கல்முனை மாநகர மேயர் கண்டனம்
சௌஜீர் ஏ முகைடீன்
புனித இஸ்லாம் மதத்தினையும் எமது உயிரிலும் மேலானா முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இழிவு படுத்தும் வகையில் சித்தரித்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அன்றைய அறியாமைக்காலத்தில் பெண்கெளுக்கெதிரான வன்முறைகளும் அட்டூழியங்களும் தலைவிரித்தாடிய காலப்பகுதியில் பெண்களை கண்ணியமானவர்களாகவும் சமூதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ்வதற்கான உரிமையினை வழங்குவதிலும் அரும்பாடுபட்டவரும் போர்களத்தின்போது நபியவர்களின் அன்புக்குரிய சாச்சா ஹம்ஸா (றழி) அவர்களின் ஈரலை கடித்து துப்பிய ஹிந்தா என்னும் பெண் மக்காவெற்றியில் கைதாகியபோது அப்பெண்மணிக்கும் மன்னிப்பளித்த கருணை உள்ளம் கொண்ட முஹம்மது நபி (ஸல்) அவர்களை முற்றிலும் முரண்பட்டவிதத்தில் சித்தரித்திருப்பதனை எந்த ஒரு முஸ்லிமினாலும் சகித்துக்கொள்ள முடியாத ஒரு ஈனச் செயலாகும்.
இஸ்லாத்தின் வளர்ச்சியினை சகித்துக் கொள்ள முடியாதவர்களினால் எமதுஉயிரிலும் மேலாக நேசிக்கும் இறுதித்துதரை இழிவுபடுத்தி படு மோசமான முறையில் சித்தரித்து வெளியிடப்பட்டுள்ள “இனசன்ஸ் ஒப் முஸ்லிம்” என்ற திரைப்படமானது உலகலாவிய முஸ்லிம்கள் அனைவரினதும் உள்ளங்களை புண்படுத்துகின்றவகையில் அமைந்துள்ளது. இஸ்லாத்திற்கு விரோதமான விஷமிகளின் இந்த இழி செயலினை எதிர்த்து இவ்வுலகவாழ் முஸ்லிம்கள் அனைவரும் கிளர்ந்தெழுந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர்.
இத்தகைய திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர், அனுசரணையாளர்கள் மற்றும் ஒளிபரப்பிய ஊடகங்கள் அனைத்துக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுத்து இதுபோன்ற இழி செயல்களில் ஈடுபட திட்டமிடுபவர்களுக்கு ஒரு பாடமாக தக்க தண்டனை வழங்க்கப்படவேண்டும். இவர்கள் தன்டிக்கப்படாதவிடத்து உலக முஸ்லிம்களின் தொடர்ச்சியான உணர்வுபூர்வமான போராட்டங்கள் நிறுத்தப்படப்போவதில்லை. அத்தோடு குறித்த திரைப்படத்தினை சகல இணைய தளங்களில் இருந்தும் நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
TOOOOOOOOOOOOOOOOOOOOOOOO late!
ReplyDelete