வெற்றியுடன் இருவரும், வெறுங்கையுடன் ஐவரும் ஊர் நோக்கிச் செல்லுதல்
கம்மத் ஷௌகி
வழமையில் மகாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “மின்னல்” நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரையே இடம் பெறும். இன்று அந்த நிகழ்ச்சி குறித்த நேரத்துக்கு ஒளிபரப்பாகி முடிந்து மீண்டும் தொடர்ந்து 9.30 முதல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வேளை இந்தக் குறிப்பு எழுதப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி இன்று நீண்டு போகக் காரணம் அதில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து தன்னிலை விளக்கம் அளித்து வருகிறார். கூடியவரை இந்நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்த்து வந்த அவர் இன்று அதில் கலந்து கொண்டமைக்கும் அது நீண்டு செல்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
பதினைந்து தினங்களுக்கு முன்னர் கொழும்புக்கு அழைக்கப்பட்ட புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மு.காவின் மாகாண சபை உறுப்பினர்கள் இன்னும் ஊர் திரும்பவில்லை. அமைச்சுப் பதவிகளில் இடம் பெறும் இழுபறி ஒரு காரணம். அரசுக்கு எதிராகவும், பள்ளிவாசல் தாக்குதல்களையும் வைத்து அரசியல் செய்து விட்டு மீண்டும் அரசுடன் சேர்ந்து கொண்டதும் அமைச்சுப் பதவிகளுக்காக ஆளுக்காள் வாதப் பிரதிவாதங்கள் செய்து கொண்டிருப்பதனால் வாக்களித்த மக்களும் மு.கா. போராளிகளும் கட்சித் தலைமையுடனும் தெரிவான அங்கத்தவர்களுடனும் கடும் கோபத்தில் இருப்பது அடுத்த காரணம்.
கொழும்பில் ஜாகையடித்துப் பதவிப் போராட்டம் நடத்தி வரும் அங்கத்தவர்கள் தமக்கு ஊர் திரும்பினால் பல்வேறு சிக்கல்களுக்கு முகங் கொடுக்க வேண்டிவரும் என்பதை அங்கிருந்து வரும் தகவல்களைக் கொண்டு அறிந்து தலைவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அத்துடன் தலைவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோன்றி ஒரு விளக்கத்தைக் கொடுத்தால் அதை வாக்களித்த மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற அடிப்படையில்தான் இந்த மின்னல் நிகழ்ச்சி நீண்ட நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது.
ஞாயிறு முதல் எல்லா ஊடகங்களுக்கும் தமது பக்க நியாயங்களை எடுத்துச் சொல்லி வாக்களித்தவர்களையும் தொண்டர்களையும் அமைதிப்படுத்தி விட்டால் தாம் சேமமாக ஊர் திரும்பி தத்தமது வேலைகளி்ல் ஈடுபடலாம் என்ற என்ற மாகாண சபை அங்கத்தவர்களின் வேண்டு கோளுக் கிணங்கவே ஞாயிறு காலை மு.கா. தலைமையகத்தில் செயலாளர் ஹஸனலியினால் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
இதே வேளை மின்னல் நிகழ்ச்சி நடத்துனரான ரங்கா என்பவரே இன்று மு.காவின் அரசுடனான இணைப்பை காட்டமாக விமர்சிக்கும் அஸாத் சாலியை மு.காவுக்குள் கொண்டு வந்து விட்டதாக மு.கா. தலைவரின் சகோதரர் ஹஸீர் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்று எழுதிக் குற்றம் சாட்டியிருந்தார். இந்தச் செய்தி ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் இடம் பெற்றிருந்தது. எனவே தம்மீது மு.காவினர் கோபம் கொள்ளக் கூடும் என்ற பயத்தினால் ரங்கா இந்த நிகழ்ச்சியை நீளமாக நடத்திக் கொடுத்துள்ளார்.
”இனி மின்னல் நிகழ்ச்சி முழுவதுமே முஸ்லிம் காங்கிரஸ்தான் - என்று அண்டப் புளுகை அவிழ்த்து முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளை ஏமாளிகளாக்கிய மகாராஜா ஏஜன்ட் ஒரு நிகழ்ச்சி கூட நடத்தாம எங்கே போய்த் தொலைஞ்சார் என்று கொஞ்சம் சொல்லுங்களேன்!” என்று மிகவும் சினத்துடன் ரங்காவைப் பற்றி அஸாத் சாலியிடம் மு.கா. தலைவரின் சகோதரர் ஹஸீர் கேள்வி விடுத்திருந்தார்.
ரங்கா மு்.கா விடமிருந்து தப்பித்துவிட்டார். ஆனால் மு.கா. மாகாண சபை உறுப்பினர்கள் வாக்களித்த மக்களினதும் போராளிகளினதும் வினாக்களிலிருந்து தப்புவார்களா என்பதை அவர்கள் ஊருக்குச் சென்றால்தான் தெரிய வரும்!
..
எப்படித்தான் விளக்கம் அளித்தாலும் உங்கள போல சில பேர் இருக்குரவரைக்கும் சமூகம் ஒன்றாகாது
ReplyDeleteஇந்த கட்டுரையில் சரக்கு ஒன்றும் இல்லியே! வெறுமனே மு.காங்கிரஸ் தலைவரை வசைபாடுவதாகவே அமைந்துள்ளது.
ReplyDeleteபொருப்பு வாய்ந்த ஜப்னா முஸ்லிம் இணையம் இதற்கு களமமைத்துக் கொடுத்துள்ளதா?
எல்லாம் மாயை. இன்னுமா "மக்களுக்காக" என்ற பெயரில் சமூகத்தைப் பிரிக்கும் இன்னிகழ்ச்சிகளுக்கு சென்று காலத்தை வீணடிக்கிறார்கள்? SLMC குள் இருக்கும் அரசியல் குழப்பங்களை நமது மீடியாக்கள் கிண்டாமல் இருப்பது நலம். இல்லாவிட்டால் எதாவது ஒரு முடிவுக்கு வரமாட்டார்கள். ஒரு முடிவுக்கு வரட்டும். இந்த உலகத்துடன் எல்லாமே முடிந்து விடாதே! மறுமையில் அல்லாஹ்வுக்கு அவர்களும் பதில் சொல்ல வேண்டும் தானே! அப்பொழுது பார்த்துக் கொள்வோம். மக்கள் ஒற்றுமையைக் காட்டிவிட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது இவர்கள் கடமை.
ReplyDeleteDear viewers!
ReplyDeleteWe are very good Lawyers for our mistakes
Very good Judges for other’s mistakes