கிழக்கு தேர்தலே ரவூப் ஹக்கீமின் இறுதித் தேர்தல் - அஸாத் சாலி
கிழக்கு மாகாணத் தேர்தலே ஹக்கீமின் இறுதித் தேர்தலாகும். அவரால் இனிமேல் கண்டியில் அல்ல, அம்பாறையிலும் போட்டியிட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தில் பதவிவகிக்கக் கூடாது ௭ன்ற சிறந்த கொள்கையை இந்த அரசாங்கம் முறையாக அமுல்படுத்தினால், ராஜபக்ச குடும்பத்தில் ௭த்தனை பேர் மிஞ்சுவர் ௭ன்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இரண்டு அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது ௭ன்று தனக்கு அறிவுறுத்தியதை அடுத்தே அமைச்சர் ௭ஸ்.௭ம். சந்திரசேன தனது பதவியை இராஜினாமாச் செய்தார்.
அவ்வாறு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அமைச்சு பதவி வகிக்க முடியாது என்றால் சபாநாயகர் சமல் ராஜபக்ச பதவி விலகினால் ௭த்தனை பேர் பதவி விலக வேண்டும்.
கிழக்குத் தேர்தலில் நான் ஒரு வீட்டுக்கேனும் செல்லாது வாக்குகளை பெற்றேன். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு நேரமிருக்கின்றது. தாமதிக்காமல் கிழக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோரி பிழையை திருத்திக்கொள்ள வேண்டும். கிழக்கு மாகாணத் தேர்தலே ஹக்கீமின் இறுதித் தேர்தலாகும். அவரால் இனிமேல் கண்டியில் அல்ல அம்பாறையிலும் போட்டியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள அஸாத் சாலி மன்றத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சும்மா போங்கவா ஜோக்கடிக்க உங்களுக்கு இதுவா நேரம்??? ஆமா அரிசிபேக்கும் இரண்டாயிரம் ரூபா காசும் யாறு கொடுதாங்க வீடுகளுக்கு போய் வானலோகது மலக்குகளா இதே கதைய உங்களுக்கு வாக்களித்த மக்களை கூட்டி ஒரு மேடையில சொல்லி பாறுங்க அப்ப தெறியும் ??? மக்களின் பதில்???
ReplyDeletepogappaa! pooi waara waala eruntha saiga
ReplyDeleteஇவர் பேச்சைப் பாத்தா கிழக்கு மாகாண மக்கள் முட்டாள்கள். இவர்களுக்கு சொந்த மண்ணில் வெல்ல முடியாவிட்டால் கிழக்குக்கு வந்தால் சரி என்று சொல்வது போல் தெரிகிறதே!! சரிதான்பா, இவருக்கு கொழும்பில வெல்ல முடியாததால் தான் கிழக்கு வந்தார். மக்களே உங்களைச் சொல்லோனும்.எவ்வளவு திமிர் என்று பார்த்தீர்களா? SLMC விட்ட தவறுகள் (இவரை வேட்பாளராய் விட்டது உட்பட) வேறு விடயம், அதைவைத்து இவர் அரசியல் குளிர் காய முற்படுவது இன்னொரு விடயம். நீங்கெல்லாம் என்ன மக்களை வடிகட்டிய முட்டாள்களாய் நினைத்துவிட்டீர்களா? சுய லாபத்துக்காக சமூகத்தை மற்றவர்களின் முன் காட்டிக் கொடுக்க கொஞ்சமும் தயங்காத இவரது "சமுதாய அக்கறை" புல்லரிக்க வைக்கிறது.
ReplyDeleteஅரசியல் வாதிகளே(SLMC உட்பட)!!
மக்கள் உரிமையுடன் விளையாடாதீர்கள். நீங்கள் எதைப் "பயந்து" மக்களின் உரிமையில் கை வைக்கிறீர்களோ, உங்களின் செயல்களால் ஒரு நாள் உங்களை "அது" சூழ்ந்து கொண்டே தீரும். இது தான் வரலாறு. மக்கள் நலனை புறம் தள்ளி வேண்டுமென்றே கிடைக்க வேண்டியதை ஒதுக்கிய SLMC யும், அந்த விடயத்தை வைத்து குளிர்காய நினைக்கும் "மகாராஜா" நிறுவனத்தின் செல்லக் குழந்தைகளுக்கும் இதை எச்சரிக்கையாக வைக்கிறேன்.
அல்லாஹ்வுக்கு கொஞ்சமாவது பயப்படுங்கள். எதைக் கொண்டு நம்பிக்கை (ஈமான்) கொண்டீர்களோ அந்த மறுமை நாளில் உங்கள் "ரப்புக்கு" பதில் சொல்ல வேண்டும். அந்த நாளில், "யார் அரசன்?" என்று அல்லாஹ் கேட்கும் அந்த நாளில், எவரும் எவருக்கும் உதவ முடியா அந்நாளில் உங்களை மகிந்தவும் காப்பாத்த மாட்டார், உங்களை சூழ உள்ள ஒட்டுண்ணிகளும் காப்பாத்த மாட்டர், TNA மற்றும் மகாராஜாவும் காப்பாற்ற மாட்டர்.
ivarukku vera vvela illa.....
ReplyDelete@fashlin
ReplyDeleteஇப்படியெல்லாம் உண்மைய புட்டுப் புட்டு சொல்லக் கூடாது. வோட்டுப் போட்ட மக்களைக் கூட்டி சொன்னா தர்ம அடி விழுமெண்டு தானேவா கொழும்புக்கு வந்து சொன்னது.... இதெல்லாம் அரசியல்.