸ்டீயரிங் சிஸ்டம், விளக்குகள், இருக்கைகள் உள்ளிட்டவை ஒகயாமா சான்யோ பள்ளி மாணவர்களால் தயாரிக்கப்பட்டது. அதில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் என்ஜின்கள், மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் ஜப்பானின் கியூ கார் நிறுவனத்தில் தயாரானது.

இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் உலகிலேயே மிக சிறிய கார் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இதற்கு முன்பு கடந்த 1989-ம் ஆண்டு ஆன்டி சான்டர்ஸ் என்பவர் தயாரித்த 53 செ.மீட்டர் உயர கார் மிகச் சிறிய கார் என்ற சாதனை படைத்து இருந்தது. 

No comments

Powered by Blogger.