Header Ads



விமர்சனமும், நியாயப்பாடும் ..!


சிப்ராஸ் சிப்பு 

இன்றைய அரசியல் கள நிலவரப்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்க விளைந்ததின் விளைவாக அதன் தலைமையையும், கட்சியும் பல விமர்சனங்களுக்கு உள்ளகயுள்ளமையினை பத்திரிகைகள், அச்சு இலத்ரியனல் ஊடகங்களைப் பார்கின்றவர்கள் இலகுவில் புரிந்து கொள்ள முடியும் .

ஏன் இந்த முஸ்லிம் காங்கிரஸ் என்ற மிகப்பெரும் முஸ்லிம் சக்தி அரசை ஆதரிக்க விளைந்தது? அதன் மூலமாக எமது சமூகம் அடையப்போகும் நன்மைகள்தான் என்ன? மாற்றுத்தரப்பன தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதல்வர் பதவியினைக் கூட விட்டுக் கொடுத்து நேசக் கரம் நீட்டிய போதும்  ஏன் அதனோடு இணையவில்லை?என   இனோரன்ன  கேள்விகள் எம்முள்ளும், எம் சமூகத்திலும் வியபித்துள்ளதென்றால் அது  மிகையாகாது .

“எந்தவொரு சமூகமும் தன் சமூக   வரலாற்றை அறிந்திருக்கவில்லையோ அந்த சமூகம் அழிவது திண்ணம் “என்ற நபி மொழிக்கிணங்க முஸ்லிம்களின் கடந்த இருபத்தைந்து வருட கால வரலாற்றை சற்று மீட்டிப் பார்ப்பது சாலச் சிறந்ததாகும் .

இலங்கை திரு நாட்டின்   சிறுபான்மைச் சமூகமான தமிழரும், முஸ்லிம்களும் அப்போதைய சிங்கள அரசினால் நசுக்கப்பட்டு ,ஒடுக்கப்பட்ட சூழ்நிலையில் எம் சகோதர இனமான தமிழ் தரப்பு 80களுக்குப் பின்னர் ஆயுதம் ஏந்திப் போராட  எத்தனித்த  வேளை எந்தவொரு எதிர்பார்ப்புக்களோ அல்லது உடன்படிக்கைகலோயன்றி முஸ்லிம்களும் இணைந்து போராடினர் .அவ்வாறு போராடிக்கொன்றிருக்கையிலே தாங்கள் {விடுதலைப்புலிகள் }சில வெற்றிகளை ஈட்டிய போது தனக்கு உதவிய முஸ்லிம்களையும் கொன்றோளித்ததுதான் அதன் மூலமாக ஒன்று பட்ட தமிழ் -முஸ்லிம் சமூகம் இரண்டு பட்டதுதான் வரலாறு ஆகும் .

காங்கிரஸ் ஆதரவளிப்பதால் விளைந்த ,விளையப்போகும் நன்மைகள் என்ன? மறுதலையாக தமிழர் தரப்பை ஆதரிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன ?என்பதை ஒரு விமர்சனப் பார்வையில் ஆராய வேண்டுமே தவிர அவன் சொன்னான் நான் ஆதரிக்கும் கட்சி அல்லது தலைமை சொன்னது எனவே எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று எண்ணிவிடக் கூடாது.

மேலும் கடந்த காலங்களிலே நம் பெரும்பான்மைக் கட்சி எதிர் தரப்பிலே அமர்ந்து எதிர்ப்பு அரசியல் செய்ததினால் அவர்களினால் தமக்கோ அல்லது சமூகத்திற்கோ பெரிதாக எதையும் சாதிக்கமுடியவில்லை ஆகவே அதற்கான வாய்ப்பினை எமது சமூகம் வழங்க வேண்டும் .எம்மக்கள் பிரதி நிதிகள் வெறுமெனே பாராளுமன்றத்தினயும் ,மாகாண சபையினையும் ,ஏனைய மன்றங்களையும் அலங்கரித்தர்கலேயன்றி இதனால் எவ்வித நன்மைகளையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

ஆனால் இன்று தலைமையும், கட்சியும் எதிர்ப்பு அரசியலை கைவிட்டு விட்டு இணக்க அரசியல் செய்கின்றனர் இதனால் முப்பது வருட கால யுத்தத்தினால் சிதைவுற்ற கிழக்கு மாகானத்தினையும்எமது சமூகத்திற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ,சுகாதாரச் சேவைகள் ,அனைவருக்கும் வேலை வாய்ப்புக்கள் ,பள்ளி வாயால் உடைப்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் ஏனென்றால் இன்று அரசின் குடுமி கிழக்கு மாகாணத்திலே முஸ்லிம் காங்கிரஸ் வசமாகியுள்ளது .இவர்கள் அரசை விட்டு விலகுவார்களாயின் ஆட்சியை இழக்க நேரிடும் என்பதற்காக எமது எல்லா வகையான கோரிக்கைகளையும் நிறைவேற்றியாக வேண்டிய சூழ்நிலையில்தான் இந்த அரசு இருக்கின்றது. எனவே எமது கோரிக்கைகளை இலகுவில் நடைமுறைப்படுத்தலாம் .

மறுதலையாக அரசைப் பகைத்துக் கொண்டு தமிழ் தரப்போடு ஆட்சியமைப்பார்களாயின் அவர்களின் கோரிக்கைகளான வடகிழக்கு இணைப்புக்கு உடன்படுவதோடு அதன் காரணமாக நாம் பெற்றிருக்கின்ற முஸ்லிம் முதலமைச்சர் என்கிற பதவி வெறும் எட்டாக் கனியாகவே இருந்திருக்கும்.மேலும் எந்த ஜெனிவாவிலே அரசுக்கு ஆதரவாக முஸ்லிம்களாகிய நாமும் முஸ்லிம் தலைவர்களும் பாடுபட்டார்களோ அதட்கேதிராக செயட்படவேண்டி ஏற்படும் அதேவேளை நாம் தேசத்  துரோகிகளாகவும் ,சிங்களவருக்கேதிரகவும் செயட்படுபவர்களாக காட்டப்படுவோம் இதனால் வட கிழக்குக்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்கள் பல வகையான அச்சுறுத்தலுக்கும்,பலிவாங்குதளுக்கும் உள்ளக நேரிடும் .

மேலும்  தமிழ் தேசியக் கூடமைப்போடு இணைந்து அட்சியமைப்பதினால் எம்மால் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை மாற்றமாக தமிழ்த் தரப்பும் அவர்களின் எஜமாங்களும்தான் நன்மையடைவார்களன்றி வேறில்லை. நாம் தமிழ்த் தரப்போடு இணைவதனால் கிழக்கு மாகாணத்திட்கு எவ்வித நிதி உதவிகளோ அல்லது    நல்ல திட்டங்களோ வழங்கப்படமாட்டது. மாற்றமாக முஸ்லிம்களை அழித்தொழிப்பதகான திட்டங்களை அரசு விரைவு படுத்தும் ஆனால் நாம் அரசுக்குள் தீர்மானிக்கின்ற சக்தியகவிருக்கின்ற போது எம்மால் இதனைத் தடுக்க முடியும்.

.மேலும் இந்த தமிழ் தேசியத்தை எவ்வாறு எம்மால் நம்பமுடியும் ?ஏனென்றால் சமாதனப் பேச்சுவார்த்தைக் காலத்தில் முஸ்லிம் தனித்தரப்பைக் கூட கொடுக்க மறுத்த இவர்களா எமது உரிமைகளைத் தருவார்கள் ,எவ்வாறு நாம் நமது ஆட்சியினை ஒப்படைப்படைக்க முடியும் .எனவே மேலே ஆராயப்பட்ட சாதக ,பாதகங்களுக்கு இணங்க நமது தரப்பு இன்றைய சூழ்நிலையில் அரச தரப்போடு இணைவதே   மிகப்பொருத்தம் என நினைக்கின்றேன் .



3 comments:

  1. Dear Sippu,
    We can undestand that you are a strong SLMC supporter.
    Finally ,If SLMC want to supprot UPFA to form EPC, what is the use of criticising the Gvt and it's policy?
    If SLMC contested the election under UPFA banner,there would be 24~25 muslim members in the EPC.
    Whose mistake this? Rauff Hakeem think that he can always turn the table over but time will reply to him soon.

    ReplyDelete
  2. சிப்பு சார், நீங்கள் பிழையான கருத்தை முன்வைத்துளீர்கள்.. TNA உடன் தான் கூட்டுச் சேர வேண்டிய அவசியம் கிடையாது. முதலில் நமது தேவை எது என்பதை எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டும்...!!!...????? எதுவும் இலகுவாக கிடைக்காது, தியாகத்தின் மூலம் தான் கிடைக்கும்.

    அடிமைகளுக்கு அறிவுரையும், ஹக்கீம் அவர்களினதும், அவரது அடிவருடிகளினதும் சுயலாபத்தின் முடிவுகளை நியாயப்படுத்தியும், இந்த கட்டுரை அமைந்துள்ளது. கடந்த 15 வருட காலமாக இவர்களினால் சமூகத்துக்கு கிடைத்த நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். அடுத்த கட்டுரையில் நல்லதொரு ஆக்கபூர்வமான கருத்தை எதிர் பார்க்கிறோம்... நன்றி

    ReplyDelete
  3. Dear Kumaran ,
    What is wrong that Sipras Sippu to be a SLMC supporter. What is wrong in that he expain his views. He has writen some facts about the difficulties faced by his community during the war.There is nothing wrong in that.
    We thought the Tamil community has changed , and believed all what Sambanthan said and the Tamil daily paper editorials . But soon the SLMC announced its decision they started attacking the SLMC. This shows their short sight . This is not healthy approach and never going to build a understanding between both communities .

    ReplyDelete

Powered by Blogger.