முஸ்லிம் காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் (படங்கள்)
எம்.எம்.ஜெஸ்மின்
அதிகாலை 2 மணியளவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் சிரேஷ்ட பிரதித் தலைவரும், உயர்பீட உறுப்பினருமாகிய ஏ.எல்.அப்துல் மஜீட் (முழக்கம் மஜீட்) மற்றும் கல்முனை மாநகரசபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரசின் சாய்ந்தமருது அமைப்பாளரும், உயர்பீட உறுப்பினருமாகிய எம்.ஐ.எம்.பிர்தௌஸ் ஆகியோர்களது சாய்ந்தமருதில் அமைந்துள்ள வீடுகள் மீது குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக கல்முனை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிசார் ஸ்தலத்துக்கு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Post a Comment