கல்முனை சமாதான கல்வி அதிகாரி காலமானார்
எம்.எம்.ஜெஸ்மின்
கல்முனை கல்வி வலயத்தில் சமாதான கல்வி அதிகாரியாக கடமையாற்றிய எஸ்.எம்.எம்.றாபிக் புதன்கிழமை கண்டி போதனா வைத்தியசாலையில் காலமானார். கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவரான இவர் சிறந்த கட்டுரையாளர் , எழுத்தாளர் மற்றும் கவிஞருமாவார்.
பாடசாலை காலத்தில் எழுத்துதுறையில் சிறந்து விளங்கிய இவர் ஆசிரிய பணியில் ஈடுபட்ட காலத்தில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியனை வழங்கி இருந்தார். அமைதியான போக்கு சிறந்த கருத்தாளமிக்க சிந்தனை போக்குள்ள இவரின் திடீர் மறைவு சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு பேரிழப்பாகும்.
இன்னாளில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியுன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇறைவா! இவருக்கு உயர்வான சுவர்கத்தை வழங்குவாயாக!