எந்தப் பள்ளிவாசலாவது உடைக்கப்பட்டதை காட்டுங்கள் - நான் ராஜனாமா செய்ய தயார்
TM
எம்.பரீத்
'இலங்கையில் உள்ள எந்தப் பள்ளிவாசலிலுள்ளவர்களாவது அப்பள்ளி உடைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னால் நான் அனைத்துப் பதவியையும் விட்டு இராஜினாமாச் செய்வேன். இந்தச் சவாலை ஏற்று என்னை எந்தப் பள்ளிக்காவது கூட்டிச் செல்லுங்கள்' என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் நேற்று சவால் விடுத்தார்.
கிண்ணியா நகரசபை மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கிழக்கு மாகாண சபை திருகோணமலை மாவட்ட ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளர்களான நஜீப்- மஜீத், ஆதம்பாவா தௌபீக் ஆகியோரை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“பௌத்தர்கள் இருக்கின்றார்கள், பௌத்தர்களுக்கு விரோதமாக மஞ்சள் காவியுடை உடுத்த ஒரு குழுவினர் வந்து அவர்களுடைய விகாரைகளுக்கு விரோதமாக செயல்படுகின்றார்கள். அவர்களுடைய தர்ம போதனைக்கு விரோதமாக செயல்படுகின்றனர். பௌத்த பிக்குமார்கள் சிலர் அதே போன்று எங்குமிருக்கலாம். அதன் பின்னணியைச் சொல்லுகின்றேன். அன்று தம்புள்ளையில் தேரர் வந்து இந்தப் பள்ளியில் தொழக்கூடாது என்று சொன்ன தகவல் வந்தது. அன்று நாங்கள் எல்லோரும் ஒன்றாக கூடினோம். அதில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, அமைச்சர்களான றிஷாட் பதியுதீன், ஏ.எல்.எம்.அதாவுல்லா, பிரதி அமைச்சர்களான எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ், பசீர் சேகுதாவுத் (அவர் இப்போ எங்கே இருக்கின்றார் என்று எனக்குத் தெரியாது தேடிப் பாக்கின்றேன் என் கைக்கு அகப்பாட்டால் உங்களுக்குக் காட்டுகின்றேன்), ஏ.ஆர்.எம்.அப்துல் காதர், பைஸர் முஸ்தபா எல்லோரும் கூடினோம்.
அதிலே நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஓர் ஒப்பமிட்டோம். இப்படியொரு சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இதை நீங்கள் ஜனாதிபதியிடம் சென்று தலையிட்டு இதனை தீர்த்திருக்கின்றீர்கள். உங்களுக்கு நன்றி. ஆனால் அந்தப்பள்ளி வாசலுக்கு உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாங்கள் ஒரு கடிதம் எழுதினோம். எல்லோரும் ஒப்பமிட்டு. அதில் இன்னொருவரும் ஒப்பமிட்டார். அவர்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம். இந்த உண்மையை சொன்னார்களா? சொல்வார்களா? உண்மையை தெரிந்தவன் நான், இருந்தவன் நான். ஆகவேதான் உங்களுக்கு விரிவாகச் சொல்லுகின்றேன். இப்படியிருக்க எப்படிச் சொல்வார்கள் பள்ளிவாசலை உடைத்ததாக.
இதனால்தான் நான் றவூப் ஹக்கீமிடம் ஒரு சவால் விடுத்து வருகின்றேன். என்னைக் கூட்டிச் செல்லுங்கள், இலங்கையில் எந்தப் பள்ளிவாசலுக்காவது. ஒரு பள்ளியாவது உடைக்கப் பட்டிருப்பதாகச் சொன்னால் நான் அனைத்து பதவியை விட்டு இராஜினாமாச் செய்வேன். நீங்களும் இதைத்தான் செய்ய வேண்டும். கூட்டிச் செல்லுங்கள் எந்தப் பள்ளிக்காவது.
தம்புள்ள பிரச்சினையை சொன்னாங்க. பொலிஸ்ஸை அனுப்பினோம். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கக் கோன் போன்றவர்கள் சென்று நேரடியாக பிரச்சினையை முடித்து வைத்தோம்.
அது முடிந்த பிறகு இன்னும் கொஞ்ச நாளுக்குப் பிறகு குருநாகலில் வலல்லவ பொலிஸ் பரிவில் தெதிறு ஓயா கம பள்ளியை உடைக்கின்றனர் என்றார்கள். எங்கேடா உடைக்கின்றான் பள்ளி வாசலை? உடைத்தால் பார்த்துக் கொண்டாயிருக்கிறீர்கள்? எடுடா ஒரு வாளை, அவனும் வாளோடு வரட்டும் பைட் பண்ணுங்கள்.
குருநாகலில் பள்ளிவாசலில் பொலிஸ் படை, விமானப்படை, மற்றப் படைகள் எல்லாப் படைகளும் சென்று அவர்களை விரட்டியடித்தாச்சு. என்னவென்றால் பிரித் ஓதுகின்றார்கள். ஓதிட்டுப் போகட்டும் பரவாயில்லை. ஆனால் பள்ளி உடைக்கவில்லையே, அடிக்கவில்லையே எப்படியும் அன்று இரவே பள்ளியில் தொழுகையில் ஈடுப்பட்டார்கள்.
தெஹிவளையிலும் இப்படியான சின்ன சம்பவம்தான் நடந்தது. அங்கே வீட்டை ஒரு பள்ளி வாசலாக நாங்களே மாற்றிக் கொண்டோம். நாங்களும் போவோம், பெண்களும் போவார்கள். அங்கே தராவிஹ் போவோம். இப்படியாக தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதும் ஜும்ஆ கிடையாது.
ஆனால் குறுக்கு நாநாமார்கள் கையஸ் வேன், பெரிய வேன், கொரியவேன், ஜப்பான் வேன் என அனைத்தையும் நடுப்பாதையில் வைத்து விட்டு தராவிஹ் தொழப் போகின்றார்கள். நான் இது தப்பென்று. பாதையிலே போகின்ற ஏனைய மக்களுக்கு இடைஞ்சலாக அங்கே நீ உன்னுடைய வாகனங்களையெல்லாம் நிறுத்தி விட்டு பள்ளிவாசலில் தொழுவது சரியா? இதுதான் நடந்தது.
தெஹிவலைச் சம்பவம் நடந்த அந்த வீடு பள்ளியில் சூடு தாங்காமல் இருந்தது. ஆனால் இப்போது குளு குளு பள்ளிவாசல். முழுமையாக எயார் கண்டிசன் போடப்பட்டிருக்கிறது. இதனை இவர்கள் சொன்னார்களா ?
தம்புள்ள பிரச்சனைகளை நாங்கள் தவிர்த்தோம். அந்த ஆவேசத்தை ஏனைய பள்ளிவாசல்களிலும் இடம்பெற விடாமல் தவிர்த்தோம். இதன் மூலம் முழு இலங்கையிலும் பரவ இருந்த பெரியதொரு கலகம் நிறுத்தப்பட்டது. இன மோதல் நிறுத்தப்பட்டது.
யாழ்பாணத்திலிருந்து 25 ஆயிரம் பேர்களை - எங்கள் அன்பு மாதாக்களை, தாய்மார்களை, குழந்தைகளை உடுத்திய அரைகுறை துணிகளோடு விரட்டினார்களே அந்தப் புலிகளுடைய ஊது குழலாக இருக்கின்ற பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் சேர்ந்து இந்த மாகாண முதலமைச்சர் பதவியை பெறுவதாக சொல்லுகின்றார். மன்னாரிலும், யாழ்ப்பாணத்திலும் விடுதலைப் புலிகளால் 79 பள்ளிவாசல்கள் உடைத்து தகர்த்து தரைமாக்கப்பட்டிருக்கின்றன. ஹதிஜா வித்தியாலயம் உலகப் புகழ்பெற்ற அமானியா பல்கலைக்கழகத்தை போன்ற சுமானியா பாடசாலைகளை உடைத்தார்கள்.
இந்த அரசாங்கத்தில் ஒரு பள்ளிவாசலும் உடைக்கப்படவில்லை, உடைக்கவும் விடவும் மாட்டோம் அந்த மியன்மார் போன்று. இந்த அசம்பாவிதம் இந்த ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கூட்டுச் சேர்ந்திருக்கின்றது. இது நியாயமா? ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் இங்கொன்றும் வட மத்திய மாகாணத்தில் இன்னொன்றுமாக - இங்கே மரம், அங்கே வெற்றிலையென்றும் பேசுகின்ற விடயங்கள் எல்லாவற்றையும் எல்லோருக்கும் தெரியும்..” என்றார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம, அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் கடற்தொழில் நீரியல் வளத் துறை பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, புத்தசாசன மத விவகார பிரதி அமைச்சர் எம்.கே.டீ.எச்.குணவர்த்தன, பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா, ஜனாதிபதியின் முஸ்லிம் சமய ஆலோசகர் கலீல் மொளவி போன்ற பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்கள்.
நமது உலமா சபை உரிதியாக இருந்தால் இவனுகளைபோன்ற துப்புக்கெட்ட அரசியல் வாதிகளின் கழுத்தை பிடிக்கலாம். என்ன செய்ய எமது சமூகம் அரசியலுக்காக இவற்றைப் பொருத்துத்தான் ஆகவேண்டும. யாரை யாரும் விமர்சிக்கலாம், ஆனால் பள்ளிவாயல் விடயங்களில் அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள்.
ReplyDeleteAnuradhapura thakiya mosque already destroyed by monks,so minister please resign your work!
ReplyDeleteசூடு, சொரணை, மானம், வெட்கம் இதெல்லாம் விக்கிற சுப்பர் மார்க்கட் ஏதாச்சும் இருக்கெண்டு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கோ. மனிசருக்கு அதெல்லாம் இல்லாமப் போய் ரொம்ப நாளாச்சு. கொஞ்சம் கொஞ்சமாவது வாங்கி வெச்சுக்கட்டும்.
ReplyDeleteதூ.... இதெல்லாம் ஒரு பொளப்பு.
aswer go to dambulla masjid look at that we have vidoe of masjid your are lieyer
ReplyDeleteமுல்லேரியாவில்சிலமனநோயாளிகளைகாணவில்லையாம் மனநோயாளிக்குஏதுசூடு,சொறன,மானம்,வெட்கம்.
ReplyDelete