முஸ்லிம் சகோதரர்களே..! தர்மம் உங்களைக் காக்கும்
தமிழில் ஜெஸா
இஸ்லாம் சமயத்தை நிந்தனை செய்யும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் காரணமாக உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம் சகோதரர்களின் மனங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இச்சந்தர்ப்பத்திலே உலகின் அனைத்து நாடுகளிலுமுள்ள முஸ்லிம்கள் முன்சொன்ன திரைப்படத்துக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இங்கு சிறு நினைவூட்டல் ஒன்று அவசியம். அதாவது இது அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட திரைப்படமன்று அமெரிக்க பிரஜையால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்பதாகும். இத்திரைப்படம் இன்றும் இணையத்தில் யு ரியுப் தளத்தில் உள்ளது. எவ்வளவு தான் பெரிய பொலிஸ் அதிகாரம் இருப்பினும் இணையத்துக்கு சென்ற ஒன்றை திரும்ப பெற முடியாது. இணையத்தளத்தை தடைசெய்தாலும் ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்கள் இருந்தால் ஒன்றுமே செய்யமுடியாது. தொழிநுட்பத்தை கடந்து செல்ல தொழிநுட்பத்தால் முடியும். உலகம் பூராவும் தடைசெய்யப்பட்டுள்ள விகிலீக்ஸ் இணையத்தளம் proxy ஊடாக அல்லது மாற்று பிரவேசங்கள் ஊடாக பார்வையிட முடிகிறது. எமது புரிதல் என்னவென்றால் இஸ்லாத்தை நிந்தனை செய்யும் திரைப்படத்தை தயாரித்த நபர் உடனடியாக கைதுசெய்யப்பட்டு இறைநிந்தனைச் (Blasphemy) சட்டத்தின் கீழ் அவனுக்கு வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உலகம் பூராகவுமுள்ள முஸ்லிம் சகோதர்களை இவ்வாறான நடவடிக்கை ஒன்றின் மூலமாகவே அமைதிப்படுத்த முடியும்.
இஸ்லாம் சமயம் என்பது அதனைப் பின்பற்றுபவரால் நூற்றுக்கு நூறு பின்பற்றப்படும் சமயமாகும். அந்த சமயம் மிகவும் ஒழுக்கமானது. அதனால் அதில் ஒருவித கடுமைத் தன்மையும் உண்டு. இஸ்லாத்தை பின்பற்றுபவர் தினத்துக்கு ஐவேளை தொழுவார். அவர் நுகர்வது சமயத்தினால் அனுமதிக்கப்பட்ட உணவுகளை மாத்திரமே. (இந்து சமயத்தின் சில பிரிவினர் நிலத்தின் கீழ் காணப்படும் கிழங்கு வெங்காய வகைகளை உட்கொள்ளமாட்டார்கள்.) பெண்கள் தொடர்பாக அவர்கள் கடைப்பிடிக்கும் பாதுகாப்பு ஒழுங்குகள் மிக கடுமையானவை. அதுமட்டுமன்றி அவர்களின் உடை தொடர்பான சட்டங்களும் கூட கடுமையானவை. தர்மத்தை பின்பற்றுபவர் தர்மத்தினால் காக்கப்படுவார் என்பது முஸ்லிம் தனது சமயத்தை உரிய முறையில் பின்பற்றுவதனால் அதன் மூலம் தான் காக்கப்படுவேன் என்ற பின்னணியை கருத்தில் கொண்டாகும்.
இவ்வாறான சமயத்தை தாக்கும் போது அவர்களுக்கு மிகவும் வலிக்கும். அவர்கள் மிகுந்த கோபத்துடன் நாடுகளை ஆட்டங்காணச் செய்வதற்கு தயாராவது அதனாலாகும். முஸ்லிம் நாடுகள் படிப்படியாக மேற்கத்தேயத்தில் ஊறிப்போவதைக் கண்ட முஸ்லிம் சமூகம் கவலையடைநது அந்த நாடுகளை மீண்டும் புனித இஸ்லாமிய முறைமையினுள் பிரவேசிக்கச் செய்ய ஆரம்பித்துள்ளனர். மேற்கத்தேயத்தில் ஊறிப்போன எகிப்து இன்று நூற்றுக்கு நூறு இஸ்லாமிய பாரம்பரியத்தை பாதுகக்கும் நாடாக மாறியுள்ளது. லிபியாவில் விடுதலைப் பிரிவின் ஒரு பகுதியினர் கடினமான கொள்கைகொண்ட முஸ்லிம்களாவர். தலிபான் அமைப்பை அடிப்டைவாத குழுவாக மேற்கத்தேயர்கள் கூறினாலும் அந்த சமூக அமைப்பினுள் தலிபான் அமைப்புக்கு அங்கீகாரமுள்ளது. மேற்குலகம் எதிர்பார்ப்பது என்வெனில் தம்மைப்போல் உலகின் ஏனைய நாடுகளும் நிர்வானமாக இருக்க வேண்டும் என்றாகும். அவ்வாறில்லாத நாடுகள் தீவிரவாதிகள்: அடிப்படைவாதிகள்: மரபார்ந்தவர்கள்: இறுதியாக யுத்தக் குற்றவாளிகளாவர்.
என்றாலும் நாம் எமது முஸ்லிம் சகோதரர்களிடம் வேண்டுவது, இந்த தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில் வன்முறைகளுக்கு முயற்சிக்காமல் அமைதியாக இருக்கும்படியாகும். இங்கு வாழும் முஸ்லிம்கள் இலங்கை அன்னையின் புதல்வர்களாவர். அந்த புதல்வர்கள் துயரப்படும் போது, போராடும் போது அழிவடைவது இலங்கை அன்னயின் உடமைகளாகும். இலங்கை அன்னையின் காலமாகும். முஸ்லிம் விரோத திரைப்படம் தயாரித்த நிந்தனைவாதியை கைதுசெய்து கடுமையான தண்டனை வழங்கும்படி அமெரிக்க அரசாங்கத்திடம் வேண்டுகிறோம். அமைதிக்கு முன்னுரிமை வழங்குங்கள். தர்மத்தை பின்பற்றுபவர் தர்மத்தால் பாதுகாக்கப்படுவார்.
உண்மையில் மிக எளிய முறையில் எம்மக்களுக்கு புரியும் படி ஆசிரிய தலையங்கம் ஒன்றை எழுதி வெளியிட்ட திவயின நிறுவனத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
ReplyDeleteWell Come Divayina News Editor.I am appreciate your article also thanks lot about your understanding about Muslims and Islam. We are looking More and More good things from you.
ReplyDeleteஉண்மையில் மிக அருமையான ஆசிரியர் தலையங்கம்.நன்றி.இப்படி ஒவ்வொரு ஊடக தொழில் புரிபவர்களும்
ReplyDeleteஇருந்து விட்டால் நம் நாட்டில் வன்முறைக்கோ,இனவாதத்துக்கோ இடமில்லாமல் போய்விடும்.இந்த ஆசிரியருக்கு
எதிர் மாறாக தறுதலை தினக்குரல்ஆசிரியர் நபியின் உருவப்படம் போட்டு ஊடக விபச்சாரம் செய்திருக்கிறான்.இந்த நாயை நீதி மூலம் தண்டிக்க எல்லோரும் ஒன்றுபடுங்கள்.திவயின ஆசிரியர் எழுதியது போல் அரச,பொது விடயங்களுக்கு எவ்வித இடைஞ்சல்களும் இல்லாமல் வருங்கால நடவடிக்கைகளை இன்ஷா அல்லாஹ் அமைத்து கொள்வோம்.
I appreciate your work;divayina
ReplyDeleteஅய்யா மிச்சமா புகழாதீங்க ...அவன் ...மிக்க சுல்சுமமாக துவேசத்தை பரப்புகிறவன் ...
ReplyDeleteஇலங்கையில் சிங்கள மத்தியல் பரப்ப படும் துவேச ....கருத்துகளுக்கு மூல காரணமே அவன்தான்
நிறைய நச்சு கட்டுரைகளுடன்..சமாளிப்பதற்கு சில கட்டுரைகள் ...
ReplyDeleteintenet இல்அதிகமாக மீள பதிவு செய்யப்படும் துவேச கட்டுரைகள் இந்த பத்திரிகையில் இருந்துதான் வருகிறது... So மிச்சம் கவனம்