'பிறர் கொண்டு வரும் சொக்லேட்டுக்குப் பின் போக வேண்டாம்' - அமைச்சர் அதாஉல்லா
ஜே.எம். வஸீர்
பொத்துவில் பிரதேச சபை இவ்வளவு ஆண்டு காலமாக ஒரு நீத்துக் கட்டிடம் ஒன்றிலேயே இயங்கி வந்தது. ஒரு புதிய கட்டிடத்தை அமைத்துத் தருமாறு பொத்துவில் பிரதே சபை தவிசாளர் சகோதரர் வாசித், தேசிய காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளருமான பதுர்கான் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா டம் வேண்டிக் கொண்டதற்கமைய தனது அமைச்சின் 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நவீன மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா னால் நடப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்;.எம். அதாஉல்லா,,
அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் மாத்திரம் வருவார்கள். வந்து பல விடயங்களைச் சொல்வார்கள். தேர்தல் முடிந்த பின் இன்னுமொரு தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரே அவர்களைக் காண முடியும். ஆனால் தேசிய காங்கிரஸ் அவ்வாறில்லை. தேர்தல் காலத்திலும் வருவோம், தேர்தல் முடிந்து சூடு ஆறுமுன்னரும் இன்று வந்திருக்கின்றோம். தேர்தல் காலத்தில் கூட நான் இந்த அடிக்கல்லினை நட்டிருக்கலாம் எனது அமைச்சினூடாகவே இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நான் எப்போதும் அடிக்கல் வைக்கலாம். இருந்தும் தேர்தல் காலத்தில் உங்களது தவிசாளர் வாசித், முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர் என்பதனால் அவர் அவரது கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தார். மாறாக அன்று நான் தேர்தல் காலத்தில் பிரதேச சபைக் கட்டிடத்திற்கு கல்லை வைக்க வந்திருந்தால் அவரும் அக்கூட்டத்திற்கு சமூகமளித்திருக்க வேண்டும். அத்துடன் நான் அன்று வெற்றிலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களை சொல்லிருக்கவும் வேண்டும். அவரை மேடையில் வைத்துக் கொண்டு நான் வெற்றிலைக்கு வாக்களிக்க சொல்லுவது சரியில்லை என்பதற்காகவே நான் அடிக்கல்லினை தேர்தல் காலத்தில் வைக்கவில்லை. அவ்வாறு செய்து தவிசாளர் வாசித் அவர்களை சங்கடப்படுத்தவும் நான் விரும்பியிருக்கவுமில்லை.
பொத்துவில் பிரதேசம் இன்னும் அபிவிருத்தியில் தவழுகின்றது. பொத்துவில் மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும். நீங்கள் யாருக்கோ வாக்களிக்கின்றீர்கள் அபிவிருத்திகளை நான் செய்ய வேண்டும். இருந்தும் அபிவிருத்திகளை அல்லாஹ்வுக்காகவும் உங்களுக்காகவும் செய்கின்றேன். பொத்துவில் பிரதேச சபைக் கட்டிடத்திற்குள் நான் முதலாவதாக சென்றபோது ஆச்சரியப்பட்டேன் இந்த நூற்றாண்டில் இவ்வாறானதொரு நீத்துக் கட்டிடமா? என்று எனது மனம் வேதனைப்பட்டது. அன்றைய தினமே நான் ஒரு புதிய கட்டிடத்தை அமைத்துத் தருவேன் என்று உறுதியளித்தேன்.
இன்று அல்ஹம்துலில்லாஹ் எனது அமைச்சினூடாக அதற்கான பணத்தினையும் ஒதுக்கி அடிக்கல்லினையும் நட்டிருக்கின்றேன். இதுதான் தேசிய காங்கிரஸ். நாங்கள் அரசியலுக்காக மக்களை ஏமாற்றுவதில்லை, அரசியலுக்காக பொய் சொல்லுவதுமில்லை. செய்வதை தேசிய காங்கிரஸ் சொல்லும், சொல்வதை தேசிய காங்கிரஸ் செய்யும் இதுதான் தேசிய காங்கிரஸிற்கும் வேறு கட்சிகளுக்குமுள்ள வேறுபாடாகும். பாருங்கள் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பள்ளிக்கதைகளையும், உடைத்த கதைகளையும் வைத்து மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி பாரிய பொய்களையும் சொன்னார்கள் அதற்காக நீங்கள் ஏமாந்துதானே போனீர்கள். உங்களுடைய தகப்பன் உங்களுக்காக இரவு பகலாக உடம்மை வருத்தி உழைத்து உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் தந்து கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ வந்து எவனோ தந்த ஒரு சின்ன சொக்லேட்டுக்குப் பின்னால் செல்வதாயின் தகப்பனின் நிலை என்ன? தகப்பன் எதற்காக உடம்மை வருத்தி உங்களுக்காக உழைக்க வேண்டும்? இருந்தும் தகப்பன் என்பவன் அதற்காக தனது பிள்ளையை கோபித்துக் கொள்ள மாட்டான் அதுதான் உண்மையான பாசமுள்ள தகப்பன். அதேபோன்றுதான் பொத்துவில் மக்களுடன் எனக்கு எந்தக் கோபமுமில்லை. அதனை இன்றைய பிரதேச சபை கட்டிடத்திற்கான கல்நடும் விழா சாட்சி கூறும்.
பொத்துவில் மக்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள் இன்னும் நீங்கள் அரசியலில் அனாதையாக்கப்படப் போகின்றீர்களா? பொத்துவில் மண்ணுக்கு எவ்வளவு பிரச்சினைகள் உள்ளது நான் உங்களது பல விடயங்களை திட்டமிட்டு உங்களுக்காகவும் செய்ய வேண்டுமென்று நான் கனவு கண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது நீங்கள் யார் பின்னாலேயோ செல்கின்றீர்கள். இனியும் பொத்துவில் மக்கள் இழப்பதற்கு ஒன்றுமேயில்லை. இன்று நீங்கள் மாகாண சபை உறுப்பினரையும் இழந்திருக்கின்றீர்கள். பிறர் உங்களது மண்ணை தீர்த்தக்கரையாக பாவித்திருக்கின்றனர். இனிமேல் நீங்கள் வரலாற்றில் நடந்த பிழைகளைச் செய்ய வேண்டாம். தேர்தல் வந்தால் உங்கள் வாக்குகளை அள்ளிக் போடுகின்றீர்கள். அள்ளிப் போட்டவர்கள் உங்களுக்கு செய்தது என்ன? பொத்துவில் மக்கள் வாக்குகளை அள்ளிப் போடாவிட்டாலும் அதாஉல்லா உங்கள் மண்ணுக்கு நிறைய செய்திருக்கின்றான். மாகாண அமைச்சர் உதுமாலெப்பையும் செய்திருக்கின்றான். இன்னும் இந்த மண்ணுக்கு நாங்கள் நிறைய அபிவிருத்திகளை செய்யவுமிருக்கின்றோம். நீங்கள் வாக்குப் போடாவிட்டாலும் அதாஉல்லா அல்லாஹ்வின் அருளால் என்றும் வெற்றிபெறுவான். இனிமேல் வாக்குகள் போட வேறு கட்சியும், அபிவிருத்திகள் செய்ய அதாஉல்லாவும் என்ற நிலைப்பாட்டை நிறுத்திவிட்டு இந்தத் தவறுகளை தொடர்ந்தும் செய்யாமல் வெற்றியாளர்கள் பின் நிi;று வெற்றிபெறுங்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொன்றைச் சொல்லி ஏமாற்றி உங்கள் வாக்குளைப் பெறுகின்றது. அவர்கள் உங்களுக்காக செய்தது எதுவும் கிடையாது. அவர்கள் நமது பிரதேசத்திற்கு செய்தது ஒன்றைச் சொல்லுங்கள் ஒன்றுமே கிடையாது. இனியும் அவர்களது பொய்களுக்கு ஏமாற வேண்டாம்.
இறுதியாக சொல்கின்றேன் கிழக்கு மாகாண சபையில் நானும் சகோதரர் றிசாட் பதியுத்தீன் அவர்களும் 6 ஆசனங்களை வைத்துக் கொண்டிருக்கின்றோம். இதனை அனைத்து தரப்பினருக்கும் ஞாபகம் செய்கின்றோம். சகோதரர் உதுமாலெப்பை அவர்களுக்கு அமைச்சுப் பதவி கொடுத்தால் பார்ப்போம் என்றார்கள். அல்ஹம்துலில்லாஹ் அவர் இன்று அமைச்சராகவிருக்கின்றார். இதுதான் தேசிய காங்கிரஸின் சாணக்கியம். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமான இன்னும் பல விடயங்கள் இருக்கின்றது. அதனை இவ்விடத்தில் நான் தவிர்த்துக் கொள்கின்றேன். நடந்தது என்ன என்ற உண்மையை மிக விரைவில் நாம் மூதூரில் இருந்து பொத்துவில் வரைக்கும் உலகறியச் சொல்லுவோம் என்று அமைச்சர் தனதுரையில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, பொத்துவில் பிரதேச சபையின் தலைவர் முஹம்மட் வாசித், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினரும் அமைச்சரின் அமைப்பாளருமான ஏ. பதுர்கான் மற்றும் பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஏனைய உறுப்பினர்களும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
ம்ம்ம்ம் அவர் நிறையவே செய்திருக்கின்றார்... பொத்துவிலில் 10 இளைஞர்களின் கொலைக்கும் யார் காரணம் என்று கண்டுபிடித்தார், பொத்துவில் மக்களை வேளாண்மை செய்யாமல் அந்த வயல்களில் தென்னை மரம் நாடுமாறு அறிவுரை சொன்னார்,சுனாமியின் போது பொத்துவில் பக்கம் எட்டிப்பார்பதே இல்லை என்று விடாப்பிடியாய் இருந்தார்,பொத்துவில் பஸ் டிப்போவின் வருமானத்தில் அக்கரைப்பற்று டிப்போ ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் ஆச்சரியத்தை அறிமுகம் செய்தார்,யார் யாரோ பணம் ஒதுக்கி கட்டிய கட்டிடங்களை திறந்து வைத்தார்....இன்னும் எத்தனை எத்தனையோ .....
ReplyDeleteஇவர் அடிக்கடி பொத்துவில் வருவது உண்மைதான் ஆனால் பொத்துவிலில் TRI -Star , Sea - Shore , stardust ,Pacific , Siam View , Roccos போன்ற ஹோட்டல்கள் இல்லாவிட்டால் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் வருவார்.
அடுத்து...
நீர் வழங்கள் அதிகாரசபை நிர்வாக கட்டிடத்தை கட்டுவதற்கான நிலத்தை கொள்வனவு செய்வதற்கான பணத்தில் ஒரு பகுதியை நீர் வழங்கள் அமைச்சினால் தந்து உதவினார் ( அந்த நேரத்தில் நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சராக இருந்ததினால்.- யார் அந்த அமைச்சராக இருந்தாலும் அதனை செய்தே ஆகவேண்டும்.
தற்போது மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக இருப்பதினால் பிரதேச சபை கட்டிடத்தை கட்ட உதவுகின்றார் அவ்வளவுதான்.
ஆனாலும் அமைச்சர் அதாவுல்லாஹ்விற்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்..
அதேநேரம் முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை ஒன்றும் கிடைக்கவில்லை சேவை செய்யவில்லை ஏற்றுக்கொள்கிறோம்... ஆனால் தற்போது அவ்வாறு சொல்ல முடியாது... இன்னும் SLMC அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பொத்துவிலை புறக்கணித்துவிட்டு பொத்துவில் காணி,மீனவர் பிரச்சனை என்று பம்மாத்து காட்டினால் எங்களுக்கும் தெரியும் SLMC கு என்ன பண்ணவேண்டும் என்று.
நன்றி அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களே..!
ReplyDeleteஇதனைவிட மக்களுக்கு பிரயோசனமாககூடியவாறு எதாவது செய்திருக்கலாம்..
இவர்கள் ( பிரதேசசபை உறுப்பினர்கள்) நீத்துப்போன கட்டிடத்தில் இருந்தால் ஒன்றும் நாறிப்போய் விடமாட்டார்கள்...
அன்பின் முபாரக் தாகா அவர்களே,
ReplyDeleteநான் அதாவுல்லாவுக்கு வக்காலத்து வாங்க வரவில்லை ஆனால் உங்கள் காழ்புணர்ச்சியின் ஆழம் உணர்ந்து ஆடிப்போனேன். காரணம் இரண்டு தடவை கொம்மென்ட் எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் ஒருவர் கூச்சலிட்டு மக்கள் குரலாகாது. போதும் விடுங்கள் அப்பாவிப் பொத்துவிலுக்கு ஏதாவது ஒரு நலவு நடக்கட்டும்.
உங்கள் தலைவரைப் பார்த்துக் கொண்டிருந்ததால்; பொத்துவிலின் நிலைமை "இலவு காத்த கிழிதான்"
அமைதி பெறுங்கள் ஆழச் சிந்தியுங்கள்.
உங்கள் சகோதர கிழக்கான்