Header Ads



ஈரான் முன்னாள் ஜனாதிபதியின் மகளுக்கு சிறைத் தண்டனை




ஈரான் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷெமி ரப்சஞ் ஜானி. இவரது மகள் பயெக் ஹஷெமி. கடந்த 2009-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் மொகமது அகமதி னேஜத் வெற்றி பெற்று 2-வது தடவையாக ஆட்சி பொறுப்பை ஏற்றார். அப்போது, அவர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக கூறி அக்பர் ஹஷெமி ரப்சஞ்சானி தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார். 

அகமதினேஜத் அரசுக்கு எதிராக போராட்டங்களையும், வெப்சைட் மூலம் அவருக்கு எதிராக செய்திகளால் பிரசாரம் செய்து வந்தார். அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டுவதற்காக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அவர் தெக்ரானில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட் டுள்ளார். இவருடன் அவரது ஆதரவாளர்களும் ஜெயிலில் உள்ளனர்.

No comments

Powered by Blogger.