Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் கவனத்திற்கு..!


யாழ். மாவட்டத்தில் யுத்தத்தினால் வீடுகளை இழந்த சகலரையும் கிராமசேவையாளர், பிரதேச செயலாளர் ஊடாகப் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மீள்குடியமர்த்தப்பட்ட பகுதியில் வசிப்போரில் வீடுகளை இழந்தவர்கள் உடனடியாகப் பதிவு செய்யுமாறும் இப்பதிவுகளை அப்பகுதி கிராமசேவையாளர் ஊடாக மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதற்கமைய குடும்பப்பதிவு அட்டை, தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பவற்றினைக் கிராம சேவையாளரிடம் கொடுத்து இந்திய வீட்டுத்திட்டத்துக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டச் செயலகம் இவ்வாறு அறிவுறுத்தியிருந்தாலும் கிராமசேவையாளர்கள் தமக்குரிய கட்டளைகள் பிரதேச செயலாளர்களால் வழங்கப்படவில்லை எனக் கூறி வீடுகள் இல்லாத மக்களை அலைக்கழித்து வருகின்றதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். vi

No comments

Powered by Blogger.