'இலங்கையில் சிங்கள இனத்தை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை'
சிங்கள இனத்தை இலங்கையில் பாதுகாக்கும் முக்கிய காரணியாக விளங்கும் பௌத்த சமயத்தை மேம்படுத்துவதற்கு தற்போதுள்ள எந்தவொரு மக்கள் தலைவரும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கலாநிதி எல்லாவலை மேதானந்தா தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற தர்பாலாவின் 148 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எல்லாவலை மேத்தானந்தா தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
உலகத்தில் சிங்களவர் என்று இன்னொரு இனம் எமக்கு உறவினராக இல்லை. நமக்குத் தொடர்புள்ளதான ஒரே சக்தி பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்டதே. அதனால்தான், அநாகரீக தர்பாலா சிங்கள இனத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் பௌத்த சமயத்தை உலகம் பூராவும் கொண்டு சென்றார்.
ஆனால், கடைசியில் சிங்கள இனத்தை இலங்கையில் பாதுகாக்கும் முக்கிய காரணியாக விளங்கும் பௌத்த சமயத்தை மேம்படுத்துவதற்கு தற்போதுள்ள எந்தவொரு மக்கள் தலைவரும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்
Post a Comment