Header Ads



''சமூகத்தை பீடித்துள்ள பிரதான நோய்'' - மௌலவியா ராளியா நவாஹிர்


ஜே.எம். ஹபீஸ்

மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கம் ஒழுங்கு செய்த 'சமூக அபிவிருத்திச் செயற்பாட்டில் பெண்களின் பங்கு' என்றதொனிப் பொருளில் செயலமர்வு (22.9.2012) இடம் பெற்றது.

முடவளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்ற இவ் அமர்வில் உரையாற்றிய கட்டுகாஸ்தோட்டை கல்விவலய முன்னாள் பிரதிக்கல்விப பணிப்பாளர் ஏ.எல்.ஏ.ஜெலீல் தெரிவித்ததாவது,

பெண்களில் அனேகர் நான் முறையாகக் கல்வி கற்க வில்லையே என ஆதங்கப் படுவது இயல்பு. கல்வி என்பதும் விழிப்படைவதும் வித்தியாசமான இரு அம்சங்கள். ஏட்டுக்கல்வியைக் கொண்டு தாமாகவே விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும். வாசிப்பைக் கொண்டு இதனை அடைந்து கொள்ள முடியும். இதற்கு குறிப்பிட்ட அடைவு மட்டம் தேவை. 

அப்படி குறிப்பிட்ட அடைவு மட்டத்தை எய்தாது உள்ளதுடன்  எழுத வாசிக்கத் தெரியாதவர்கள் பலர் எம்முடன் உள்ளனர். அப்படியாயின் இவர்களால் சமுகத்திற்கு ஏதும் செய்யமுடியாது என்று ஒதுக்கிவிடுவதா? அல்லது அவர்களே தம்மைத்தாம் தாழ்த்திக் கொள்வதா? என்ற நிலை ஏற்படலாம். 

அப்படியல்ல. இவ்வாறான செயலமர்வுகள், உபதேசங்கள், மற்றவர்களுடன் தமது கருத்தைப் பகிர்ந்து கொள்வது போன்ற வற்றால் விழிப்புணர்வு பெறலாம். இதற்கு தொடர்பாடல் திறனை மட்டும் விருத்தி செய்து கொள்ள வேண்டும். தோடர்பாடல் திறனை அபிவிருத்தி செய்வதற்கு மொழி வளர்ச்சி உதவிசெய்யும் என்றார்.

பன்னூல் ஆசிரியையும் கடந்த வருடம் இலங்கை சாகித்திய மண்டலத்தின் சிறந்த நாடக எழுத்தாளர் விருதை வென்ற ஜெஸீமா ஹமீட் தெரிவித்ததாவது,

சமூக அபிவிருத்தி வீடுகளில் இருந்தே ஆரம்பமாக வேண்டும். ஏனெனில் அன்னையின் வளர்ப்பிலேதான்  ஒரு குழந்தையின் எதிர்காலம் அமைந்துள்ளது. தொழிலின் நிமித்தம் வெளியே செல்லும் தந்தையால் அதனை முறையாகச் செய்ய முடியாது. தாயின் மன நிலைதான் அதற்குப் பொருத்தமானது. 

பெண்களின் மனோபாவம் விசித்திரமானது. இறைவன் அவ்வாறு தான் பெண்களைப் படைத்துள்ளான். பெண்கள் தாம் நினைத்ததை நிறைவேற்றும் பிடிவாதப் போக்கு கொண்டவர்கள். எனவே சமூக அபிவிருத்தி ஆரம்பமாக ஏற்ற இடம் வீடுதான் என்றார்.

மௌலவியா ராலியா நவாஹிர் தெரிவித்ததாவது,

இன்று சமூகத்தைப் பீடித்துள்ள பிரதான நோய் டியூஷன் வகுப்புகளும் வெளிநாட்டு வேளைவாய்ப்பு மோகமும் மற்றும் தொடர்பு சாதனப் பயன் பாடுமாகும். 

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆணையும் பெண்ணையும் தனிமைப் படுத்தி குடும்பம் என்ற கட்டமைப்பை அசைய வைக்கிறது. பின்னர் அசைவு கண்ட குடும்பங்ளில் இளம் பெண்களை டியூஷன் வகுப்புகளும் விட்டிலுள்ள பெண்களை தொடர்பு சாதனங்களும் சேர்ந்து சமூகச் சீரழிவு என்ற வைரஸ் காச்சலாகி இது எல்லவற்றையும் சிதைத்து விடுகிறது என்றார். 







No comments

Powered by Blogger.