Header Ads



லெபனானில் உள்ள இலங்கையர்களின் கவனத்திற்கு..!

லெபனான் வடக்குப் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் மோதல் காரணமாக எந்த ஒரு இலங்கையருக்கும் பாதிப்பு இல்லை என லெபனானில்  உள்ள இலங்கை தூதுவர் ரஞ்சித் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சில சமயங்களில் அவசர நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் விசேட நடவடிக்கைகளுக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சிரியாவில் இடம்பெற்று வரும் மோதல்கள் தற்போது வடக்கு லெபனான் எல்லைப் பகுதிக்கும் பரவியுள்ளது. லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக லெபனானில்  உள்ள இலங்கை தூதுவர் ரஞ்சித் குணரத்ன விளக்கம் அளித்தார்.

கடந்த தினங்களாக ஏற்பட்டிருக்கும் இந்த மோதல்களாலும் தற்போது இடம்பெற்று வரும் மோதல்களாலும்  எந்தவொரு இலங்கையருக்கும் பாதிப்பு இல்லை. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படுமாயின் அது தொடர்பில் தூதுவராலயத்திற்கு அறிவிக்கும்படி அனைவரிற்கும் அறிவுறுத்தி உள்ளோம். அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் நாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள தயாராக உள்ளோம். இதற்கு மேலதிகமாக லெபனானில் உள்ள ஏனைய நாட்டு தூதுவராலயங்களுடன் இணைந்து, லெபனானில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் லெபனானில் உள்ளவர்களை அவர்களது சொந்த  நாடுகளுக்கு அனுப்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

No comments

Powered by Blogger.