Header Ads



அவசரப்பட்டு விட்டாரோ..?


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் நிலையிலிருந்து மாலினி பொன்சேகா விலகுவதாக அறிவித்த பின்னர் தற்போது அவரின் உறுப்புரிமை தொடர்பில் நெருக்கடி நிலைமை தோன்றியுள்ளது.

மாலினி பொன்சேகா தமது உறுப்புரிமையிலிருந்து விலகுவதாக நேற்று நாடாளுமன்ற செயலாளரிடம் அறிவித்திருந்த நிலையில், செயலாளர் அது குறித்து தேர்தல்கள் ஆணையாளரிடம் அறிவித்திருந்தார். இருந்தபோதும், அவரது விலகல் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொள்ளவில்லை.

அதேவேளை, நாடாளுமன்ற செயலாளரின் உத்தியோகபூர்வ அறிவித்தலுக்கு அமைய மாலினி பொன்சேகாவின் வெற்றிடத்திற்கு புதிய ஒருவரை பரிந்துரை செய்து அவரின் பெயரை அனுப்புமாறு தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்திருந்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயாலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஒருவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தார் நேற்றிரவே வர்த்தமானியில் அறிவிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

இதேவேளை, மாலினி பொன்சேகா தமது நிலையிலிருந்து விலகவில்லை என்று அறிவித்த நிலையில், மீண்டும் அவரின் பெயர், குறித்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வர்;த்தமானியில் வெளியிடப்பட வேண்டும்.

இதனடிப்படையில், சபாநாயகர் முன்னிலையில் அவர் மீண்டும் சத்திய பிரமாணம் செய்து கொண்ட பின்னரே தமது தேசிய பட்டியல் உறுப்புரிமையை அவர் பெற முடியும் என்றும் தேர்தல் செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பெரும்பாலும் அவரின் பெயர் மீண்டும் பரிந்துரைக்கப்படும் என்று அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. sfm

No comments

Powered by Blogger.